மாணி்க்க வாசகரின்
திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள்
திருப்பொற்சுண்ணம்
மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் என க் கொண்டு எல்லாம் ஆனபரம் பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீரதீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை இக் கட்டுரை வாயிலாக நாம் கண்டதை பாண்போம், மகளிர் இறைவனுக்காக இடிக்கப்படும் திருப்பொற்சுண்ணம் பற்றி மாணிக்கவாசகர் தன்ைன ஒரு தலைவியாகக் கொண்டு பாடும் பாடல்களில் கொண்ட கருத்துக்கோவை
1. திருப்பொற்சுண்ணம் இடிக்க வேண்டிய பொருட்கள்
உரல், உலக்கை, மெய் யெனும் மஞ்சள்
2.பொற்சுண்ணம் இடிக்க செய்ய வேண்டிய அலங்கார சம்பிரதாயங்கள்
மெழுக வேண்டும். கற்பூரம் காட்டவேண்டும். எங்கும் எழில் சுடர் வைக்க வேண்டும், உலக்கைக்கு மணி வகைகள் பூட்டப்படவேண்டும். உரலை பட்டாடை சுற்றி கட்ட வேண்டும். பொன்சிந்தி நிதி பரப்ப வேண்டும். பூமாலை, முத்துமாலை தொங்க விட வேண்டும். முளைக்குடம்வைக்க ேவண்டும். திருநீறு, குங்குமம் அணிந்து சித்தம்களிக்க வேண்டும்
3. பொற்சுண்ணம் இடிப்பவர் யார் யாரை அழைக்கிறார்?
கங்கை, கெளரி, சக்தி, சித்தி, சோமி, நாமகள் பார்ப்பதி, பார்மகள், மற்றும பபணியில் ஈடுபடும் மங்கையர்
சக்தி, சோமி,பார்மகள், நாமகள் இவர்கள் பல்லாண்டு இசையுடன் பாடவேண்டும்
சித்தி,கெளரி, பார்ப்பதி, கங்கை, இவர்கள் கவரி வீச வேண்டும்.
4, பொற்சுண்ணம் எங்ஙனம் இடிக்க வேண்டும்?
மணிவாசகர், தன்னை தலைவியாகக் கொண்டு பாடுவது)
கைவளையும், தோள்வளையும், சிலம்பும் ஒலி ெசய்ய , கூந்தலில் உள்ள மாலை ஆட, அம்மாலையில் உள்ள வண்டுகள் ரீங்காரம் ஒலிகக, சித்தம் சிவனிடத்து ஆட,ஆட. சிவனது கருணை விளங்க, தோளும், நெற்றியும், ஒருசேர, விளங்க, உலகோர் நம்மை பழிப்ப, நாம் அவரை பழிப்ப, அடியவர் கூட்டம், நம்மொடு கலந்து சிவ, சிவ என ஒலி எழுப்ப, நமது காதற் பித்து சிவனிடத்து பொருந்த,அதனால் நமது பிறவி, நம்மைவிட்டு அகற்ற, நம் கொங்கைகள் பக்தி ெபருக்கால், பூரிக்க, வாயிதழ் துடிப்ப " சிபெருமானே வணக்கம் வணக்கம் என்று சொல்லி பொற்சுண்ணம் இடிப்போமாக!
6.பொற்சுண்ணம் இடிக்ககும் போது யாரை வாழ்த்தி பாட வேண்டும் என்பது.
ெபருமானின் வீர தீரச்ெசயல்களான பிரமன் தலையை அறுத்தது, சூரியன் பற்களை பறித்தது, முப்புரத்தை எரித்தது, யானையை கெொன்று அதன் உரியை போர்த்தியது, காலனை காலால் உதைத்தது ஊணாக நஞ்சுண்டது, இவைகளை பாடி, அவர் அணிந்துள்ள கங்கணத்தையும், கையில் அறையில் அணிந்துள்ள அறவத்தையும்,அவர் வீற்றிருக்கும் சிவபுரம், சிவலோகம், பற்றியும், அவரது திருவடி, வாகனம், கையிலுள்ள மழுப்படை, சூலப்படை, ஆகியவற்றையும், நம்மை ஆண்டு கொண்ட நயத்தையும், நம்மை பணி கொண்ட வண்ணத்தையும்,சிவனத சிற்றம்பலத்து பெருமையையும், அவரும்அவரது ேதவியும், வந்து ந்ம்மை ஆளும் பொருட்டு பொற்சுண்ணம் இடிப்போமாக!
6. யாருக்காக இடிப்பது?
ஆதி அந்தம், இ்ல்லாதவனும், சோதி,/இருள் , துன்பம் / இன்பம், பந்தம் வீடு, பாதி / முற்று, மெய்மை,பொய்மை, வேதம்/ வேள்ளி, ஆக விளங்குபவனும் உமையொரு பாகனும், மங்கை பங்காளனும், முக்கண்ணனு மானவனும், அம்பலத்தாடுவனும் ஆன சிவபுரத்து ஈசனுக்கு
7, பொற்சுண்ணம் இடிப்பதால் பயன்.
பிறவியற்ற நிலை கிடைக்க
மேற்கண்ட வாறு பாடி ஆடி சிவபுரத்து ஈசனுக்கு திருப்பொற்சுண்ணம் இடித்து பாடும் பாடல்களில் சில காண்போம்,
பாடல் எண் : 1
முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
பொழிப்புரை:
தோழியர்களே! முத்துக்களாலாகிய நல்ல மாலையையும், பூமாலையையும் தொங்கவிட்டு முளைப் பாலிகையை யும், குங்குலியத் தூபத்தையும் நல்ல விளக்கையும் வையுங்கள். உருத்திராணியும், திருமகளும், நிலமகளும் கலை மகளோடு கூடித் திருப்பல்லாண்டு பாடுங்கள். கணபதியின் சத்தியும், கௌமாரியும், மகேசுவரியும், கங்காதேவியும், முன்வந்து வெண் சாமரை வீசுங்கள். எமது தந்தையும் திருவையாற்றை உடையவனுமாகிய எம் தலைவனைப் பாடி, அவன் நிரம்ப அணிதற் பொருட்டுப் பொன் போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்.
பாடல் எண் : 3
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே.
பொழிப்புரை :
அழகிய திருநீற்றை அணிந்து கொண்டு தரையை மெழுகுதல் செய்து மாற்றுயர்ந்த பொற்பொடிகளைச் சிதறி, நவமணி களைப் பரப்பி இந்திரன் உலகிலுள்ள கற்பக மரத்தின் தோகைகளை நட்டு எவ்விடத்தும் அழகிய தீபங்கள் வைத்துக்கொடிகளை ஏற்றுங்கள். விண்ணவர்க்குத் தலைவனும் பிரமனுக்கு முதல்வனும் சக்கரத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் அழகிய முருகனுக்குத் தந்தையும் எம் நிலையில் உள்ளாரையும் ஆட்கொள்ளுகின்ற உமா தேவியின் கணவனுமாகிய இறைவனுக்குப் பொருந்திய பொன் போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
வையகம் எல்லாம் உரல தாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
பொழிப்புரை :
உலகமுழுவதும் உரலாகக் கொண்டு மகாமேரு என்கிற உலக்கையை உள்ளத்திலே நிலைநாட்டி, உண்மை என்கிற மஞ்சளை நிறைய இட்டு மேன்மை தங்கிய அழகிய நல்ல திருப்பெருந்துறையில் இருப்பவனது செம்மையாகிய திருவடியைப் பலகாற்பாடிச் செம்பொன் மயமான உலக்கையை வலக்கையில் பிடித்துத் தலைவனாகிய அழகிய தில்லைவாணனுக்குத் திருமுழுக்கின் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு . வை.பூமாலை
நன்றி திருவாசக ஒளிநெறி கட்டுரை
மேலும் ஆன்மிகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக