வியாழன், 19 நவம்பர், 2015

திருமுறைகள் கூறும் அதிஅற்புத தெய்வீக ஆற்றல்


திருமுறைகள் கூறும் அதிஅற்புத தெய்வீக ஆற்றல் திருஞான சம்பந்தர் காட்டியது " .........திருஞானசம்பந்தர் சொல்மாலை தஞ்சமென நின்றசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்று வளர் வாரே" ...... தமிழ் திருமுறை 3. பதிகம் 81. பாடல் 11 பாடலின் கருத்து : திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே - தமிழ் வேதப் பாடல்களே தமக்கு பற்றுக்கோடு என்பதை மனதில் கொண்டு ஓதும் அடியார்கள் வஞ்சனை இல்லாதவர்களாக இருப்பர். நெறிதவறாமல் வாழ்ந்து அறியாமை எனும் இருள் நீங்கப் பெற்று இறையருள் நிறைவாகப் பெற்று மேன்மேலும் வளர்வர். "............ ஞானம்உணர் சம் பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதி கழலே சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ் வெய்தி இமையோர் அந்தவுலகு எய்தி அரசாளும்அதுவே சரதம் ஆணைநமதே." ....... தமிழ் திருமுறை 3. பதிகம் 78. பாடல் 11 பாடலின் கருத்து: ஞானசம்பந்தன் பொருள் நிறைந்த செந்தமிழ் பாடல்கள்களைக் கொண்டு திருவேதிக்குடியில் எழுந்தருளியுள்ள முழுமுதற் பொருளான சிவபெருமானாரின் திருவடிகளைச் சிந்தித்து போற்றுபவர்கள் நல்லவர்களாக திகழ்வர் மறுமையி தேவலோகத்தை அடைந்து அரசாள்வர்என்பது நிச்சயம், இது நமது ஆணை (சத்தியம்) இவ்வாறு இவர் கூறுயுள்ளவைகள் யாவும் உண்மையாகவே நடக்கும் என்று மனிதர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். இதற்கு ஒரு அரிய சந்தர்ப்பம் திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் நடந்ததை இங்கே காணலாம் நல்லூர் பெருமணம் என்னும்தலத்தில் திருஞான சம்பந்த சுவாமிகள் அவர்களுக்கு திருமணம் நடந்தது. "நம்பியாண்டார் நம்பி" எனும் அடியவரின் புதல்வி "தோத்திர பூராணாம்பிகை" என்பவரை மணம் முடித்தார் சம்பந்தர் (திருமணம் தமக்கு வேண்டாம் என்று எவ்வளவோ கூறினார். பெற்றோர் விடவில்லை. பெற்றோர்சொல் தட்டக் கூடாது என்று எண்ணி திருமணம் முடித்தார் சம்பந்தர். நல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளியுள்ள சிவாலயம் சென்று தொழுதார் துணைவியாருடன் திருமணத்திற்கு வந்திருந்த அடியவர்கள் யாவரும்உடன் சென்று தொழுது வணங்கினார்கள். திருஞானசம்பந்தர் அங்கே எழுந்தருளியுள்ள் சிவபெருமானார் முன்பு கீழ்க்காணும் பாடலை முதலாகக் கொண்டஒரு பதிகம் பாடியருளினார். அப்பாடல் "கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய்யாய்த்தில சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர் நல்லூர்ப்பெருமண மேய நம்பானே." ...... திருமுறை 3 பதிகம் 125. பாடல் 1. பாடலின் அரிய கருத்து: அம்மி மிதித்து அருந்ததி காட்டும் திருமணம் வேண்டாம். கழுமலம் முதற்கொண்டு பல தலங்களில் நான் பாடிய பாடல்கள் மெய்யாக மாட்டா. நான் இதுவரை சொல்லிய பாடல்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்கவும் மாட்டார்கள். நல்லூர் பெருமணத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாரே. இவ்வோண்டுகோளை ஏற்று எனக்கு பெருமணத்தைக் கொடுத்தருள்க (முக்தி) என்பது இப்பாடல் கருத்தாகும் விளக்கம்: என்பாடல்களைப் பாடினால் (திருஞானசம்பந்தர் பாடலகள்) வினை நீங்கும், முக்தி பெறுவர், அரவாள்வர், சிவனுலகு அடைவர், என்றெல்லாம் பாடியுள்ளேன். எனக்கே தாங்கள் முக்தியை அளிக்காமல் இவ்வுல வாழ்வில் தள்ளி விட்டீர். என் பாடல்களை இவ்வுலக மக்கள் ஏற்கமாட்டார்கள். சீர்காழியில் தொடங்கிய பல தலங்களில் பாடிய பாடல்கள் மெய்யில்லாதவை என்றல்லவா தொண்டர்கள் எண்ணுவார்கள் எனக்கு முத்தியைத் தாருங்கள் என்று இறைவனிடம் முறையிட்டார். இவற்றை செவி மடுத்து (கேட்டருளிய) நல்லூர்பெருமணம் தலத்தில் எழுந்தருளியுள்ள் சிவலோக தியாகராசர், ஒரு சிவசோதியை தோன்றச்செய்து,வான்வழியே " ஞானசம்பந்தா ! நீயும் நின் மனைவியும் சிவசோதியுள் புகுந்து எம்மை வந்தடைவீராக, " என்றருளினார் திருஞானசம்பந்த சுவாமிகளும் " காதலாகி கசிந்து " எனத் தொங்கும் நமச்சிவாய திருப்பதிகத்தை பாடி, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் சிவசோதியில் புகச்செய்தார். முடிவில் தம் துணைவியாரோடு சிவசோதியில் சிவனுலகு அடைந்து புற்றார். இதிலிருந்து நாம் உணர் வேண்டியது முத்தி அளிக்கும் உரிமையுடையவர் சிவபெருமானாரே, என்பதும், திருமுறைப் பாடல்கள் யாவும் அதி அற்புதமான தெய்வீக சக்தி வாய்ந்தவை என்பதையும் ஆழமாக மனதில் கொள்ள வேண்டும் நாம். திருச்சிற்றம்பலம் நன்றி :தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக