வெள்ளி, 6 நவம்பர், 2015

வேதங்களின்மெய்ப்பொருள்


வேதங்களின்மெய்ப்பொருள் ஆதி சங்கரர் கூறும் பரம ரகசியம் அனைத்து மக்களும் அவரவர் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற முறையான வழி முறைகளை தருவது வேதம். வேதம் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற் பாகம் - கர்ம காண்டம், இரண்டாவது பாகம் - ஞான காண்டம் அல்லது வேதாந்தம் என்பது வேதாந்தம் பரமனைப் பற்றிய முழு அறிவைத் தருவது. ஆனால் அனைவரும் அந்த அறிவை அறிந்து கொள்ள தகுதிானவர்கள் அல்லர். எனவே அவர்களின் மனதை பண்படுத்ததி பக்குவமடைய செய்யும் பொருட்டு கர்ம காண்டம் பல்வேறு வழிபாட்டு சடங்குகளை முன்மொழிகிறது. வாழ்க்கை எனும் செயல்முறை கல்விச்சாலையில் நாம் நம் ஒவ்வொரு செயலிலிருந்தும் அறிவையும், மனப்பக்குவத்தையும் அடைகிறோமோ அப்போதுதான் பரமனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நமக்கு ஏற்பட்டு தேவங்களை படிக்க முற்படுவோம். கர்ம காண்டம் நம் செயல்களை செய்ய வேண்டிய முறைகளையும், வேதாந்தம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பரமனை பற்றிய ஞானத்தையும் நமக்கு தருகின்றன. பரமனைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு கர்மக காண்டத்தை பற்றிய அறிவு தேவையில்ல. முறையாக வேதத்தை பயலுவதைத் தவிர நாம் வேறு ஒரு செயலிலும் நாம் ஈடுபட வேண்டாம்.ஆனால் பரமனை தெரிந்து கொள்ள தேவையான மனோபக்குவத்தை பெற வேண்டியிருக்க்லாம். அனைத்து மனிதர்களின் குறிக்கோள் பரமனை அறிந்து குறைவில்லா இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பது தான் என்றாலும் எல்லாரும் அந்த ஞானத்தை அடைய தகுதி வாய்ந்தவர்கள் அல்லர். பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களின் நோக்கமும் பள்ளியின் இறுதி தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அது போல தகுதியை ஆய்ந்து நமக்கேற்ற உபதேசத்தை செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு ஆன்மீக அறிவில் தங்களுடைய நிலையை தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவே நாம் கூடிய விரைவில் ஒரு ஆன்மீக குருவை நாடுவது அவசியம். வேதங்களின் ஒரே குறிக்கோள் நமக்கு பரமனை அறிவிப்பது தான் . இந்த குறிக்கோளை நிறைவேற்ற பல்வேறு படிகளில் வேதம் நம்மை அழைத்துச் செல்கிறது. முதல் படி கர்ம யோகம் பலனில் பற்றில்லாமல் நமக்கு கொடுக்கப்பட்ட வேைகைளை முறையாகவும், நமது முழு மனதின் ஈடுபாட்டுடன் செம்மையாக செய்து முடிப்பது கர்ம யோகம். பணம், பதவி, மற்றும் புகழ் அடைவதற்காக செய்யும் செயல்கள் கர்ம யோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும். என்ற நோக்கத்துடன் செய்யும் செயல்களே தர்ம யோகமாகும். " கர்ம யோகத்தின் பலன் மனப்பக்குவம் " என்பதாகும் இரண்டாம் படி கற்றல் வேதாந்தத்தினை முறையாக ஆசிரியரிடமிருந்து தொடர்ந்து நீண்ட நாட்க்ள் கற்க வேண்டும். வேதத்தில் சொல்வத இதுதான் என்ற திடமான எண்ணம் வரும்வரை கற்றல் தொடர வேண்டும். புரியவில்லையெனில் வேறு ஆசிரியரைக் கொண்டாவது புரியும் வரை கற்க வேண்டும். மூன்றாம் படி - கசடற கற்றல் வேதம் சொல்வது என்ன வென்று சரியாக தெரிந்தவுடன் நாம் அடுத்த படியாக வேதம் சொல்வது சரியா? என்ற கேள்வியை கேட்க வேண்டும். யுத்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் வேதம் கூறிய முடிவை ஆராய்ந்து தெளிய வேண்டும். வேதத்தின் கருத்துக்கள் எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அடுத்த படிக்கு செல்லவேண்டும். நான்காம் படி - நிற்க அதற்கு தக வேதத்திலிருந்து நமக்கு கிடைத்த ஞானத்தில் நாம் நிலைத்து நிற்க ஒரு சில காலம் ஆகும் . இதனை நம் சுய முயற்சியால் மட்டுமே நாம் தியானம் எஎன்ற பயிற்சி மூலம் ஞானத்தில் நிலைத்து நிற்கும் நிலை பெற வேண்டும். உணவு உண்டபின் பசி குறைவது போல் நம் பயிற்சி மூலம் கிடைத்த ஞானத்தால் குறைவற்ற இன்பத்தை படிப்படியாக உணர முடியும். முடிவுரை பரமனை அறிந்து கொள்ள நாம் கடக்க வேண்டிய படிகள் அனைத்தையும் ஒரே ஜென்மத்தில் கடந்து விட முடியாது. நாம் செய்யும் எந்த ஒரு முயற்சியும் வீண்போகாது. நாம் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து செய்யும் முய்ற்சியால் தான் வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து படிகளையும் கடந்து பரமனை தெரிந்து கொள்ள முடியும். ஆகையால் நாம் குருவின் துணையுடன் நம் தற்போதைய நிலையை தெரிந்து கொண்டு மேற்கொண்டு நமது ஆன்மீகப் பயணத்தை தொடரவேண்டும். வேதாந்தத்தை தகுந்த குருவின் துணை கொண்டு பயின்று, இப்பிறவியிலேயே பரமனை அறிந்து குறைவிலா இன்பத்தை அடையலாம் என்பது ஆதி சங்கரர் நமக்கு கூறும் பரம ரகசியம் திருசிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக