புதன், 26 அக்டோபர், 2016

கருத்துக் கதை கஞ்சனும் பொன் உருண்டையும்

கருத்துக் கதை
கஞ்சனும் பொன் உருண்டையும்

கொடுப்பது தெய்வகுணம். கொடையும் பிறவிக்குணம் என்பார்கள். கொடுக்கும் குணம் பிறவி இல்லாமல் செய்துவிடும். இவற்றையெல்லாம் ஒரு செல்வந்தர் கேள்விப்பட்டிருந்தார். படித்திருந்தார் ஆனால் சம்பாதித்த செல்வத்தை தான தருமங்கள் செய்ய மனம் அவ்வளளவு எளிதில் இடம் தரவில்லை. பின்னால் செய்யலாம் என்று எண்ணினார். அவரோ நகை வியாபாரி மாதத்திற்கு நூறு கிராம் பொன் தருமத்திற்கு என்று மிகவும் சிரமப்பட்டு எடுத்து வைப்பார். அவ்வளவு எளிதில் மனம் இடம் தருவதில்லை.
இப்படி நாற்பது வயது முதல் சேர்த்து வைக்கத் தொடங்கினார். தமது வயதான காலத்தில் தானம் செய்யலாம் என்று சேர்த்து வைத்த பொன்னை எல்லாம் மொத்தமாக உருக்கி ஒரு கை அளவு உருண்டையாக செய்து வைத்தார். அவருக்கு வயது எண்பத்தைந்து ஆயிற்று.
ஒரு நாள் திடீர் என்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது, மருத்துவர் இன்று மாலையுடன் சரி என்று சொல்லிவிட்டார், கண் பஞ்சடைகின்றது, வாய் போச இயலவில்லை. அவரது படுக்கையைச் சுற்றி மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து விட்டார்கள். அவருக்கு பொன் உருண்டை நினைவு வந்தது. இப்போது தருமம் செய்து விட வேண்டும் என எண்ணினார். வாய் பேச முடியவில்லை, அருகில் உள்ள மனைவிக்கு தான் தெரியும் பொன் உருண்டை வைத்த இடம் இதை தருமம் செய்வதற்காக வைத்துள்ளார் என்பதும் மனைவிக்குத் தெரியும்.
வலது கையை உயர்த்தி பொன் உருண்டையைக் கொண்டுவா என்று சைகை காட்டினார், பலமுறை சைகை காட்டினார். மனைவி அசையவில்லை. உற்றார் உறவினர்கள் எல்லாம் கடைசி காலத்தில் ஏதோ ஆசைப்பட்டு கேட்கிறார் கொண்டு வந்து கொடுங்கள் என்று கூச்சலிட்டனர், இவர் பொரிவிளங்கா உருண்டை திண்பதற்கு கேட்கிறார் போலும் என்று எண்ணி கொண்டுவரச் செய்தனர் ஆனால் அவர் மனைவி இது தொண்டையில் அடைத்துக்கொள்ளும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டனர் மனைவி. செல்வந்தர் கண்களை மூடிவிட்டார். எமதூதர்கள் அவரது உயிரை கொண்டு சென்று நரகில் போட்டார்கள்.
குறிப்பு : கையில் உள்ளபோதே நல்லதை அன்றே செய், நாளைக்கு என்று எண்ணாமல் தருமத்தைச் செய்துவிட வேண்டும். செய்த புண்ணிய செயல்களே கூட வரும் சேர்த்த செல்வம் நம்முடன் வரா.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை,பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக