"கர்மா " சித்தாந்தம்
பலரும் கர்மா சித்தாந்த்தை முன் ஜென்ம வினை என்கின்றனர். அந்தந்த ஜென்மத்திலேயே ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு தகுந்த விளைவு உண்டு. அவனுக்கு கிடைப்பது உறுதி அது உடனேயோ அல்லது பிறகோ ஏன் அடுத்த ஜென்மத்திலும் நடக்கலாம். இதையே நாம் நம் விதி என்கிறோம். இதைத்தான் புறநானூறும் " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்கிறது. தீமையும் நன்மையும் அடுத்தவரகளால் வருவதில்லை. நமக்கு வரும்தீவினைகள் அனைத்தும் சூழ்நிலை கேற்ப வந்தாலும் அது நம் செய்த வினைப்பயனாலேயே வருகின்றது என்கின்றனர் சான்றோர்கள், வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்ற முதுமொழி வழியாகவும் அறியலாம். இதனையே வள்ளுவர் பெருமானும்,
" தீயவை செய்தார் கெடுதல் நிகழ்தன்னை
வியாது அடிஉறைந்தற்று "
ஒருவனது நிழல் அவனை தொடர்வது போல அவனுடைய பாவ புண்ணிய செயல்கள் அனைத்தும் தொடரும். ஒருவன் தீமையே செய்கினும் நன்றாகவே மனை,மக்களோடு, செல்வ செழிப்போடு வாழலாம் ஏனெனில் அவன் முன் செய்த நல் வினைகளினால் நன்றாகவே ஒரு குறையுமின்றி வாழ்கிறான் ஆனால் அவன் தற்போது செய்யும் அறமற்ற பாவ காம குரோத தீய செயல்களால் அவனுடைய பாவச் செயலான கர்மா வினை மற்றொரு பிறவி எடுத்து அதை அனுபவித்தே ஆகவேண்டும். அவன் நல்ல செழிப்புடன் இருக்கும்போது நல்ல தான தர்மம் ஞாயமான புண்ணிய செயல்களை செய்து வந்தானானால், அவனுக்கு பிறவி என்னும் பிறாவா பெருங்கடல் கிடைத்து பிறப்பற்ற நிலை அடைவது உறுதி, அதுபோல இப்பிறவியில் கஷ்டமான நிலையில் நன்மை செய்தும், அறச்செயல்கள் செய்து வந்தானானால் அவனுக்கு மறுபிறவி உண்டெனில் செல்வ செழிப்பு வாழ்வோ அல்லது ஞான உபதேசம் பெற்றவனாயின் அவனுக்கும் பிறப்பற்ற நிலை அமையும் " இதுவே கர்மா சித்தாந்தம்"
இந்த கர்மா சித்தாந்தத்தை தெளிவாக உணர்வது மனிதர்களை நல்வழி படுத்த உதவும். அது இன்றில்லாவிட்டாலும் என்றாவது தங்கள் செய்கைகளுக்கு பலனை அனுபவித்தே ஆகவேண்டும். என்பதை மனிதன் உறுதியாக உணர்ந்தால் அவன் அறிந்து தவறு செய்யமாட்டான் ஆன்மீக மார்ககத்தில் செல்பவர்கள் கர்மாவை சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியம். அது தவறுகளை தவிர்க்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் சரியான பாதையில் பயணிக்க உதவும் கருவியே கர்மா வினை சித்தாந்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக