சனி, 29 அக்டோபர், 2016

ஆன்மீக சிந்தனைகள் - இறைவனை அடைய வழி

இறைவனை அடைய நம் முன்னோர்கள் பல்வேறு வழிகளை போதித்துள்ளார்கள், அதில் குறிப்பாக சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்ற வற்றில் ஏதாவது ஒன்றில் ஒன்றியல் அந்த போதனைகள் அடங்கிவிடுகிறது,
சரியை : நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன் கோவில்களுக்கு சென்று இறைவனை பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்து அணிவித்து, இறைவனை அவன் பெருமைகளை வாயாறப்பாடி துதித்து வணங்குதல்.. மற்றும் இறைவன் திருக்கோவிலில் மெழுகிடுதல் , சுத்தம் செய்வது போன்ற உழவாரப்பணிகள் செய்து வணங்குதல் யாவும் சரிகை வழியாகும். இதன் மூலம் பெறும் முக்தி சாலோக முத்தி என்படும்.
கிரியை: சிவச் சின்னங்களை அணிந்து சிவனடியார்களாக இறைச் சேவை செய்வது, ஒன்றையே வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும் இதன்மூலம் கிடைக்கும் முக்தி சாமீப முக்தி எனப்படும்
யோகம் : தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று தொடர் பயிற்சியின் மூலம் உடல் மனம் ஆகியவைற்றை தூய்மையாக இறைவனை வழிபட்டு முக்தி பெறுதல் இதற்கு சாரூப முக்தி எனப்படும்

ஞானம் : நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மாய உணர்வது ஞான வழியாகும், இதற்கு சாயுச்ய முத்தி எனப்படும்.

------------------------------------------------------

கோவில் வாயிற் படியை தொட்டு வணங்கி உள்செல்லல்

திருக்கோவில்களுக்கு செல்லும் போது கோவிலில் நுழையும் போது சில பக்தர்கள் கோவில் வாசல்படியை தொட்டு வணங்கிவிட்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். இதில் அடங்கிய அறிவியல் , ஆன்மீக தத்துவங்கள் யாது என்பதை அறியலாம்,

ஒரு பக்தன் கோவில் வாசல் படியை தொட குனியும் போது அது முதலில் அவனுடைய பணிவை ஏற்படுத்துகிறது, ( இப்பணிவை ஏற்படுத்தவே பண்டைய நாட்களில் கட்டப்பட்ட ஆலங்கள், மற்றும் சில வீடுகளில் முன் தலைவாசல் தாழ்வாகவே இருப்பதை கவனித்திருக்கலாம், இதனால் யாவரும் குனிந்து செல்வதற்காக அமைக்கப்பட்டவை என்பதைக் காணலாம்)
அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்கிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நொற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும், இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அத்தோடு தெய்வ சன்னதியில் இருந்து வரும் அருள் அதிர் வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரகிக்க செய்யும், எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்து பாருங்கள் அது உங்களை புது மனிதர்களாக்கி புத்துணர்ச்சி உடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக