மாணி்க்க வாசகரின்
திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள்
மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் என க் கொண்டு எல்லாம் ஆனபரம் பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீரதீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை இக் கட்டுரை வாயிலாக நாம் கண்டதை பாண்போம், மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகையில் இது திருஅம்மானை
இதுவும் பண்டைகாலத்தில் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று
கையில்வளையல் ஒலிக்க, காதில் குழல் ஆட, கருங்குழல்
புரளவும், கூந்தலில் உள்ள வண்டுகள் ரீங்காரம் ஒலிக்கவும், அன்பர்க்கு மெய்யனும், அ்ல்லாதவர்க்கு அல்லாதவனுமான ஜோதியின் வடிவமான சிவபிரானை ஆடி பாடுவார்கள்,
பெருந்துைற பெருமான் பரிமேல் வந்து தமக்கு ஆனந்தம் தந்ததையும்
2. தனது கருணை வெள்ளத்தில் தம்மை அழுத்தி, அந்தணனராய் வந்து ஆண்டு அருளியதையும்
3. பெருமான் மண் சுமந்து பாண்டிய மன்னனிடம்பிரம்படி பட்டு புண் பட்டதையும்
4. தாம் ( தலைவியான மணிவாசகர்) அவரொடு கூடுவதையும், ஊடுவதையும் கூறி தமது பற்றறப் பற்றிய பேரானந்த இன்பத்தை யும் பாடி ஆடுவோமாக என அம்மானை பாட்டுக்கள் கூறுகின்றது.
இதில் கண்ட ஒரிரு பாடல்கள்
பாடல் எண் : 8
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்
பொழிப்புரை:
அன்பர் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம்
பாடல் எண் : 10
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்
பொழிப்புரை:
தேவதேவனும், அரசர்க்கரசனும், திருப்பாண்டி நாட்டை உடையவனும், பெண்பாகனும், அடியேனை ஆட்கொண்ட வனும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக