தொகுப்பு ; வை.பூமாலை
- மாணி்க்க வாசகரின் திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள் கோதும்பி மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் எனக் கொண்டு எல்லாம் ஆன பரம்பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீர தீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை திருவெம்பாவை திருச் பொற்சுண்ணம் , திரு அம்மானை போன்ற பதிகப்பாடல் கள் வாய்லாக கண்டோம், இக் கட்டுரை வாயிலாக கோதும்பி என்று தும்பியிடம் பேசுவது போன்று பாடிய பாடல்கள் பற்றி நாம் பாண்போம், மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகையில் இது திருவெம்பாவை. கோதும்பி என்னை ஆண்டு கொண்டு நாய் மேல் தவிசிட்டது போல என்னை ஒரு பொருளாக்கிய பெருமான், தில்லை அம்பலத்ேத ஆனந்த தேன் சொரியும் கூத்துடைய பொருமான், எனது சித்த விகார கலக்கத்தை தெளிவித்து, மரணம் பிறப்பெண்ணும் இவை இரண்டின் மயக்கறுத் கருணைக் டல் ஆகிய எனது தலைவர் என்னை கூடுதற்கு வேண்டி , அரச வண்டே ! நீ சென்று என் உள்ளத்து உள்ள துயரம் எல்லாம் ஒன்று விடாமல் நீ அவரிடம் ஊதித் தெரிவிப்பாயாக ! என்று தன்னை ஒரு தலைவியாக க் கொண்டு சிவபெருமானிடம் தூது செல்ல வண்டினிடம் கூறி பாடும் பாடல்கள் கோதும்பி என்ற திருவாசகப்பதிகம் இதன் பாடலகள் சில இங்கே காண்போம். தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! நீ, மிகவும் சிறிதாகிய மலர்த்தேனை உண்ணாமல், நினைத்தல், காண்டல், பேசுதல் என்னும் இவற்றைச் செய்கிற, எல்லாக் காலங்களிலும் வலிய எலும்புகளும் உருகும்படி இன்பத்தேனைப் பொழிகின்ற கூத்தப்பிரானிடத்தே சென்று ஊதுவாயாக. பாடல் எண் : 4 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! கண்ணப்பனது அன்பு போன்ற அன்பு என்னிடத் தில்லையாதலைக் கண்டும், என்மீதுள்ள பெருங் கருணையால் வாவென்று கூவியாட்கொண்ட சிவபெருமானிடம் சென்று ஊதுவாயாக. பாடல் எண் : 6 வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! செல்வம், மாதர், மக்கள், குலம், கல்வி என்று பிதற்றித்திரிகின்ற இந்தப் பித்தவுலகில், பிறப்பு இறப்பு என்கிற மனவிகாரக் கலக்கத்தை எனக்கு ஒழித்தருளின ஞானவுரு வனாகிய இறைவனிடத்திற்சென்று ஊதுவாயாக. நோயுற்று மூத்துநான் நுந்துகன்றாய் இங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. பொழிப்புரை : அரசவண்டே! பிறவிப் பிணியை அடைந்து முதிர்ந்து, இங்கு இருந்து - நான் தாய்ப் பசுவால் தள்ளப்பட்ட கன்று போல இவ்வுலகத்திலிருந்து வருந்தி நின்ற என்னைத் தாய் போலக் கருணை செய்தாண்டருளின இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக. திருச்சிற்றம்பலம்
tp://vpoompalani05.blogspot.in/
- http://vpoompalani05.wordpress.c
- http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக