வெள்ளி, 21 மார்ச், 2014


யோகத்தின் எட்டு அங்கங்கள் இராஜயோகம் - அஷ்டாங்க யோகம் என்றும் கூறப்படும், இதில் முதலாவது இயமம் : இது அனைத்திலும் மிக முக்கிய மானது. ஏனெனில் முழுவாழ்க்கையையும் இது அடக்கியாள வேண்டுவது, இதில் ஐந்து பிரிவிகள் உள்ளன. 1) உள்ளம், உரை, செயலினால் எவ்வுயிரையும் துன்புறுத்தாமை. 2) உள்ளம்,உரை, செயலினால் பிறர் பொருளை கவராமை. 3) உள்ளம்,உரை, செயலினால் முழு பிரமசரியம் அனுஷ்டித்தல் 4) உள்ளம்,உரை, செயலினால் உண்மை அனுஷ்டித்தல் 5)பிறர் கொடுக்கும் பரிசுகளை பெற்றுக்கொள்ளாமை. இரண்டாவது யோகம் நியமம் உடலைப் பேணல் , நித்தமும் நீராடல் சுத்தமான உணவு கொளல் மூன்றாவது யோனம் ஆசனம் உடலை அமர்த்தும் நிலை, இடுப்பு , தோள்கள், தலை, இவற்றை நேராக வைத்து, முதுகு தண்டக்கு தொந்தரவு கொடாமல் விடுதலை அளித்தல் நான்காம் யோகம்: பிராணாயாமம் மூச்சை சரிவர அடக்கி ஆளுதல், (பிராணன் என்னும் உயிர் சக்தியை அடக்கி யாழ்வதற்காக) ஐந்தாம் யோகம் : பிரத்தியாகாரம் மனத்தை புறத்தே புலன்கள் வழி செல்லாது தடுத்து அதை உள்முகமாக திருப்புதல், மனத்தில் உள்ள பொருளை அறிய சிந்தித்தல் ஆறாவது யோகம் : தாரணை ஒரு பொருளின் மீது மனத்தை குவித்தல் ஏழாவது யோகம் : தியானம் மனத்தை குவித்து நிறுத்தி இடைவிடாது சிந்தித்தல் எட்டாவது யோகம்: சமாதி நமது முயற்சிகள் அனைத்திற்கும் குறிக்கோளான " ஞானஒளி " பெறுதல் , இராஜயோகத்தின் மூலம் கடவுளை அடைய விரும்புகிறவன் உடலாலும், மனத்தாலும், அறத்தாலும், (நற்குணங்களாலும்) ஞானத்தாலும், வலிமை பெற்று, இருக்க வேண்டும்,இப்பாதையில் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைத்து மேலே செல்லுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக