சனி, 7 நவம்பர், 2015


பதினென் சித்தர்கள் / நந்திதேவர் சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான - நந்தியம் பெருமான் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி ஆகிய பரம் பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர். அவர்களிளல் நந்திகள் நால்வர் என்று திருமூலர் தன் திருமந்திரத்திர பாடல் 109ல் குறிப்பிடுகிறார். அந்த நாலவர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்பர். இவர்கள் நால்வரும் சிவனாரிடம் முதன்முதலில் மிக உயர்ந்ததான மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்ல. திருக்கயிலையாய பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் என்பது அவர் கைலையில் சிவனாருக்கு நிரந்தரமான வாயில் காப்பவனாகவும் , சிவனாரின் வாகனமாகவும் இருந்து வருவதிலிருந்து தெரியவருகிறது. நந்தியின் தோற்றம் : மிக பழங்காலத்தில் இப்போதுள்ள தஞ்சை மாநகரின் அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் நல்லறமாம் இல்லறம் நடத்தி வந்தனர். நீண்ட காலமாக அவர்களுக்கு மகப்பேறு இல்லை, இந்நிலையில் ஒருநாள் சப்தரிஷிகள் அவருடைய ஆஸரமத்திற்கு வந்தனர். சிலாத முனிவர் அவர்களை வரவேற்று தன் ஆஸ்ரமத்தில் உணவு உண்ணுமாறு வேண்டினார், ஆனால் அவர்கள் குழந்தைப் பேறு இல்லாத இடத்தில் நாங்கள் உணவு அருந்துவதில்லை என மறுத்து சென்று விட்டனர். இதனால் மனம்வருந்திய சிலாத முனிவர் திருவையாற்றில் உள்ள சூரியபுஸ்கரணியில் நீராடி பஞ்சாட்சர தவமிருந்தார். அவரின் தவத்திற்கு மனம் இறங்கிய சிவனார், " சிலாதரே விரைவில் உமக்கு கருவில் இருந்து பிறக்காத திருமகன் கிடைப்பான் அவன் மரணமில்லா அத்திருமகன் எனக்கு சமமானவன் என்னை தரிசிப்பவர்கள் யாவரும்அவனையும் வழிபடுவார்கள் " என்று கூறி மறைந்தார். அவ்வாறு அந்த கூற்றிற்கிணங்க, ஒரு சமயம் சிலாதர் யாகம்செய்ய பூமியை தோண்டியபோது பூமிக்கு அடியில் பதிந்த தங்கப் பெட்டி இருப்பதைக் கண்டார், அப்பெட்டியில் மான்மழுவேந்தி மதி சூடியிருந்த முக்கண்ணன் திருவுருவையே கொண்ட ஒரு ஆன் குழுந்தை இருப்பதைக் கண்டு எடுத்து , அந்த ஆண்மகவுக்கு நந்தி என்ற நாமம் இட்டு வளர்த்து வந்தார். நந்திக்குஏழு வயதான போது, சிலாதர ஆஸ்ரமத்திற்கு வருகை தந்த மித்ரர், வருணர் ஆகிய இரு வேதர்களும் சிலாதர முனிவரிடம் தங்கள் மகனுக்கு ஆயுட்காலம் எடடு ஆண்டுகள்தான் அது நிறைவடையும் தருணத்தில் உள்ளது. என்றனர், இதனால் மனம் வருந்திய சிலாத முனிவரிடம் நந்தி தேவர் தந்தையே கவலை கொள்ள வேண்டாம் நான் சர்வேஸ்வரன் திருவருளால் நீண்ட நாள் வாழ்வேன் அதற்கு அவன் அருள் பெற தவமிருக்க இருக்கிறேன் எனக்கு ஆசி வழங்கி அருள்மபுரியுங்கள் என்று வேண்டிக்கொண்டு, அதன்படி பூஸ்கரனியில் மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டி கடும்தவம் புரிந்தார். இதன் மூலம் சர்வேஸ்வரனின் அருளால் அவருக்கு மரணமில்லா வாழ்வும், கயிலையில் சிவத்தொண்டு செய்யும் காவலனாகவும், சிவனாருக்கு வாகனமாகவும் இருக்கும் அருள் கிடைத்தது. எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருக்கும் நந்தி தேவருக்கு சிவனாரே பூமிக்கு வந்து , திருமழலைப்பாடியில் தவவாழ்வு வாழ்ந்து வந்த வசிஸ்டரின் பேத்தியாகிய " சுயகையை " மணமுடித்து வைத்தார், அது முதல் இன்று வரை சிவ பக்தர்கள் அனைவரும் தன்னை வழிபட்டு தன் அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய வேண்டும்என்பதை விளக்கும் வண்ணமே நந்தியின் சன்னதி எல்லா சிவலாயங்களிலும் அமையப் பெற்றுள்ளது. இன்றளவும் சிவபத்தர்கள் சிவபெருமானின் அருள்பெற நந்திதேவர் திதி செய்யுமுறை திருவிளையாடல் புராண வாயிலாகவும்அறியலாம். " வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி பத்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையார்தாக்கி அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும் நந்தியெம் பெருமான் பாத நகை மலர் முடிமேல் வைப்போம்" திருவிளையாடல் புராணம் இதனை மனதில் சொல்ல வேண்டும். சதா சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் நந்தி கேசுவரே ! அம்மையப்பரை கண்டு வணங்க விடை தந்தருள்க ! என்று மனதில் வேண்டி சிவனை வணங்க செல்லவேணடும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com தொகுப்பு: வை. பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக