திங்கள், 24 அக்டோபர், 2016

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் திருநாவலூர்

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் திருநாவலூர்



சுந்தரரர் அவதாரத்தலம்
திருநாவலூர் 
(திருநாமநல்லூர்)

இறைவர் திருப்பெயர் : பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை.
தல மரம் : நாவல்.
தீர்த்தம் : கோமுகி தீர்த்தம்.
வழிபட்டோர் : சுக்கிரன்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - கோவலன் நான்முகன்.
Tirunavalur temple
தல வரலாறு

இத்தலம் சுக்கிரன் வழிபட்ட தலம்.

சிறப்புகள்

மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநல்லூர் ' என்று வழங்குகின்றனர்.

சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி.
அவதாரத் தலம் : திருநாவலூர்.
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : திருநாவலூர்.
குருபூசை நாள் : மார்கழி - திருவாதிரை.
சுந்தரர் அவதாரத் திருத்தலம்.
அவதாரத் தலம் : திருநாவலூர்.
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம் : திருஅஞ்சைக்களம் / திருக்கயிலாயம்
குருபூசை நாள் : ஆடி - சுவாதி.
இஃது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.
திருமுறைத் தலமற்றுமன்று அருணகிரிநாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது.

உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது; பரவை, சங்கிலியார் சூல எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார்.

தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.
நரசிங்க முனையரையர் அவதரித்து, அரசு வீற்றிருந்தவர்; குறுநில மன்னர்.
அவதாரத் தலம் : திருநாவலூர்.
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : திருநாவலூர்.
குருபூசை நாள் : புரட்டாசி - சதயம்.
உள்பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

கருவறைச் சுவரில் சண்டேஸ்வரர் வரலாறு சிற்ப வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களை துணிப்பது, இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது.

நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிப்பட்ட சுக்கிரலிங்கம் உள்ளது.

நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார்.

கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு; கண்டு மகிழத் தக்கது.

சுந்தரர் மடாலயம் அழகான முன்மண்டபம்; சுந்தரர் கையில் செண்டுடன் அழகாக காட்சிதருகிறார்; இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது; இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.

அமைவிடம்

அ/மி. பக்தஜனேசுவரர் திருக்கோயில், 
திருநாவலூர் & அஞ்சல், 
உளுந்தூர்பேட்டை வட்டம், 
விழுப்புரம் மாவட்டம் - 607 204.

தொலைபேசி : 04149 - 224391, +91-94433 82945.
மாநிலம் : தமிழ் நாடு 
சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

திருச்சிற்றம்பலம்
நன்றி ; சைவம் டாட் காம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக