செவ்வாய், 11 மார்ச், 2014


முக்தி " முக்தி என்றால் பூரண விடுதலை. நற்செயல்கள் தீய செய்கைகளினால் ஏற்படும் தளைகளிலிருந்து விடுதலை பெறுதல், தங்கச் சங்கிலயையும், இரும்பு சங்கிலி போல் ஒரு தளைதான் காலில் குத்திய முள்ளை மற்றொரு முள்ளால் எடுத்து விட்டு பிறகு இரண்டையும் எறிந்து விடுவது போல் தான் என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறுவது உண்டு. ஆதலால் தீய பழக்கங்களை நற்பழக்கங்களினால் போக்கி விட்டு பிறகு நற்பழக்கங்களையும் போக்கி விட வேண்டும், எல்லாம் பற்றற்ற நிலை பெற்ற பின்தான் முக்தி என்ற விடுதலை கிடைக்கும். ஒருவன் கேட்டல், சிந்தித்தல், தியானித்தல், இவற்றால் ஞானம் பெற முடியும். இதனை ஒரு சத்குரு மூலம் தான் பெறமுடியும் - உணரமுடியும்- முக்தி பெற வேண்டுமென்ற விருப்பத்தோடு சத்குருவிடம் வேதாந்த்தை கேட்டு அறிந்தால் மட்டுமே அவன் முக்தி அடைவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக