வெள்ளி, 22 ஜனவரி, 2016

திருவாசகத்தி்ல் மணிவாசகர் காட்டும் வரலாறுகள்

திருவாசகத்தி்ல் மணிவாசகர் காட்டும் வரலாறுகள்

1, கிராத வேடம்
 தவம் செய்து கொண்டிருந்த அரிச்சுணனின் தவத்தைக் கலைக்க பன்றி உருவுடன் வந்த மூகாசுரனைச் சிவபிரான் வேட்டுவ உருவுடன் வந்து அம்பு எய்திக் கொன்ற வரலாறு கிராத வேடம் எனப்படும். இதன் பொருட்டு விழித்த விஜயனும் தானும் அம்பு விட இருவரின் அம்பும் அசூரனான மூகாசுரன் ேமல் பட பன்றிக்காக இருவரும் சண்டையிட விஜயன் வில்லால் அடித்தது  இதுவே  " இறைவனை வில்லால் அடித்தான் விஜயன் " என்ற கூற்று  காணப்படுவதைக் காணலாம்.

2, மெர்கணி அருளிய மேனி

சிவதரிசனம் ெசய்த பின்னரே உண்ணும் நியமத்தை வைத்திருந்த செட்டியார் ஒருவர் வெளியூர் சென்ற போது சிவ பூசை செய்ய சிவலிங்கம் எங்கே தேடியும் இல்லாத போது  அவருடைய மைத்துனர் அவருக்கு தெரியாமல் குதிரைக்கு கொள் வைக்கும்  பையை ஓர் இடத்தில் வைத்து சிவலிங்கம் போல் காட்சி தரும்படி அமைத்து அந்த செட்டியாருக்கு இதோ சிவலிங்கம் என்று காட்டி, சிவ பூசை செய்ய செய்தனன். செட்டியார் பூசை முடித்து உணவு உண்ட பின், மைத்துனன் நகைத்து இது சிவலிங்கம் மன்று, குதிரை உணவு தின்னும் உணவு கொள்ளுப் பை  என்று கூறி நகைத்து கொள்ளுப்பையை எடுக்க  முயன்றான். ஆனால் அக்து அசையாமல் உண்மையான சிவலிங்கமாகவே காணப்பட்டது. மொக்கனி என்பது குதிரையின் கொள்ளுப்பை  எனவே மொக்கனி / சிவலிங்கமாக ஆன பின் மொக்கனிஈசனார் என்னும் பெயர் பெறறது. இதுவும் ஒரு மணிவாசகர் கூறும் மொக்கனிஈசர் வரலாறு.

3. ஐயாறப்பர் தனிற் சைவனானது.
திருவையாற்றில் ஐயாறப்பருக்கு  பூசை செய்யும் ஆதி சைவர்  ஒருவர் தனியாக காசிக்கு சென்றார். திரும்பி வர நெடுநாள் ஆகியும், அவர் வராமையால் அவருக்கு  உரிய காணி ( நிலம்) முற்றும் தமக்கு உரிமை ஆகும் படி அவருடன் வசித்த மற்ற 28 ஆதி சைவர்களும் உரிமை யாக்கிக் கொண்டனர். காசிக்கு சென்ற ஆதி ைசவரின் மனைவியும் மைத்துனனும் மிக வருத்தத்துடன் ஐயாறப்பரிடம் வேண்டினார்.  பெருமான் காசிக்கு சென்ற ஆதி சைவராகவே  கங்கை நீருடன் காசியிலிருந்து வருவது போலவே நேரில் வந்து, சிவலிங்கத்திற்கு பூசை செய்தார். பின் சான்றோர்கள் முன்னிலையில் ஆதிசைவருக்கு நேர்ந்த துயர நிகழ்வு ஆன காணி நிலத்தை மற்ற ஆதி சைவர்களிடமிருந்து மீட்டிக் கொடுத்தார். இது கண்டு ஆதிசைவரின் மனைவியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்து போது, காசிக்கு சென்ற ஆதிசைவரே அவர்கள்  முன் வந்து சேர , அந்த அதிர்ச்சியில் மூழ்கியிருந்த அவர்தம் மனைவி மற்றும் ஏனையோர் தங்களுக்கு காணி நில்த்தைத மீட்டிக்கொடுத்தது, ஐயாறப்பர் என்பதை கண்டனா்.  அப்போது பெருமான் அடியார் குறை தீ்ர்க்கும் ஐயாறப்பர் என்ற வரலாறு காணும் படி மணிவாசகர் தம் திருவாசகத்தில் காட்டுகின்றாா்.

4. குற்றாலத்தில் குறியாய் இருத்தல்
முன் ஒருகால் திரு முற்றம் என்னும் பெயர் கொண்ட தலத்திற்கு அகத்திய முனிவர் சென்றார். அத்தலத்தில் திருமால் கோயில் கொண்டிரு்ந்தார்.  அகத்தியரை கண்ட திருமாலின் அடியார்கள் அவருடைய திருநீற்று பட்டையினையும் கண்டிகையையும் பார்த்து நீர் இத் தலத்தில் அணுகல் ஆகாது  நீர் ஒரு சைவர், எ்னறனர். நீர் இங்கிருந்து நீங்குக. என்று அவரை வெரட்டினா். வெரட்டப்பட்ட அகத்தியர், திருமாலின் அடியார் போல் வேடம் கொண்டு, அந்த தலத்திற்கு மறுபடியும்,வந்தார். யாம் அழகர் மலையிலிருந்து வருகிறோம். வைணவர்கள்  உடனே பூசைக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்தனா். பூசைக்கு அகத்தியரிடம் கொடுத்தனா். அப்போது அகத்தியர் அவர்களை பார்த்து, " யாம் செய்யப்போகும் பூசையைப் பாருங்கள்  " என்று சொல்ல சிவபொருமானை மனதில் கொண்டு, திருமாலின் திருமுடிமேல் தனது கையை வைத்து, " குறுகு, குறு " கென அழுத்தினார். உடனே திருமாலின் உருவம்,சிவலிங்கமாக   குறுகியது. இதைக் கண்ட வைணவர்கள், இவன் முன் வந்த அகத்திய முனிவனே என்று கண்டு கொண்டனா். அவரை வளைத்துக் கொண்டனா். அப்போது முனிவரின் வெகுளித்தீ அவர்களை சுட்டெரிக்க அவர்கள் ஒடி மறைந்தனர். என்பது வரலாறு. அத்தலம் தான் இப்போது குறுகு குறுகென ஆன குற்றாலம்  என வழங்கப்படுகிறது.
   இவ்வரலாற்றினை வரிவை கந்த பூராணம் 2/28 திருக்குற்றால படலத்தில் காணலாம்.

(இதன் தொடர்ச்சி இன்னும் தொடரும்)
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை்.பூமாலை
நன்றி திருவாசகம் ஒளிநெறி கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக