வியாழன், 6 மார்ச், 2014

பெண்ணின் பெருமை


பெண்ணின் பெருமை உலக மகளிர் தினம் கொண்டப்படும் இந்நாளில் பெண்களுக்கென்று தனிப்பெருமை இதிகாச காலத்திலேயே இருந்தது, இதிகாச காலங்களில் பல சரித்திரக்கதைகள் பெண்ணின் கற்பு பற்றியும் அவர்களால் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்பட்ட பெருமைகளை எண்ணி மாலாது. உலக காவலனான சிவபெருமானே பெண்ணிற்கு தனது மெய்யில் பாதியையும் தலையிலும் இடம் கொடுத்தான், காலப்போக்கில் பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்று ஏற்பட்டு பெண்களுக்கு சமூகத்திலும் சமுதாய அமைப்பிலும் உரிய இடம் கொடுத்து இன்றும் தேசிய அமைப்பிலும் உலக அளவிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உலக மகளிர் தினம் வருகிற 8ம்தேதி கொண்டாடப்படுகிறது.இவ்வாறு பெண்ணின் பெருமையைப்பற்றி மகான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பெண்ணின் பெருமைபற்றி ஒரு நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தொகுப்பு மூலம் மகளிர் பெருமையை காண்போம் பேண் என்ற சொல்லில் இருந்து வந்ததே பெண் என்ற சொல். பேண் என்றால் விரும்புதல் என்பது பொருள். தந்தை தாய் பேண் என்ற வாக்கில் அறியலாம்." கைத்தல நிறைகனி அப்பமோடு அவல் பொறி ,,,,,,,,,,,அடி பேணி " என்று அவ்வையாரின் பாடல் வாயிலாகவும், "முத்தத்தரு,,,,, அடிபேண ' அருணகிரியார் பாடல் வாயிலாகவும் பேணி என்ற சொல்லிற்கு பெண் என்ற சொல்லை அறியலாம், விண்ணலகமும் மண்ணுலகமும் பெண்ணுலகத்தால் வாழ்ந்ததை அறியலாம், தந்தைக்கும் தாய்க்கும் உள்ள உரிமை பெருமையினை தாய்க்கு முதலாவது தருவதை நாம் நடைமுறையில் காணலாம். தாய்நாடு, தாய்மொழி என்று தான் வழக்கில் உள்ளன, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , அம்மையே அப்பனே என்று வள்ளலாரும் மணிவாசகரின் கூற்றிலும் அவ்வையாரின் கூற்றின் வழியே அறியலாம். தாய்மையை சந்நியாசியும் வணக்கதக்கவர்கள். சிவனுக்கு ஒரு ராத்திரி சக்திக்கு நவராத்திரி , நாம் வாழும் பூமியை நிலமகள் என்றும் பருகும் நீரை கங்காதேவி என்றும் கூறிவதில் பெண்ணிற்கு உள்ள பெருமை சிறப்பு பெரும். சர்வமும் சக்தி மயம் " ஆவதும் ( குடும்பம் ) பெண்ணாலே அழிவதும் ( கணவனது கஷ்ட நஷ்டங்கள் ) பெண்ணாலே என்ற பொன்மொழி உண்டு. " பெண்ணின் பெருந்தக்க யாவுள " எனவும், வாழ்க்கை துணை நலம் என்று வள்ளுவர் வாக்கு வழியாகவும் பெண்ணின் சிறப்பு அறியலாம்.பெண்கள் தங்களின் கற்பு நெறியால் ஆண்களை காத்தது ஆண்களுக்கு பெருமை சேர்த்தது எல்லாம் கோவலன் கண்ணகி சத்தியவான் சாவித்திர , அரிச்சந்திரன் கதை வழியாக அறயலாம். பெண்ணறிவு நுண்ணறிவு - பெண்கள் தங்கள் மதி நுட்பத்தால் தன் கணவன்மார்களை காத்தது அவர்களின் வரலாற்று வழியாக அறியலாம், பெண்கள் தன் கணவர்களுக்காக கெளரி விரதம் இருந்து தனது தாலி பாக்கியம் நிலைக்க விரதம் இருந்து பெருமை சேர்ப்பது தற்போது நடைமுறையில் உள்ளதை அறியலாம். படிக்காசு புலவர் மாதர்களின் பெருமைகளை தங்களது கற்பு நெறியால் "வெண்தனலையும் சந்தனமாக்கியவர்கள் " என்று சீதையையும், சந்திரமதியையும் சுட்டிக்காட்டியுள்ளார் மேலுமும் " வேடனை எரித்தாள் " - நளனின் தமயந்தி நள ராசனால் விட்டு செல்லும்போது மலைப்பாம்பு தன்னை விழுங்கியபோது காப்பாற்றி வேடன் அவளை சீண்ட தூண்டியபோது அவனை எரித்தாள். மூவருக்கு பக்கமுடன் அமுது அளித்தாள் - அக்ரி முனிவரின் மனைவி அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகள் அமுது கேட்டபோது குழந்தையில்லாவீட்டில் விருந்து உண்ண மறத்தபோது அவர்களை மூவரையும் குழந்தைகளாக மாற்றி அமுது ஊட்டினாள் ஒருத்தி என பலவேறு நிகழ்வுகளை பெண்ணின் பெருமைபற்றி படிக்காசு புலவர் பாடல் வாயிலாக அறியலாம் என்று வாரியார் சுவாமிகள் பெண்ணின் பெருமையினை சிறப்பித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக