வெள்ளி, 1 ஜூலை, 2016

கயிலைக்கு சமமான சிவத்தலங்கள்

கயிலைக்கு சமமான சிவத்தலங்கள்

கயிலைக்கு சென்று வழிபட இயலாதவர்கட்கு கயிலைக்கு சமமான தலங்களை நமது அருளாளர்கள் நமக்கு காட்டியுள்ளார்கள். அத்தலங்களுக்கு சென்று வழிபட்டு கயிலை நாதரின் அருள் பெறுவோமாக.

கயிலைக்கு சமமான தலங்கள் ; 
1). திருக்காளத்தி, 2) திருச்சிராப்பள்ளி, 3) மாயவரம், 4) திருநல்லூர், 5) திருக்கோணமலை, 6) சிதம்பரம், இவற்றுள் 
1) திருக்காளத்தி ( ஸ்ரீ காளஹஸ்தி, காளஸ்திரி)
இருப்பிடம்  ; ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து 45 கி,மீ, தொலைவில் உள்ளது.
இறைவர் ; காளததிநாதர், குடுமித்தேவர்
இறைவி ; ஞானப்பூங்கோதை
தலத்தின் அருமையும் பெருமையும்;




1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற தலம்
2. மூலவர் தான் தோன்றி நாதர், ( சுயம்பு ) தீண்டாத் திருமேனி
3. ஸ்ரீ சிலந்தி, காளம்= பாம்பு,  அத்தி = யானை , இம்மூன்றும் வழிபட்டதால் ஸ்ரீ காளத்தி எனப்படுகிறது.
4. பஞ்ச பூதத்தலஙகளில் இது வாயுத்தலம், கருவறை விளக்கு அசைந்து கொண்டே இருக்கும்
5. தென் கயிலாம் எனப் போற்றப்படுவது
6. இத்தலத்தின் பொன்முகலி ஆறு வடக்கு நோக்கி ஓடுகிறது. இதனலால் இரு கயிலையே எனப் போற்றப்படுகிறது.
7. இராகுவும், கேதுவும் இத்தலத்தில் உள்ள மூலவரை வழிபட்டு தங்களின் பாவங்களை போக்கிக் கொண்டனர்
8. கண்ணப்பர் வழிபட்டு பேறு பெற்ற அரியதலம்
9. நக்கீரர் , இந்திரன், இராமர், முசுகுந்த சக்கரவர்த்தி , சிகோசரியர், பரத்வாச முனிவர் ஆகியோர் வழிப்பட்ட தலம்.
10. "அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி " என்பது தமிழ் மறையின் விளக்கம்
11. இத்தலத்திலருந்தே சம்பந்தரும், சுந்தரரும் நக்கீரரும் கயிலையைப் பாடி உள்ளனர் எனபது வரலாறு.
12. கோயில் காலை, முதல் இரவு வரை திறந்தே காணப்படும்
13. நவக்கிரகங்கள் இல்லாததும், இத்தலத்திற்கு சிறப்பு
14.உமையம்மைக்கு இறைவர் மந்திர உபதேசம் செய்தருளிய தலம்
15. சீதை, அனுமன், லட்சுமணன், சப்தரிசிகள் , எமன், சித்திரகுப்தர், தர்மர், வியாசர், ஆகியோர் நிருவி வழிபட்ட சிவலிங்கங்கள் இங்கு உண்டு.
16, இங்குள்ள மலை கைலாசகிரி எனப்படுகிறது. மலை மீது பல இடங்களில் சிவலிங்கங்கள் உள்ள கோயில் உள்ளன.
17. காளத்தி பிரவேசமுத்தி / காளத்தியினுள்ளே சென்றாலே முத்தி எனப்படுகிறது
18. இத்தலத்தில் பஞ்ச முகேசுவரர்  ஆலயம் வழிபடத்தக்கதாகும்.

சிலந்தி, பாம்பு, யானை மூன்றும் ராகு, கேதுவை வணங்கியதாகக் தெரியவில்ைல, காளத்தி நாதரை வழிபட்டுள்ளன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ராகுவும் கேதுவும் மூலவரைத்தான்வணங்கி புண்ணியம் ெபற்றார்கள் என்றால் நாம் இவர்களை வழிபடுவதைவிட மூலவரை வணங்கி கைலாச நாதரை வணங்கிய அருள் பெற்று பலன் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக