திங்கள், 31 மார்ச், 2014


கரு முதல் திரு வரை " அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்த காலை கூன் செவிடு அற்று பிறத்தல் அரிது " என அவ்வை பாடி பாடலின்படி மனிதராகப் பிறந்த நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும். நம்வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து பன்னிரு திருமறை நூலின் அடிப்படையில் நம்தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த நிலைகளில் வாழ்வில் தடுமாறா வண்ணம் நம் சைவ நெறி ஞானப் பெருமக்கள் கூற்றின்படி வாழ்க்கையை நடத்திச் சென்றால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து முடிவில் திரு என்னும் ஞானத்திருவடியை அடைந்து மீண்டும் பிறாவாநிலை பெற்று வீடுபேற்றை அடையலாம் என்கின்றனர் சைவநெறி அருளாளர்கள் , மனித வாழ்வை கீழ்கண்டவாறு 12 பகுதிகளாக பிரிக்கலாம், 1, குழந்தைப் பேறு 2.குருவருள் 3. வினை நீக்கம். 4. நோயின்றி பாதுகாப்பு 5.கல்விச் செல்வம் 6. செல்வம் 7, திருமணம் 8. திருத்தலச் செலவு ( திருத்தல பயணம்) 9.திருமேனி காண்டல் 10. இறைவனை போற்றி பரவுதல் 11. அடியார்களை வழிபடுதல் 12. வீடு பேறு மனிதராகப் பிறந்த ஒருவர் எவ்வாறு வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டுமெனில் நம் வாழ்க்கையில் பெறும் பேறுகளில் தலையாய பேறு மக்கட் பேறு. அதுவும் திருவருளை சிந்திக்கும் ஞானக் குழந்தையை பெறுதல் வேண்டும். ஞானமுள்ள அக்குழந்தைக்கு ஏழு வயதில் முறைப்படி குருநாதரிடம் தீக்கை பெறுவது. அவ்வாறு பெறுவதன் மூலம் திருவருளை எளிதில் பெறலாம். குரு உபதேசத்தின் பயனாக குழந்தையின் வினை நீக்கம் செய்யப்படுகிறது. வினை நீக்கம் செய்யப்பட்டதின் பலனாக உடலில் ஏற்படும் நோய்கள் நீக்கப் படுகிறது. நோயிலிருந்து நீக்கப்பட்ட குழந்தைகள் நல்ல கல்வி கிடைக்க பெறுவது நன்கு கற்றுத் தேறி வாலிபப் பருவத்தில் நேர்மையாக உழைத்து செல்வத்தை சேர்க்க மார்க்கம் பெறப்படும். சேர்த்த செல்வத்தை கொண்டு நல்ல இல்வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்வது, திருமணத்தின் பின்பு தான் தேடிய செலவத்தின் பயனாக திருத்தல செலவுகள் மேற்கொள்ளவதன் பயனாக இறைவனது திருமேனியை கண்டு வழிபடுவது, திருமேனியை கண்ட ஆனந்தத்தில் அன்பால் போற்றுவது, திருவடியைப் போற்றியதன் பயனாக அவனடி மறாத திருத்தொண்டர்களை சிவமாகவே ( சிவனடியார்களை) கண்டுஅவர்களை உள்ளும் புறமும் போற்றுவது. அடியார்கள் நடுவுள் இருக்கும் அருளை பெற்றதின் பயனாக இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைவது என வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவது நம்மை பெற்ற தாயை விட மிகச் சிறந்தவர் நமது சிவபெருமான் நாமும் சிவமாம் தன்மையை பெற வேண்டும். அதன் பெருட்டே அந்த சிவனாரும் ஒன்றாய், உடனாய், வேறாய், இருந்து இடையறாது அருள் செய்து கொண்டே இருக்கிறார். நாம் எத்தகைய குற்றம் செய்திருப்பினும் மனம் திருந்தி உண்மையான அன்போடு திருவடியை வணங்கி சரணடைந்து, ஓம் நமசிவாய, சிவாய நம, சிவ சிவ எனச் சொல்லி வழிபாட்டால் அக்குற்றங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவார் மேலும் இனிமேல் நாம் தவறுகள் செய்யாமலும் தடுப்பார். "தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய் " ஞான சம்பந்தர் பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே ................... திருநாவுக்கரசர் பின்னை என் பிழையை பொறப்பானைப் பிழையெலாம் தவிரப் பணிப்பானை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சுந்தரமூர்த் தி சுவாமிகள் பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ .................... மாணிக்க வாசகர் மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண்ணுதலான் பெருங்கருனை கைக் கொள்ளும்...................... பெரிபுராணம் ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக