வியாழன், 7 ஜனவரி, 2016


மாணி்க்க வாசகரின் திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் என க் கொண்டு எல்லாம் ஆனபரம் பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீரதீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை இக் கட்டுரை வாயிலாக நாம் கண்டதை பாண்போம், மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகையில் இது திருவெம்பாவை. 7 வது பதிகம் திருவெம்பாவை; இப்பதிகம் சிவனிடத்தில் பக்தி கொண்டு ஈடுபட்ட தலைவியும், தோழியர்களும், உறங்குகின்ற ஒரு தோழியை எழுப்புவதைக் கூறுகின்றது. சிவபிரானுக்கும் அவருடைய அடியார்களுக்குமே ஈடுபடுவோம் என்பதையும், பெருமானுடடைய புகழை பாடி தாமரைப் பொய்கையில் மார்கழி மாதத்தில் நீராடுதலையும் கூறி இறைவன் திருவடியை கூட (அடைய) வேண்டுமென விருப்பத்தை வெளிப்படுத்துகினறது. பாடல் 1 பாடல் எண் : 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய் . பொழிப்புரை: ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு! திருச்சிற்றம்பலம் நன்றி திருவாசக ஒளிநெறி விளக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக