புதன், 16 மார்ச், 2016

சித்தர்களின் ஜீவ சமாதிகள்


சித்தர்களின் ஜீவ சமாதிகள் 


ஜீவசமாதி என்றால் சித்தர்கள், யோகிகள், ஞானிகள், போன்ற உயர்ந்த தவ நெறியாளர்கள் உடலை அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி என பொதுவாக அழைக்கப்படுகிறது.
     ஞானியர் மேலான தவம் மற்றும் கடுமையான ஒழுக்க நெறிகளை பின்பற்று வதன் மூலம் தமது உடலையும், உயிரினையும், தூய்மையாக பேணி வருகிறார்கள், இன்னும் தீர்க்கமாக சொல்வதானால், திருமூலரின் திருமந்திரத்தின்படி " உள்ளம் பெருங்கோவில், ஊன்உடம்பு ஆலயம்" என்பதற்கிணங்க உடலையும், உயிரையும் புனிதமான கோயிலாக கருதி தனித்துவமான வாழ்வியல் கூறுகளை அனுசரிக்கிறார்கள், தன்னை முழுவதும் இறைவனோடு ஐயக்கியப்படுத்திக் கொள்கிறார்கள், இதனால் கோவிலும் புத்துணர்வு பெறுகிறது. கோவிலால் இவர்களின் அருளான்மையும் வளர்கிறது.
          இந்து ஞான மரபில் இந்த ஜீவ சமாதிகள், கோவில்களுக்கு இணையாக புணிதத்தன்மை உடையவையாக கருதப்படுகிறது. சிறப்பு வாய்ந்த கோவில்கள் அநேகங்களில் யாதேனும் ஒரு ஞானியின் ஜீவசமாதி அமையப்பட்டுள்ளதை நாம் இன்றளவும் காணலாம். இவர்களால் கோவிலுக்கு புத்துணர்வும், கோவில் கொண்டுள்ள இறைவர்களால் இவர்களுக்கு பெருமையும் கொண்டு சீவசமாதிகள் சிறப்பு அமையப்பெற்று உள்ளன என்பதை நாம் அறியலாம்,    
           ஜீவசமாதிகள் அமைந்திருக்கும் இடத்திற்கு நாம் சென்றால் அனைத்தையும் மறந்த ஏகாந்த உணர்வு உண்டாகுவதைக் உணரலாம்.
  மனம் அமைதியில் திளைக்கிறது,
 சிலிர்ப்பூட்டும் அதிர்வளைகளை உணரலாம்,
 நோய் உற்றவர்களின் நோய் குணமாகிறது
 வேண்டுதல்கள் நிறைவடைகிறது
வாழ்வில் மாற்றம் உண்டாகிறது.

சித்தர்கள் எத்தனையோ பேர் இருந்து இருக்கலாம், ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சித்தர்களே வெளி உலகத்திற்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் பெயர்களும் ஐக்கியமான தலங்களும் பிரபலமாகி நாம் இன்றளவும் அவர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டால்அவர்களின் நல்ஆசி நமக்கு கிடைத்து ஒரு தெய்வீக உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறியலாம், அதில் முக்கியமான ஜீவசமாதிகள் பழனி முருகன் கோவிலில் அமைந்துள்ள போகரின் ஜீவசமாதி, சிதம்பரம் திருமூலரின் சமாதி, மதுரையில் சுநதரானந்தர் சமாதி, திருப்பரங்குன்றம் மச்ச முனிவர் சமாதி, பாம்பாட்டி சித்தர் சங்கரங்கன்கோவில், கரூர் கரூர் சித்தர், திருப்பட்டூர், பதஞ்சலி, வியாக்ரபாதர், சிதம்பரம் ...திருமூலர், திருச்செந்தூர், மூவர் சமாதி, திருவண்ணாமலையில் முக்கியமாக ரமணர், சிவவாக்கியர், அருணகிரியார்,மற்று்ம் நூற்றுக்கணக்கானோர் சமாதி யடைந்துள்ளனர், இவர்களால் கோவிலுக்கு புத்துணர்வும், கோவில் கொண்டுள்ள இறைவர்களால் இவர்களுக்கு பெருமையும் கொண்டு சீவசமாதிகள் சிறப்பு அமையப்பெற்று உள்ளன என்பதை நாம் அறியலாம்,
                சித்தர் ஐக்கியமான தலங்களில் உள்ள அவர்களது ஜீவ சமாதிகளை வழிபடும் போது நம் குறைகளை நிச்சயம் தீர்ப்பார்கள், என்று நம்பப்படுகிறது. மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஆற்றல் பெற்ற சித்தர்கள் இரண்டு மூன்ற இடங்களில் சமாதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஆராய்ந்தால் அதற்கு விடை வருகிறது. சித்தர்கள் மூச்சை அடக்கி சிலகாலம் மண்ணுக்குள் தங்கிஇருந்து விட்டு வந்தால், அரிய சக்தி கிடைக்கும் என்று எண்ணினார்கள். இதனால் அவர்கள் பலமுறை அந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள், உதாரணமாக பாம்பாட்டி சித்தர் மருதமலை, சங்கரன்கோவில் விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியானதாக கூறுகிறார்கள், மூன்று முறை மண்ணுக்குள் இருந்த இடங்களே இந்த மூன்று சமாதிகளும், மண்ணில் பல ஆண்டுகள் தவம் இருக்கும் போது உடல் அழுகிவிடாதா? காடுகளில் தனியே தவம் இருக்கும்போது மமிருகங்கள் தின்றுவிடாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கைதானே? மண்ணுக்குள் இருந்தாலும் மண் தீண்டாததால் உடல் அழுகாது, காட்டில் தவத்தில் இருக்கும் போது காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தாலும் உடலில் சூடு ஏறாது, கொடிய விசப்பாம்புகள் தீண்டினாலும், உடலில் விசம் ஏறாது, காட்டாற்று வெள்ளம் வந்தாலும், தவம் செய்யும் சித்தர்களை விட்டு விலகி ஒடும், தவப்பயனால் சிவனை அறிந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்றும் பதினாறு வயது தோற்றத்திலேயே காட்சி அளித்தார்கள் என்ற நூல்களில் கூறப்பட்டு உள்ளது. தசையும எலும்பும் நரம்பும் நோயினால் பாழ்பட்டு விட்டதே இதற்கு பரிகாரம் இல்லையா? என்று நினைக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட மகான்களான சித்தர்களை வணங்கினால் வாழ்வில் திருப்பம் ஏற்படும், நாம் உலக வாழ்க்கையில் ஊறி கிடக்கும் சாதாராணமானவர்கள் , நம்மால் நம்மையே அறிய முடியவில்லையே! பஞ்ச பூதங்களை அறிந்து மனதில் நிறுத்தி தியானம் மூலமாகப் பார்த்தால் ஞானம் தோன்றும் அந்த ஞானத்தினால் இறைவன் கண்களுக்கு தென்படுவான், அத்தகைய ஞானத்தை அடைந்தவர்கள் சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள் என்று கூறலாம், அக்னியும் வாயும் இல்லாவிட்டால் உயிர் என்பதே இல்லை, உடல் இல்லாவிட்டால் உயிர் என்பதை எப்படி அடையாளம் காணமுடியும். உடலின் இயக்கங்கள் பஞ்ச பூதங்களால் ஏற்படுகிறது, காது கண், நாக்கு, மூக்கு தோல் இவைகள் வெளிப்படையாக செயல் படுவதில்லை, கண்களினால் நாம் பார்க்கிறோம், காதுகளினால் ஒலியை கேட்டும், நாக்கினால் சுவைத்தும், மூக்கினால் முகர்ந்தும் தொடுவதால் பரிச உணர்வைப் பெறுகிறோம், ஆகையால் இவைகள் ஞான இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படையாக செயல்புரியும் இந்திரியங்களைக் கன்ம இந்திரங்கள் என்கிறோம், அவைகள் வாய், கால்,கை, குறி, குதம் என்பன ஆகும், மனம் புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை கரணங்கள் இவைகள் எல்லாம் ஆத்ம தத்துவங்களாகும், இவைகளை அறிந்தவர்களுக்கு வாசி சித்தயாகும் , வாசியின் உண்மையை புரிந்தவர்களுக்கு இணையானவர் யாரும் கிடையாது, காலம் நியதி, கலை, வித்தை, அராகம், மாயை என்பவை வித்தியாசமான தத்துவங்களாகும், காலம் என்பது சென்ற காலத்தின் எல்லையையும் நிகழ்காலத்தின் பலத்தையும் எதிர்காலத்தின் தன்மைகளையும் புரியச் செய்வது. நியதி என்பது கன்மத்தின் அளவை நிச்சயம் பண்ணி நிறுத்துவது கலை என்பது ஆணவத்தை குறைத்து ஆன்மாவை செயல்பட தூண்டுவது ஆகும் வித்தை என்பது ஆன்மாவுக்கு அறிவை கொடுப்பது. அராகம் என்பது அடைந்தவற்றை குறைவாகத் தோன்ற செய்து மேலும் அடையவேண்டும் என்று வேட்கையினைத் தூண்டுவது, மாயை என்பது சிந்திக்க விடாமல் மயக்கத்தை தருவது, வெட்ட வெளியிலே ஒன்றுமில்லா சூனியத்தை எங்கும் பரவி நிற்கும் இறைவடிவமாக பார்த்துகளிப்புறுபவர்கள், ஆத்ம தத்துவங்கள் மூலம் தன்னைத் தானே உணர்ந்தவர்கள் உடலில் இருந்து ஆத்மா பிரியும் நேரத்தை அறிந்தும் ஆத்மாவைத் தமக்குள் அடக்கி வைத்தும் ஜீவசமாதியானவர்களே சித்தர்கள். அதனால் தான் சித்தர்கள் ஐயக்கியமான இடங்களை ஜீவசமாதி என்று குறிப்பிடுகிறார்கள். ஜீவசமாதியை வழிபாடும்போது நம்மையறியாமல் ஒரு பத்துணர்ச்சி ஏற்படுகிறதே? நம்மிடம் ஏற்படும் புத்துணர்ச்சியின் - வைப்பிரேசன் - பொருள் என்ன என்று சிந்தித்தால் நமது உடம்பு தெய்வீக உணர்வுகளை உணர்வதே ஆகும், சித்தர்கள் நமக்கு அருள் பாலிக்கிறார்கள் என்றும் சொல்லலாம், தேவையில்லாத கற்பனைகளை நினைத்துக் கொண்டு வாழும் நம் மனதுக்கு ஆறுதலாக சித்தர்களின் சமாதிகள் அமைந்திருக் கின்றன என்றால் வியப்பில்லை. எல்லாம் அந்த சிவனின் அருள் பெற்று ஜீவசமாதியானவர்களின் நினைவு கொண்டு அவர்களின் தெய்வீக அருள் பெறுவோம்,

 இந்து ஞான மரபில் இந்த ஜீவ சமாதிகள், கோவில்களுக்கு இணையாக புணிதத்தன்மை உடையவையாக கருதப்படுகிறது. சிறப்பு வாய்ந்த கோவில்கள் அநேகங்களில் யாதேனும் ஒரு ஞானியின் ஜீவசமாதி அமையப்பட்டுள்ளதை நாம் இன்றளவும் காணலாம். உதாரணமாக பழனியில் போகரும், மதுரை மீனாட்சி கோவிலில் சுந்தரானந்தர், திருப்பரங்குன்றம் மச்சமுனி, திருப்பட்டூர், பதஞ்சலி, வியாக்ரபாதர், சிதம்பரம் ...திருமூலர், திருச்செந்தூர், மூவர் சமாதி, திருவண்ணாமலையில் முக்கியமாக ரமணர், சிவவாக்கியர், அருணகிரியார்,மற்று்ம் நூற்றுக்கணக்கானோர் சமாதி யடைந்துள்ளனர், இவர்களால் கோவிலுக்கு புத்துணர்வும், கோவில் கொண்டுள்ள இறைவர்களால் இவர்களுக்கு பெருமையும் கொண்டு சீவசமாதிகள் சிறப்பு அமையப்பெற்று உள்ளன என்பதை நாம் அறியலாம்,
   
             ஏழுர்  சாலியர் சமூக சமுதாயத்தினர் ஆங்காங்கே அவர்களின் குருநாதராகக்கருதி வழிபடும் சில ஜீவ சமாதிகளை இங்கே காணலாம்.
 நம் இராசபாளையம் நகரில் சாலியர் சமுதாயத்தினரால் முக்கியமாக வழிபடும்  குருநாதர் என்ற குருசாமி கோவில் முக்கிய பிரபலமடைந்த ஒன்று குருவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு இறைவழிபாடகவே கொண்டு இங்கு வழிபட்டு வருகின்றனா், ஒவ்வொரு மாதமும் அவர் பிறந்த கார்த்திகை நட்சத்திரத்தன்று அன்னதானமும், சிறப்பு பூசைகளும் இன்றளவும் நடைபெறுகிறது. இத்துடன் ஞானயார் என்ற ஜீவசமாதி வழிபாடும் உண்டு.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சாத்தூர் ரோட்டில் பனியாரக்குழிமடத்தருகில் உள்ள மூவர் சமாதி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சுந்தரபாண்டியத்திலுள்ள, பாக்கிய நாதர், அண்ணாமலையார்,கட்டாரிச்சாமி, சமாதியில் தினமும் பூசையும் வழிபாடும் நடைந்து வருகிறது. இதன் அருகிலுள்ள இராமச்சந்திரபுரத்தில் சடையாண்டி கோவிலில் உள்ள சடையாண்டி சமாதியும், காளிமுத்து சுவாமி சமாதியும், புதுப்பட்டியில் கருப்ப ஞானியார், யாழ்பாணர், ஆறுமுக்சாமியார் சமாதிகளும், சக்கம்பட்டியில், ஞானியார் சமாதியும், அருப்புக்கோட்டையில் வெள்ளக்கோட்டையில் சிவன்கோவில் அருகில் சில சமாதிகளும் சாலியர் சமுகத்தாரால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றதை அறியலாம்.
    இப்படி ஆதிக்கு சமன் ஆகிவிட்ட ஞானிகளை இறைவனாகவே கருத வேண்டும். அத்தகைய ஜீவசாமதி அடைய உள்ள ஞானிகளை சீடர்களின் உதவி கொண்டு பிரத்தியோக சடங்குகள் செய்வித்து, அவர்களின் உடலை சமாதி செய்ய, "சமாதிக் கிரியை" செய்யும் விபரங்களை திருமூலரும் கூறியுள்ளார்.
  நம் ஊர் அருகிலுள்ள சிவ ஜீவனுள்ள பிரசித்தி பெற்ற ஜீவ சமாதிகள் சில
பனையூர், தகப்பன் சாமி சமாதி, திருப்பரங்குன்றம் மாயாண்டிசாமி சமாதி, சிங்கம் புணரி வாத்தியார் சமாதி, பாம்புகோவில் சந்தை சமாதி, இன்னும் பல.

   இத்தகைய ஜீவன் உள்ள ஞானிகளின் ஜீவசமாதிகளில் தினமும் அல்லது வாய்ப்பு கிடைக்கும் பொதெல்லாம் சென்று நெய் தீபமிட்டு மனம் உருகி வேண்டினால் மனம் நிம்மதி பெறும் , வேண்டும் காரியங்கள் கைகூடும்.

                                             










திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
 மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக