வெள்ளி, 14 மார்ச், 2014


திரு ஐந்தெழுத்தின் ஆற்றல் " கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே. திரு ஞானசம்பந்தர் அறியாமையால் கொலைத்தொழிலை செய்பவரானும், நற்குணங்களும், நல்லொழுக்கமும் இல்லாதவர்களாயினும், திருஐந்தெழுத்தைச் சொல்வார்களே ஆனால் எல்லா விதமான தீமைகளிலிருந்தும் நீங்குவார்கள் என்பது ஆன்றோர்கள் வாக்கு யாவருக்கும் நன்ைமயையே செய்யும் சிவபொருமானின் திருப்பெயராகிய "நமசிவாய" எனும் திருஐந்தெழுத்து அத்தகைய மேன்மையுடையதாகும். மிக எளிய வழிையத்த திருஞானசம்பந்தப் பெருமான் கூறியுள்ளார். தீமைகளிலிருந்து விடுபட ஆயிரக்கணக்கில் பொருட் செலவு செய்ய வேண்டியதில்லை. நான் தீயவன் நற்குணங்களே இல்லாதவன் என்று கவலைப் படவேண்டாம். பிராயசித்தம் / கழுவாய் என்னும் பெயரால் வெற்றுச் சடங்குகளை ெசய்து ஏமாந்து விட வேண்டாம், போலி வேடதாரிகளை கண்டு மோசம் போக வேண்டாம். இதோ இறைவரால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவரும், எலும்பை பெண்ணாக்கியவருமாகிய திருஞானசம்பந்த பெருமான் நமக்காக அருளியுள்ள இப்பாடலை துணையாகக் கொள்ளுங்கள் திரு ஐந்தெழுத்தினை "சிவாயநம" காலையும் மாலையும் 108 முறை உச்சரிங்கள் தீமைகள் யாவும் நீங்கி நலம்பல பெற்று நீடூழி வாழ்வீர்கள். திருச்சிற்றம்பலம் நன்றி ; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக