செவ்வாய், 21 ஜூன், 2016

தனிமைக்கு துணை பக்தி


தனிமைக்கு துணை பக்தி

ஒரு மனிதனுக்கு கடைசி காலத்தில் ஏற்படும் தனிமை விரக்தியை நீக்குவது எது? நிம்மதி தருவது எது? துணையா இருபபது எது? இப்படி கேள்வி எழுந்தால் பதில் வருவது சொத்து சுகம், பந்தம், பாசம் என்பர்

பணி ஓய்வுக்கு பிறகு அல்லது முதுமையில் தனிமையை போக்க, பலர் பல வழிகளை தேடுகின்றனர். சிலர் செல்லப்பிராணிகளை கொஞ்சி மகிழ்வது, தோட்டம் துறவு, செடி கொடி வளர்த்து பொழுது போக்குவது பலர் புத்தககம் படிப்பது , எழுதுவது, வேறு சிலர் கேளிக்கைகள் டிவி, சினிமா, பொழுதுபோக்கு போன்ற வற்றிலும் தனிமையை கழிப்பர், வேறு சிலர் உற்றார், உறவினர் பேரன் பேத்தி இவர்களுடன் சிரித்து பேசி பொழுது கழிப்பர். வேறு சிலர் தற்போதைய பொழுதுபோக்கு சாதனமான பல டிஜிட்டல் , இன்டர் நெட், வாட்ஸ்அப் , பேஸ்புக் போன்றவற்றிலும் தனிமையை போக்கு கின்றனர், ஆனாலும் இவை எல்லாம் தற்காலிகமானதே, நிரந்தமாக தனிமையை போக்குதன்று,

இதற்கு முதுமை பருவ தனிமைக்கு ஏற்ற அருமையான வழி கடவுள் பக்தி தான். இறைவர் தான் நமக்கு நண்பர், தாய்தந்தை, உற்றார், உறவினர் எல்லாம் , அவர் மீது உண்மையான அன்பு கொண்டு தனிமையை இனிமையாக போக்க அவரிடம் கொள்ளும் பக்தியே சிறந்த அருமருந்து.
இந்து சமயத்தில் வயதானவர்கள் குடும்பப் பொறுப்புக்களை எல்லாம் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, தலம் தீர்த்தம், மூர்த்தி என்று கிளம்பி விடுகின்றனர், வீட்டில் வயதானவர்கள் ஏதாவது தொந்தரவு செய்தால் - தொந்தரவு செய்வதாக நினைத்தால் - கூட கடைசி காலத்தில் " சிவனே என்று இருக்கக் கூடதா? " என்று தானே சொல்கிறோம்.

கடவுள் பத்திதான் தனிமையை போக்கும் அருமருந்து, முதுமையில் தனிமைப்டும் போது தான் விரும்பும் நடபும் கடவுளோடு ஒன்றி போவதால் கடவுளும் எப்போதும் தன்னுடன் வசிப்பவர் போல் நினைப்பதும், அவருக்கு உணவு படைத்து, அவருக்கு தொண்டுழியும் செய்து, அவர் சாப்பிடுவது போலக்கூட நம்புவதும், தனிமையில் பெறக்கூடிய பெரிய ஆறுதலான விசயமாகும், இந்த நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது, அதனால் கடவுள் பக்தி உள்ளவர்கள் கடைசி காலத்தில் எதற்கும் பயப்படாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தாங்கள் தனிமையில் இருப்பது போன்ற உணர்வே இல்லாமல் இருக்க முடிகிறது.

கடவுள் பக்தி செய்வதன் மூலம் நாம கீர்த்தனம், பஜனை, ராமாயணம், பாகவதம், புராணம் போன்றவற்றை பாராயணம் செய்யும் போதும், இறைவிர் பெருமைகளை பிறருக்கு எடுத்து உரைப்பதும், நாமும் கடவுள் நாமங்களைப் பாடி தேவாரா திருவாசங்கள் கற்று , பாடி இறைவருக்கு பாமாலையாக பாடியும் , பக்தி செய்வதால், நம்முடைய தனிமை வலி விலகுவதோடு, ஆத்ம திருப்தி கிடைக்கிறது. புண்ணியம் சேர்கிறது, நம் பிராத்தனை நம் சந்நதிகளை வாழ வைக்கிறது, அதுவே கடவுளின் அருளுக்கு பாத்தியமாகிறது. 

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
************************************************



நாம் திருக்கோவிலில் வழிபாடு செய்வதற்கு முன்பு இந்த நாமாவளியை கூறிய பிறகுதான் வழிபாடுகளை தொடர வேண்டும் மீண்டும் வழிபாடுகளை முடித்த பின்பும் நாமாவளியை சொல்லி முடிப்பது நமது மரபாகும்.


1.ஹர ஹர நம பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா ..!!!
2.தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி..!!
3.ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி..!!
4.ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி.!!
5.அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி.!!
6.ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி...!!
7.பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி...!!
8.குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி...!!
9. அருளிட வேண்டும் அம்மான் போற்றி 
இருள்கெட அருளும் இறைவா போற்றி...!!
10.தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி ...!!!
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி ...!!!
11. அருமையில் எளிய அழகே போற்றி 
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி ...!!!!
12. மண்ணிய திருவருள் மலையே போற்றி ..!!
சென்னியில் வைத்த சேவக போற்றி ..!!
13.திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி...!!
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி...!!
14.காவாய் கனகத் திரளே போற்றி 
கயிலை மலையானே போற்றி போற்றி..!!!

நாம் இந்த நாமாவளியை சொல்லி பரம்பொருளின் ( சிவபெருமானின்) பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்
திருச்சிற்றம்பலம் .
***************************************


1 கருத்து: