செவ்வாய், 5 ஜனவரி, 2016

மனம் கவர்ந்த மகான் மாணிக்கவாசகர்


மனம் கவர்ந்த மகான் மாணிக்கவாசகர் "தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்," தேனினினும்இனிய திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் , ஏனைய சிவனடியார்களை விட என்னை ப் பொருத்தவரை கொஞ்சம் மேலாக சிவனிடம்நெருக்கமானவர், அது எவ்வாறெனின், சிவனே தன்னை ஆராதிக்கும் படி ஆணையிட்டு, அதன்பின் திருவாசகம் அருளினார். சிவனே மாணிக்கவாசகருக்கு குருவாய் தோன்றி, ஞான உபதேசம் செய்தார். மாணிக்க வாசகர் பாட அதனை எம்பெருமானே தில்லை குளத்து படிக்கட்டில் அமர்ந்து எழுதியதாக வரலாறு. இதனால் திருவாசகம் தேன் வாசகம் ஆனது. முழுமுதற் கடவுள் சிவபிரான் பெண்சுமந்த பாகத்தன், விண்சுமந்த புகழுடையான், மதுரையில் மண்சுமந்தான், மன்னன் கைப்பிரம்மால் புண் சுமந்தான் - எதற்காக? வாதவூரரின் பண் சுமந்த பாடலுக்காக இறைவனே இவ்வாறு விரும்பி திருவாதவூரார் பாட தன் கைப்பட ஓலையில் எழுதியதுதான் இத் திருவாசகம். இராவணன் மனைவி மண்டோதரி வரம் கேட்டு தவம் இருக்க , சிவபிரான் அப்போது 1000 துறவிகளுக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார். மண்டோதரிக்கு வரம் அளிக்க புறப்பட்ட சிவபெருமான் தன் அருகில் இருந்த ஒரு துறவிடம் ஆகம வேதங்களை பத்திரமாக வைத்திருக்குமாறு சொல்லி விட்டு அதனை கொடுத்து சென்றார். பிறகு இராவணனுக்கு அக்கினி தீர்த்தமாக உத்திரகோசமங்கையில் பெரிய ஜுவாலை நெருப்பாக தோன்றி காட்சி கொடுத்தார். அந்த நெருப்பில் 999 துறவிக் ஐக்கியமானார்கள். ஒரு துறவியாக வேத ஆகமங்களை வைத்திருந்த துறவி மட்டும் அதனை காக்கும் பொருட்டு அந்த ஜோதியில் கலக்கவில்லை.ஜோதியில் ஐயக்கிமான 999 துறவிகள் லிங்கமாகினர். இனனும் இராமேஸ்வரத்தில் இந்த 999 லிங்கம் காணப்படுகிறது. விடுபட்ட ஒரு துறவியிடம் எம்பெருமான் " நீ அடுத்த பிறப்பெடுத்து என்னை ஆராதிக்கும் பக்தான ஆவாய் " என வரம்அளித்தார். அந்த துறவிதான் அடுத்த பிறப்பில் மாணிக்கவாசகராக மதுரை வாதவூரில் பிறந்தார் என்பது வரலாறு. சம்பந்தர் - சிவனை ஆட்சி நடத்தும் அரசனாகவும் நாவுக்கரசர் - சிவனை தந்தையாகவும் (சிவனைப்பாடினார்) சுந்தரரர் - வரம் அளிக்கும் ஈசரிடம் வரம் பெறும் சூட்சமம் குறித்து (பொன்னை) பாடினார்கள். ஆனால் மாணிக்கவாசர் தன்னை அடிமையாக ஏற்க வேண்டும் என மிக்க பணிவாக தன்னை மிகவும் தாழ்த்தி பாடல்கள் பாடினார் சைவ சித்தாந்த மார்க்கமான நெறியில் ஞானசம்பந்தர் கொண்டது சத்புத்திரமார்க்கம் நாவுக்கரசர் கொண்ட நெறி தாசமார்க்கம் ( இறைவரை ஏஜமானனாக வழிபடுதல்) சுந்தரரர் கொண்ட நெறி சகமார்க்கம் ( இறைவரை நண்பனாக -தோழனாக கொண்டு வழிபடுதல்) மாணிக்கவாசகர் கொண்ட நெறி சன்மார்க்கம் ( இறைவரை குருவாகவும், ஞானாசிரியாக கொண்டு வழிபடுதல்) இவ்வாறு மணிவாசர் சிவபிரானை தன் குருவாகவும், ஆசிரியாகவும் கொண்டு அவருக்கு பணிவு கொண்டு அழுது புலம்பி வழிபடும் முறையினைக் கொண்டு தன்னை மிகவும தாழ்த்தி பாடும் பாடல்களை பாடினார். தில்லயைில் புத்த மதம் சிறந்தது என்று போட்டி போட்ட ஈழ மன்னனின் ஊமை மகளின் வாயாலே திருச்சாழல் ( பாடல்களை பாட வைத்தவர். அந்த ஈழ மன்னனும் அவருடன் வந்த புத்த பிட்சுக்களும் சைவநெறி ஏற்று சிவனை அடைந்தனர். இவவாறு மணிவாசகர் சிவனின் பெருமைகளை தன் பதிகப்பாடல் களால் பாடியதோடு இந்து சமயத்திற்கும் பெரும் தொண்டாற்றுனார். என்பது வரலாற்று உண்மை. இவர்தன் பாடல் பதியங்கள் வாயிலாக தான் பெற்ற பேறுகளையும் தான் கண்ட காட்சிகளையும் தானே கூறும் பாடல் வரிகள் மூலம் அவர் உணர்த்தும் ஒளிநெறிகளை காணலாம். திருவடி தீட்சை பெற்றது திருவிடை மருதூரில் பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்து திருவடி தீட்சை அருளினார். நாரணன் அறியா திருவடியால் என சென்னியில் வைக்கப்பெற்றேன். கல்லாத புல்லறினுள் கடைப்பட்ட நாயேனை பெருமான் வல்லாளானாய் வந்து பல்லோரும் தாண என் பசு பாசத்தை அறுத்து கல்லை கனியாக்கும் வித்தையில் கல் நெஞ்சை உருகும் படி செய்து என்னை நாடறிய நற்பாற் படுத்தினார். தாய்போல இன்னருள் செய்து என்னை தெளிவாக்கினார். என்பொருட்டு பல திருவிளையாடல்கள் புரிந்து என்னை ஆட்கொண்டார் ! நரியை பரியாக்கினார் 2. மன்னன் எனக்களித்த தண்டனைக்கு வைகையாற்றில் கங்கையை வரவழைத்து பெருக்கெடுக்க செய்து கரையை அடைக்க பிட்டுக்கு மண் சுமந்து, மன்னன் பிரம்மால் புண் சுமந்தவர் எம்பெருமானார். திருப்பெருந்துறையில்தரிசனம் அடியேனுக்கு தம் பாதமலரை காட்டினார் பெருமானே " நீ வா " என்று நான் அழைக்க அவர் வர நான் அவர் கழலை கண்ட அன்றே உய்ந்தேன் அரிக்கும் அயனுக்கும் எட்டாத தமது மலரடியை காட்டி அப்பன் என்னை ஆண்ட கொண்டு எனக்கு திருவடி காட்டி அருள்புரிந்தான். அத்துடன் இல்லாது திருவாதவூரில் வந்து அடியேனுக்கு பாத சிலம்பொலி காட்டி அருளினன். என்ற வாறு தனக்கு சிவபிரான் அங்கங்கே என்பொருட்டு தான் செய்த திருவிளையாடல்களையும், அவர் தனக்களித்த காட்சிகளையும் தன் பாடல் வாயிலாக கூறியதினைக் திருவாசகப்பாடல்களால் காணலாம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவருக்கு இறைவா போற்றி! மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக