வேதத்தின் பொருளாக இருக்கும் காயத்ரி தேவியை அரிதாக சில கோயில்களில் சிலை வடிவில் காணலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு முன்புறம் ஒரு தூணில் காயத்ரி தேவி காட்சி தருகிறார். சிதம்பரத்திலும் இந்த தேவிக்கு தனிக்கோயில் உள்ளது. இக்கோயிலில் காயத்ரி அன்னை வெண் தாமரை மீது அமர்ந்து ஐந்து திருமுகங்களுடன் பத்துக் கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம், தாமரை, ஏடு ஆகியவற்றை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.
பக்தர்கள், இத்தேவியை காலையில் "காயத்ரி' ஆகவும் மதியவேளையில் "சாவித்திரி' ஆகவும் மாலையில் "சரஸ்வதி' ஆகவும் பாவித்து வணங்குகிறார்கள். மாணவர்கள் காயத்ரி தேவிக்கு தாமரை மலர் அணிவித்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம்.
சாம்பலே பிரசாதம்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயமும் ஆனைமலை மாசானியம்மன் ஆலயமும் மயானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன. இவ்விரு இடங்களிலும் சாம்பலே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயமும் ஆனைமலை மாசானியம்மன் ஆலயமும் மயானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன. இவ்விரு இடங்களிலும் சாம்பலே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும்.
மூடியிருக்கும் மூலவர் சந்நிதி
கடலூர் அருகே உள்ள திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அம்மன் பெயர், அம்புஜாட்சி! இத்தலத்தில் இறைவன் அம்பாளோடு இருப்பதால் மூலவர் சந்நிதி எப்போதும் திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் அர்த்த ஜாம பள்ளியறை பூஜைகள் கிடையாது. கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தன்று மட்டும் தீபாராதனை நடைபெறும்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக