ஞாயிறு, 27 மார்ச், 2016

கோடைக்கு ஏற்ற பானம் பதனீர்

கோடைக்கு ஏற்ற பானம் பதனீர்

பதநீரின் மருத்துவ குணங்கள் :
நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள்.
தொழு நோயை நீக்கும் பதநீர் :
நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .
மாதவிடாய் தடை :
மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .
இரத்த கடுப்பு :
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .
பதநீர் :
இந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள் :
1. சக்கரை 28 .8 கிராம்
2. காரம் 7 .௨ கிராம்
3. சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
4. இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
5. பாசுபரசு 32 .4 மி.கிராம்
6. தயமின் 82 .3 மி.கிராம்
7. ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
8. அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
9. நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
10. புரதம் 49 .7 மி.கிராம்
11. கலோரிகள் 113 .3 மி.கிராம்
இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.
பாலுணர்வை அதிகரிக்க :
இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்.
பனை மரத்தில் கிடைக்கும் பதநீரை பனை மர ஓலையில் ஊற்றி அதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும்கூட இந்த பானம் தாகத்தை தீர்த்து உடலுக்கு குளிமையை ஏற்படுத்தி வலிமையை சேர்க்கும் அளவுக்கு ஆற்றல் படைத்தது.
மேலும் இந்த பதநீரையும் நுங்கையும் கலந்து குடித்தால் முகத்தை அழகுற வைக்கவும் மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் கண் பார்வை அதிகரிக்கவும் செய்கிறது. சிறு குழந்தைகளுக்கு நுங்குகளை சிறிதாக நசுக்கி கொடுக்க வேண்டும் அப்போது தான் எளிதில் ஜீரணமாகும்.

தொகுப்பு ;வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக