திங்கள், 10 மார்ச், 2014


கடவுளை காணும் கருவி " தியானம் " தியானம் மனம் அமைதியாக இருக்கும் போதுதான் தியானம் கைகூடும், நமக்கு வெளியே கடவுளை காண முடியாது, நமது ஆன்மாக்களே வெளியிலிருந்து தெய்வத் தன்மையை வழங்குகின்றன, நாமே கோவில்க்ள இதைப் போன்றுதான் கோவில்கள் அமைக்கப்பட்டன, திருமூலரும் இதன்பொருட்டு " " உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காள மணிவிளக்கே. என்றார் மனத்தின் சக்தியை ஒருமுனைப்படுத்தலே நமக்கு கடவுளைக காண உதவும் கருவியாகும். நீங்கள் உங்களுடைய ஆன்மாவைத் தெரிந்து கொண்டால் முக்காலத்திலும் உள்ள எல்லா ஆன்மாக்களையும் தெரிந்து விடுவீர். ஒரு முனைப்படுத்தி குவிந்த மனம் , ஆன்மாவின் ஒவ்வொரு மூலையையும் காண்பதற்கு விளக்குபோல் உதவும். அமைதியான இடத்தில் அமைதியான மனத்துடன் ஆன்மா மீது தியானம் செய்யுங்கள் அதன் மீது உங்கள் மனத்தை ஒருமுனைப்படுத்துங்கள் அதனுடைன் ஐக்கியமாகுங்கள். பேச்சு இல்லா மெளனம் உண்மையை தெரிவிக்கும் பேச்சில் உங்களது சக்தியை செலவழிக்காதீர்கள் மெளனமாக இருந்து உங்கள் சக்தியை சேகரித்துக் கொண்டு ஆன்மீகச் சக்தியின் " மின் உற்பத்தி செய்யும் டைனமோ" வாக ஆகிவிடுங்கள். தியானம் தொடங்கும் முன் உங்கள் மனம் அடங்கி ஒருநிலைப்பட கீழ்கண்ட பாடல் கொண்டு பிராத்தனை செய்யுங்கள் " எவ்வுயிரும் இன்புற்று இருக்க எவ்வுயிருக்கம் அமைதி நிலவுக எவ்வுயிரும் ஆனந்தம் பெறுக எத்திசை உயிர்களும் இவற்றை பெறுக" இவ்வாறு பலதடவை மனத்தில் தியானத்தால் நலம் பெறலாம் ஞானம் பெறுவதற்கே இந்த பிராத்தனை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக