வெள்ளி, 6 நவம்பர், 2015


தினமும் ஒரு தேவாரம் அப்பர் பெருமான் பாடியது சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 4 மடமான் மறி பொற்கலையும் மழுப் பாம்பு ஒரு கையில் வீணை குடமால் வரைய திண்தோளும் குனிசிலைக் கூத்தின் பயில்வும் இடமால் தழுவிய பாகம் இருநிலன் ஏற்ற சுவடும் நடமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை பொழிப்புரை இளமையான மான் கன்றினை தனது கையில் ஏந்தியவரும், அழகிய தோல் ஆடையினை உடையவரும், ஒரு கையில் மழுப்படையும், மற்றொரு கையில் பாம்பினையும், மற்றொரு கையில் வீணையையும் ஏந்தி இருப்பவரும், மேற்குத் திசையில் காணப்படும் மலை போன்ற திண்மையான தோள்களை உடையவரும், வில் போன்று வளைந்து ஆடும் நடனம் பயில்பவரும் ஆகிய சிவபெருமான் தனது உடலின் இடது பாகத்தில் பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடினை உடைய திருமாலைக் கொண்டுள்ளார். குளிர்ந்த கெடில நதியைத் தீர்த்தமாக உடைய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக