செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் திருத்தெள்ளேணம்

மாணி்க்க வாசகரின்
திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் திருத்தெள்ளேணம்
மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் எனக் கொண்டு எல்லாம் ஆன பரம்பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீர தீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை திருவெம்பாவை திருச் பொற்சுண்ணம் , திரு அம்மானை போன்ற பதிகப்பாடல் கள் வாய்லாக கண்டோம், இக் கட்டுரை வாயிலாக திருத்தெள்ளேணம் என்ற கும்மிபாட்டு போன்று தெள்ளேணம் கொட்டிப்பாடும் பாடல்கள் பற்றி நாம் பாண்போம்,
திருத்தெள்ளேணம் ;
மணிவாசகர் தாம் தலைவி யாக நின்று தமது தோழியரை அழைத்து தமக்கு ஆண்டவன் அருளிய திருஅருட் செயல்கைளயும், ஆண்டவனுடைய பெருமைகளையும் பற்றி பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று கூறுவது இப்பதிக திருத்தெள்ளேணம் பதிகம்
சிவனாருடைய சிலம்பாடல்களையும், அவர் ஆண்ட திறத்தையும் அவருடைய கருணை கழல்களையும், அவருடைய சீரையும், அவர் வீற்றிருக்கும் திருவாரூரையும் பாடி பின்னும் அவர்அடியேனுக்கு அருளிய அருட் கழல்கள், என் சித்தத்தில் புகுந்ததையும், அதனால் ” நான் ” என்ற ஆணவம் கெட்டு, என் ஊன், உயிர், உணர்வு, உள்ளம், செயல், எல்லாம் கெட்டு,நாம் ஒழிந்து சிவமாம் தன்மையை அடைந்தததையும், தித்திக்கும் வகையில் பாடி அவர் திருவடியை தன்மீது வைத்துலுமே நான் தேவான தன்மையை அடைந்ததையும், மறந்தும் தன் திருவடியை நான் மறவா வண்ணம் அவர் அருளிய கருணையிைன பாடி உலகம் சிரிக்கும் திறத்தை பாடி, நனவிலே என்னை ஆண்டு கொண்டு அருளியதையும், ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றுமிலா அவருக்கு ஆயிரம் திருநாமங்களை பாடி, செந்துவர் வெண்ணகையீர் நும் கண்களில் நீர் மல்க தென்னா தென்னா என்று நாம் தெள்ளேணம் கொட்டு வோமாக என்று அவர் தம் பாடலகள் அமைந்ததை சில பாடல்கள் வாயிலாக இங்கே காணலாம்.
பாடல் எண் : 1
திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ
.
பொழிப்புரை:
திருமாலும் வராகவுருவங் கொண்டு நிலத்தைப் பிளந்து சென்றும் அறியாத திருவடியை யாம் அறிந்துய்யும்படி ஒரு அந்தணனாய் எழுந்தருளி எம்மை ஆண்டு கொண்டவனும், திரு நாமங்கள், வடிவங்கள் இல்லாதவனுமாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
பாடல் எண் : 3
அரிக்கும் பிரமற்கும்
அல்லாத தேவர்கட்குந்
தெரிக்கும் படித்தன்றி
நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும்
என்பதுகேட் டுலகமெல்லாஞ்
சிரிக்குந் திறம்பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
பொழிப்புரை :
திருமால் பிரமன் முதலியோர்க்கும் இன்னபடி யென்று தெரிவிக்கலாகாமல் நின்ற பரமசிவமே எழுந்தருளி நம்மை மனமுருகப் பண்ணி ஆண்டுகொள்ளும் என்னும் செய்தியைக் கேட்டு உலகத்தாரெல்லாரும் நகைக்கும் விதத்தைப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.
ஆவா அரிஅயன்இந்
திரன்வானோர்க் கரியசிவன்
வாவாஎன் றென்னையும்பூ
தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவடென்
தலைமேற்பொ றித்தலுமே
தேவான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
பொழிப்புரை :
திருமால், பிரமன் முதலியோர்க்கும் அருமை யாகிய பரமசிவம், ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் வலிந்தாண்டு கொண்டு, என் தலைமேல் தன் திருவடியைப் பதித்த அளவில் என் தலைக்கு ஓர் அழகுண்டான விதத்தைப் பாடித் தெள்ளேணம் கொட்டு வோம்.
கன்னா ருரித்தென்ன
என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித்
தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச்
செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ.
பொழிப்புரை :
கல்லில் நார் உரித்தாற்போல என்னையும் தன் பெருங்கருணையினால் தனது பொன்போலும் அருமையாகிய திருவடியைப் பணிவித்து ஆட்கொண்ட எம்பெருமானது பெரும் புகழைப் பாடி அக்களிப்பால் தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டுவோம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
நன்றி ; திருவாசக ஒளிநெறி கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக