வெள்ளி, 22 ஜனவரி, 2016

திருச்செந்தூர் கடற்கரையில் மூவர் சமாதி

திருச்செந்தூர் கடற்கரையில் மூவர் சமாதி









இயற்கை எழில் சூழ்ந்த திருச்செந்தூர் கடற்கரையில் முருகப்பெருமான் குருவாக அருள்பாலிக்கிறார். மிக நீண்ட கடற்கரையில் இயற்கை எழில் சூழ இதன் அருகே அமைந்துள்ளது மூவர் சமாதி கோவில். முருகனை ஆராதனை செய்து முருகனுக்கு கோவில் எழுப்பி மகான்களாக வாழ்ந்த, மூன்று துறவிகளுக்கு இங்கு கோவில் எழுப்பபட்டுள்ளது.
கடற்கரை அருகே சென்று மூவர்சமாதி எங்கே இருக்கிறது எனக்கேட்டால் சொல்வார்கள். அளவுக்கதிகமான சக்தியை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஜீவசமாதி கோவில்கள் உள்ளுக்குள் புத்துணர்ச்சியை தூண்டி விட்டு உள்ளுக்குள் இருக்கும் ஆற்றலை தூண்டிவிடும் வலிமை வாய்ந்தது. இக்கோவில் ஒருவர் ஜீவ சமாதி ஆகியிருந்தாலே அந்த கோவிலில் நல்லவிதமான அதிர்வலைகள் நிறைந்து காணப்படும்.

இங்கு அருகருகே மூவர் சமாதியாகியுள்ளதால் மிகப்பெரும் சக்தி வாய்ந்த இடமாக காட்சியளிக்கிறது. இங்கு உட்கார்ந்து திருச்செந்தூர் முருகக்கடவுளையும் இங்குள்ள மூன்று சுவாமிகளையும் மனக்கண் முன் நிறுத்தி தியானம் செய்தால் மனம் இலகுவாக இருக்கும் அமைதியடையும். பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த போது, திருச்செந்தூர் முருகன் கோவில் சீரமைக்கப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

எனினும் தற்போது உள்ள கோவில்களை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும் தங்களது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர்.

இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது. குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் இங்கு சென்று நம் கோரிக்கைகளை வைத்து இந்த ஜீவசமாதிகளில் உட்கார்ந்து மனதார தியானித்து வந்தால் நம் மனக்குறை தீர்ந்து சிறப்பாக வாழலாம்.

தியானம் செய்வதற்க்கு ஏற்ற அமைதியான கடற்கரை சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செல்லும் வழி: சென்னை அல்லது எந்த ஊர்களில் இருந்து செல்பவர்களும் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று முருகனை வழிபட்டு கடற்கரை அருகில் உள்ள இவர்களையும் வழிபட்டு வருவது சிறப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக