சனி, 31 அக்டோபர், 2015


மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல் பாடல் 1 நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15 பொருள் ; நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும். யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16 பொருள் ; நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும். வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17 ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18 வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19 பொருள்; ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்? வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக் சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன் பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20 பொருள் ;தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படி யின்றி என் பிறவித் தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன். பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21 பொருள் ; கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங் கருணையால் ஆட்கொள்ள வேண்டும். அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ் விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22 பொருள் ; கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும். வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23 பொருள் ;நெஞ்சமே! மலர்க்கணைக்கும் மாதர்க்கும் பதைத்து உருகி நின்ற நீ, இறைவனது பிரிவுக்கு ஆற்றாது உருகியிறந்து படுவாய் அல்லை; ஆதலால் நீ பயன் அடையாது ஒழிகின்றனை. வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே ெபாருள் ; நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்? திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை

வெள்ளி, 30 அக்டோபர், 2015


தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் நீற்றையில் இடப்பட்ட போது, பாடிய பதிகம் " மாசில் வீணையும் மாலை மதியமும்" நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே விளக்கம் திருநாவுக்கரசர் தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தது மட்டுமல்லாமல், வடமொழி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். அத்தகைய புலமை பெற்றிருந்த காரணத்தால் தான் சமண கொள்கைகளை, ஐயம் திரிபறக் கற்று, புத்தர்களுடன் வாது செய்து அவர்களை வெல்லும் திறம் கொண்டிருந்தார். அப்படி இருந்தும், நமச்சிவாய மந்திரம் தான் கற்ற கல்வி என்று கூறுவதிலிருந்து நமச்சிவாய மந்திரத்தினை எவ்வளவு உயர்வாக அவர் மதித்தார் என்பது நமக்கு இங்கே புலனாகின்றது. பொழிப்புரை நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை

புதன், 28 அக்டோபர், 2015


திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம் மாசில் வீணையும் – பாடல் 1 (பொதுப் பதிகம் – குறுந்தொகை) பின்னணி அப்பர் பிரானின் வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்த சூலை நோயினை அவருக்கு அளித்து சிவபெருமான் அவரை ஆட்கொண்டதையும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய பின்னர் அவரது சூலை நோய் தீர்க்கப்பட்டதையும், இறைவனின் அருளால் தீராததாக கருதப்பட்ட தனது நோய் தீர்ந்த பின்னர், புது மனிதனாக மாறிய அப்பர் பிரான், நாமார்க்கும் குடி அல்லோம் என்று வீரமுழக்கம் இட்டதையும் நாம் சென்ற சில நாட்களாக சிந்தித்து வந்தோம். அதன் பின்னர் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தினை இன்று முதல் நாம் சிந்திக்க இருக்கின்றோம். தங்களுக்கு குருவாக இருந்த தருமசேனர், மீளவும் சைவ சமயம் சார்ந்ததையும், தங்களால் தீர்க்க முடியாத கடுமையான சூலை நோய் சிவபிரான் அருளால் தீர்க்கப் பட்டதையும், அவருக்கு திருநாவுக்கரசர் என்ற நாமம் சிவபிரான் அளித்ததையும், அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பினையும் அறிந்த சமண குருமார்கள், நடந்ததை உள்ளவாறு பல்லவ மன்னன் அறிந்தால் தங்களது செல்வாக்கு குறையும் என்பதை உணர்ந்தனர். எனவே மன்னனிடம் நடந்ததை திரித்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சார வேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான். திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்தபோது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தனது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், தனக்கு ஏற்படும் இடர்களுக்கு சிவபெருமான் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார், பாடல் 1 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே விளக்கம் வீங்கு = பெருகிய இளவேனில் = சித்திரை, வைகாசி மாதங்கள் மூசு வண்டு = மொய்க்கும் வண்டு அறை = ஒலிக்கின்ற. வெப்பத்தைத் தரும் நீற்றறையின் உள்ளே அமர்ந்திருக்கும் எவருக்கும் வெப்பத்தை அளிக்கும் பொருட்களே நினைவுக்கு வரும். ஆனால் சிவபிரானது அருளால் வெப்பத்தைக் கொடுக்கும் நீற்றறையும் குளிர்ந்த காரணத்தால் நாவுக்கரசருக்கு நீற்றறை உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது ஐந்து புலன்களும் இன்பமான சூழ்நிலையினை உணர்ந்த தன்மையை, ஐம்புலன்களுக்கும் இன்பம் கொடுக்கும் பொருட்களை இங்கே குறிப்பிட்டு நமக்கு நாவுக்கரசர் இங்கே உணர்த்துகின்றார். அத்தகைய சூழ்நிலைக்கு இறைவனது திருவடிகளே காரணம் என்பதையும் அந்த சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இங்கே நமக்கு தெரிவிக்கின்றார். திருநாவுக்கரசர் நீற்றறையில் அனுபவித்த சூழ்நிலையை குறிப்பிடும் சேக்கிழார் இறைவன் அருளால் குளிர்ந்த அந்த சூழ்நிலை ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிப்பதாக இருந்தது என்று கூறுகின்றார். இந்தப் பாடலில் சேக்கிழார், நாவுக்கரசுப் பெருமான் தனது பதிகத்தில் பயன்படுத்திய சொற்களைக் கையாண்டுள்ளது நாம் உணர்ந்து ரசிக்கத்தக்கது. வெய்ய நீற்றறை அது தான் வீங்கிள வேனில் பருவந் தைவரு தண் தென்றல் அணை தண்கழுநீர் தடம் போன்று மெய்யொளி வெண்ணிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே பொழிப்புரை எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது. திருச்சிற்றம்பலம் தொகுப்பு. வை.பூமாலை. சுந்தரபாண்டியம்

செவ்வாய், 27 அக்டோபர், 2015

Aanmigam: இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்...

Aanmigam: இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்...: இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்:- * காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள். *பல் தேய்க்கும் போது ஆள் காட்ட...

நின்றசீர் நெடுமாற நாயனார் இன்று (28.10.2015) திரு நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை தினமானதால் இன்று அவரின் வரலாற்றை சற்று நினைவு கூறுவோம். பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, கூன்பாண்டியரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சமணர்களுடைய துர்ப்போதனையினாலே பொய்மார்க்கமாகிய ஆருகதமதத்திலே பிரவேசித்தும், சோழராஜாவுடைய புத்திரியாருஞ் சைவசிகாமணியுமாகிய மங்கையர்க்கரசியாரை மனைவியாராகவும் குலச்சிறைநாயனாரை மந்திரியாராகவும் பெற்றிருந்தமையால், சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி சாத்தப்பட்டு, அவர் அருளிய மெய்யுபதேசத்தைப்பெற்று, கூன் நிமிர்ந்து நெடுமாறநாயனாரெனப் பெயர்பெற்றார். தம்மோடு பொர வந்த வடபுலத் தரசர்களோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே யுத்தஞ்செய்து வென்று, சைவ சமயம் அபிவிருத்தியாகும்படி நெடுங்காலம் அரசியற்றிக் கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார். இவ்வளவுக்குச் சிவனன்பிற் சிறந்திருந்த நெடுமாற நாயனார் சிவதொண்டுக்குரிய சகல துறைகளும் மேலோங்கத்தக்க வாறாக அரசியற்றி உய்வுற்றார். அது, "வளவர்பிரான் திருமகளார் மங்கையர்க்கரசியார் களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார் இளவர வெண்பிறை யணிந்தார்க் கேற்ற திருத்தொண்டெல்லாம் அளவில்புகழ் பெறவிளக்கி அருள்பெருக அரசளித்தார்" என அவர் புராணத்தில் வரும். ஆகவே, அவர் வரலாறு சார்ந்த இத்தகு மகிமைகளினால் அவர் சீர் சைவவுலகில் என்றைக்கும் நின்ற சீர் ஆதல் பெறப்படும் என்க. திருச்சிற்றம்பலம்.

banner-thirumoola-nayanarStandard திருமூலதேவ நாயனார் இன்று (27.10.2015) திரு மூலநாயனாரின் குருபூசை தினமானதால் இன்று அவரின் வரலாற்றை சற்று நினைவு கூறுவோம். திருக்கைலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்திதேவருடைய திருவருளைப் பெற்ற மாணாக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருத்தற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கைலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனஞ்செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள அழுதலை எதிரே கண்டார். சாத்தனூரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் ஒருவன் அவைகளை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சரீரத்தை வந்தணைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, “பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்” என்று ஆலோசித்து, “இவ்விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா” என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சரீரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுதார். எழுதலும், பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துத் துள்ளி, பின்புபோய் மேய்ந்தன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்சென்று, அவைகளை நன்றாக மேய்த்தார். சூரியன் அஸ்தமயனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகடோறும் போகத் தாம் வெளியிலே நின்றார். மூலனுடைய மனைவி “நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்” என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, “இவருக்கு ஈனம் அடுத்தது போலும்” என்று. அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சுற்று மயங்கி, “என்செய்தீர்” என்று, தளர, திருமூலநாயனார் “உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று மறுத்து, ஒரு பொதும்டத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, “இது பைத்தியமன்று, வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்” என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள். சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாஞ்சேமித்த சரீரத்தைக்காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, “சிவபெருமான் ஆதிகாலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சைவாகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழினாலே ஒரு நூல் செய்வித்தற் பொருட்டு இச்சரீரத்தை மறைத்தருளினார்” என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்பக்கத்தில் இருக்கின்ற அரசின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் மூவாயிரம் வருஷமளவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக மூவாயிரம் திருப்பாட்டினால் சைவாகமங்களின் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார். திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர். திருச்சிற்றம்பலம்.

திங்கள், 26 அக்டோபர், 2015


திரு அருணகிரி நாதர் * திருக்கழுக்குன்றத்தில் பாடிய திருப்புகழ் அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின் அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர் நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய் இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன் மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன் மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய் புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி படச்சி ரித்தண் முப்புர நீறுசெய் புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே திகழ்க்க டப்பம் புட்பம தார்புய மறைத்து ருக்கொண் டற்புத மாகிய தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா செகத்தி லுச்சம் பெற்றம ராவதி யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில தினத்து மற்று ஒன்று உற்று அறியாது ... இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில் சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல், பின் அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ ... பின்பு பயனில்லாத (கேடு தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும் பொய் என்னும் கடலில் முழுகி, அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ சில நாள் போய் இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன் மயக்கில் உற்று ... துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள் போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி, குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு, அம் பற்றை விடாது உடலில் இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வா(கி)யே எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன் ... அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு முன்னதாக, உன் மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது இருக்கு(ம்) நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய் ... உன்னுடைய மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி படச் சிரித்து அண் முப்புர(ம்) நீறு செய் புகைக் கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா ... யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும் எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும் சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின மகனே. புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்து(ம்) முற்றும் செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன் மருகோனே ... பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும், (மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய, திருமாலின் மருகனே, திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்) மறைத்து உருக் கொண்ட அற்புதமாகிய தினைப் புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா ... விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளியைத் தழுவும் குணவானே, செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்று அழகே செறி திருக் கழுக் குன்றத்தினில் மேவிய பெருமாளே. ... பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன் தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு நிறைந்த திருக்கழுக் குன்றத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. * திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு 'கதலிவனம்' என்றும் பெயர்.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

சுந்தரரர் தேவாரம் இடக்கண் பார்வை பெற்ற பதிகம்


சுந்தரரர் தேவாரம் இடக்கண் பார்வை பெற்ற பதிகம் இடம்; காஞ்சியம்பதி திருக்கச்சி ஏகம்பம் சுந்தரரர் பெருமான் திருவொற்றியூரில் சங்கிலியாரை மண முடித்தபின், திருவாரூர் செல்லவும், அங்குள்ள வீதிவிடங்க பெருமானாரை வழிபட எண்ணங் கொண்டு திருவொற்றியூரை வி்ட்டு நீங்கும் போது சங்கிலியாரை மணப்பதற்கு " இவ்வூரை விட்டு போகேன் " என செய்த சத்தியம் மீரப்பட்டதால் , இதனா்ல் ஈசன் தந்த சபாத்தால் இருகண்களும் இழந்து குருடானார். அப்போது சுந்தரரர் இந்த கொடுந் துயரத்தை நீக்கும் பொரு்ட்டு இறைவரை நினைந்து திருப்பதிகங்கள் பாடினார். பின் காஞ்புரம் ெசன்று ஏகாம்பர நாதரை வணங்கி உன்னை தரிசிக்க என் கண்ணைத் தந்தருள் என்று வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்தார். அப்போது இறைவர் இடக்கண் மட்டும் பார்வை கொடுத்தருளினார். அப்போது பாடிய பதிகமே " ஆலந்தான் உகந்து அமுது செய்தானை " என்ற பதிகம் திரு கச்சி ஏகம்பரஈஸ்வர் முன் நின்று பாடிய பதிகம் இறைவரும் சுந்தரரின் அன்பிற்கு பணிந்து அவருக்கு கண் பார்வை அளித்த வரலாறு . எனவே நாம் இப்பதிக பாடல்களை மனம் உருக வேண்டி பாடினால் கண் சம்பந்தப்பட்ட கண்நோய் உள்ளவர்களுக்கு அந்நோய் நீங்கப்பட்டு பூரண குணமைடவர் என்பது உறுதி. சுந்தரரரின் திருவாக்குப்படி இப்பதிகப் பாடல்கள் பத்தும் பாடுவோர் "நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகெய்துவர் தாமே " திருக்கச்சி ஏகம்பம் பாடல் எண் : 1 ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும் , காலகாலனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 2 உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள் உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய் கின்ற பெருமானும் , ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும் , தேவர் கட்குத் தலைவனும் , தன்னை விடாது பற்றினவர்க்கு , பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும் , தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று , அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய , அழிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற , கற்றையான நீண்ட சடையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 3 திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து , அக்காலை , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும் , யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும் , மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும் , வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய , திருவேகம் பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 4 குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும் , கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும் , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் , கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய , கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற , கண்டத்தில் நஞ்சினையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 5 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : யாவரையும் வெல்லும் தன்மையுடைய , வெள்ளிய மழு ஒன்றை உடையவனும் , கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும் , அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும் , அரிய வேதங்களையும் , அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய , அளவற்ற புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் , துதித்து வழி படப்பெற்ற , நன்மையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 6 திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : பிறை தங்கியுள்ள சடையையுடையவனும் , தேவர்க்குத் தேவனும் , வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற , ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும் , சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய , என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி , துதித்து வழிபடப்பெற்ற , கங்கையை யணிந்த , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 7 விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாமுகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும் , வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும் , தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும் , நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய , எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற , கண்களும் மூன்று உடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 8 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நாள்தோறும் தன்னையே சிந்தித்து , துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும் , உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும் , பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய , முடிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற , கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய , நீண்ட சடையையுடைய , திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு , அடியேன் , கண் பெற்ற வாறு , பாடல் எண் : 9 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுர மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் , வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும் , தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய , பரவிய , பழைய புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற , எட்டுக் கைகளையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 10 எள்கல் இன்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர் பெருமானாகிய சிவபெருமானை , அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே , தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி , ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று , முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து , பின்பு , புறத்தே வழிபடச் சென்று , அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு , தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட , வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள , அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 11 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன் நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே பொழிப்புரை : குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன் , ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும் , மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் , ` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும் , யாவர்க்கும் தலைவனும் , கூத்தாடுதலை உடையவனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் . நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் . திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் .......... தென்னாடுடைய சிவனே போற்றி மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வியாழன், 22 அக்டோபர், 2015

சுந்தரர் தேவாரம்


https://vpoompalani05.files.wordpress.com/2014/05/copy-of-nalvar-1-sundarar.jpg சுந்தரர் தேவாரம் திருமுறை 7 / பதிகம் ; மின்னுமா மேகங்கள் திருத்துருத்தியும் வேள்விக்குடியும் காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்கே முன் காமக் கோட்டத்திற் சென்று, தருமத்தை வளர்க்கின்ற பெருங்கருணையையுடைய உலகமாதாவாகிய காமாக்ஷியம்மையை வணங்கித் துதித்துக்கொண்டு, திருவேகம்பத்தை அடைந்து ஏகாம்பரநாத சுவாமியை வணங்கி, "ஆதிகாலத்திலே திருப்பாற்கடலினின்று எழுந்து தேவர்களை வருத்தத் தொடங்கிய ஆலகாலவிஷத்தைத் திருமிடற்றிலடைத்து அவர்கள் அமுதுண்ண அருள்செய்த கருணாநிதியே! சிறியேன் செய்த பிழையைப் பொறுத்துச் சிறியேனுக்குத் தேவரீரைத் தரிசிக்கும் பொருட்டுக் கண்ணைத் தந்தருளும்" என்று பிரார்த்தித்தார். அப்பொழுது கடவுள் இடக்கண்ணை மாத்திரம் கொடுத்து, தமது திருக்கோலத்தைக் காட்ட; சுந்தரமூர்த்தி நாயனார் கண்டு பரவசமாகி அடியற்ற மரம்போல வீழ்ந்து எழுந்து, "ஆலந்தானுகந் தமுதுசெய்தானை" என்னுந் திருப்பதிகத்தைப் பாடி, அந்த ஸ்தலத்திலே சில நாள் இருந்து, பின் அந்த ஸ்தலத்தை நீங்கி, வழியிலே "அந்தியுநண் பகலும்" என்றெடுத்து "தென்றிரு வாரூர்புக் கெந்தைபிரானாரை யென்றுகொலெய்துவதே" என்னுந் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு, தொண்டை மண்டலத்தைக் கடந்து, திருவாமாத்தூரிற் சென்று பதிகம் பாடி, திருவரத்துறையை வணங்கிப் பதிகம் பாடிக்கொண்டு, சோழமண்டலத்தை அடைந்தார். அந்நாட்டிலே திருவாவடுதுறையிற் சேர்ந்து சுவாமியை வணங்கி ஒரு கண்ணில்லாமையைக் குறித்து மனங்கவன்று, "கங்கைவார்சடையார்" என்னுந் திருப்பதிகம் பாடி, திருத்துருத்திக்குப் போய்ச்சுவாமியை வணங்கி "அடியேனுடைய சரீரத்தின் மேலே பொருந்திய நோயை நீக்கியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அதற்குக் கடவுள் "நீ இக்கோயிலுக்கு வட புறத்தில் இருக்கின்ற குளத்திலே ஸ்நானம் பண்ணுவாயாகில், இந்நோய் நீங்கிவிடும்" என்று திருவாய்மலர்ந்தருளினார். அது கேட்டு சுந்தரமூர்த்தி நாயனார் கைதொழுது புறப்பட்டு அந்தத்தீர்த்தத்தை அடைந்து, சுவாமியை வணங்கிக் கொண்டு அவருடைய திருவடிகளிலே அன்போடு பதிந்த இருதயத்துடனே அத்தீர்த்தத்திலே ஸ்நானம் பண்ணினார். உடனே அவருடைய திருமேனி நோய் நீங்கிப் பிரகாசம் அடைந்தது. அவர், கண்டவர்கள் அதிசயிக்கும்படி கரையேறி, வஸ்திரந் தரித்துக் கொண்டு, திருக்கோயிலிலே போய், சுவாமியை வணங்கி, "மின்னுமாமேகங்கள்" என்னுந் திருக்கோயிலிலே பிரவேசித்து வணங்கிக் கண் தந்தருளும்படி திருப்பதிகம் பாடினார். சுந்தரர் பெருமான் பாடிய இப்பதிகப்பாடல்களை நாமும் பாடினால் நம் உடல் பிணிகளான, சொரி, படை, அம்மை, மற்றும் தொழு நோய் நீங்கப் பெற்று உடல் புத்துயிர் பெறலாம், இப்பதிகப் பாடல்கள் திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் பாடல் எண் : 1 மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை பொழிப்புரை : மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது ! பாடல் எண் : 2 கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே பொருது மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் பழவினை யுள்ளன பற்றறுத் தானை பொழிப்புரை : கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும் , அவை வேறு காணப்படாதவாறு கோத்தும் , கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் , மலைநெற் கதிர்களை யும் சிதறியும் , இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும் , கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தி யிலும் , திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும் , எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , பாடும் வகையை அறிகின்றிலேன் ! பாடல் எண் : 3 கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப் புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை பொழிப்புரை : கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களை யும் , மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு , அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும் , வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும் , வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலுங் கடை யேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன் ! பாடல் எண் : 4 பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக் கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய் எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை அருவினை யுள்ளன ஆசறுத் தானை பொழிப்புரை : அருவிகள் , பொரிந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள , பின்பு , கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும் , வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு , தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன் ! பாடல் எண் : 5 பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை உற்றநோய் இற்றையே உறவொழித் தானை பொழிப்புரை : பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களை யுடைய யானையது தந்தங்களையும் , பொன்னைப்போல மலர்கின்ற , வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி , எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு , இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைப் பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன் . பாடல் எண் : 6 புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித் திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை பொழிப்புரை : புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் , பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும் , நல்ல மலர்களைத் தள்ளிக்கொண்டும் , தன்னால் அகழப்படுகின்ற , பெரிய , அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி , முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி , கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றம் உடை யேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , இகழுமாற்றை நினையமாட்டேன் ! பாடல் எண் : 7 வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும் கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய் விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை உலகறி பழவினை அறவொழித் தானை பொழிப்புரை : அளவில்லாத மாம்பழங்களையும் , வாழைப் பழங்களையும் வீழ்த்தியும் , கிளைகளோடு சாய்த்தும் , மராமரத்தை முரித்தும் , கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு , மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து , ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க , விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத் துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலை வரும் , எனது , உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன் ! பாடல் எண் : 8 ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப் புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக் காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித் தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை பொழிப்புரை : அணியவான ஊர்களில் உள்ளவர்களும் , பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும் , மனம் விரும்பி நினைக்கு மாறு , பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து , அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் திரிய , நீர் நிறைந்த , பெரிய , கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து , ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து , நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற , பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் , துய்க்குமாற்றை அறிகின்றிலேன் ! பாடல் எண் : 9 புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப இலங்குமா முத்தினோ டினமணி இடறி இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக் கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்மையே வீடுவித் தானை பொழிப்புரை : வயல்கள் வளம்படவும் , அதனால் எல்லாக் குற்றங் களும் நீங்கவும் , நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு , ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும் , மற்றும் பலவகை மணிகளை யும் எறிந்து , இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி , எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க , கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன் ! பாடல் எண் : 10 மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற அங்கையான் கழலடி யன்றிமற் றறியான் அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன் கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே பொழிப்புரை : மங்கை ஒருத்தியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தும் , இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற , பகைத்தலை யுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடைய வனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாத வனாகியும் , அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடிய வனாகிய நம்பியாரூரன் , கங்கை போலப் பொருந்திய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை , தங்கள் கையால் தொழுது , தங்கள் நாவிற் கொள்பவர்கள் , தவநெறிக் கண் சென்று , பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம் பாடலை நாவின் மேற் கொள்ளுங்கால் , கையால் தொழுது கோடல் வேண்டும் என்க . இதனால் , திருமொழிகளது பெருமை உணர்த்தியருளப்பட்டது . ` தவநெறி சென்று ஆள்பவர் ` என்றமையால் , அமருலகம் , சிவலோகமாயிற்று திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

செவ்வாய், 20 அக்டோபர், 2015

சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்


சதுரகிரி ஆனந்தவல்லியம்மன் தென்மாவட்டங்களில் ஆடி அம்மாவாசை முடிந்து நவராத்திரி துவங்கி விட்டாலே ஞாபகம் வருவது சதுரகிரி கொலு பூசை தான். ஏனெனில் தென்மேற்கு பருவக்காற்று குற்றால சீசன் முடிந்து வடகிழக்கு பருவக்காற்று ஆரம்பித்து விட்டால் மலை பிரதேச ரம்மியமான பொழுபோக்குடன் கூடிய ஆன்மீக சுற்றுலா தலமாக கொண்டாடி அந்த சில் என்ற ரம்மியமான சூழலை அனுபவித்து மகிழ்வது சதுரகிரியை சுற்றியுள்ள கிராம மக்களும் அதனைச் சார்ந்த மக்களும் தான் ஐப்பசி பிறந்து விட்டாலே ஐப்பசி புண்ணிய ஸ்தானமாக ஸ்தானம் (குளிக்க ) செல்லும் இடம். மற்றும் இது ஒரு இளம் சீரார்களின் பிக்னிக் பிளேஸ் இந்த சதுரகிரி வாசஸ்தலம் தான். இந்த சதுரகிரியானது மேற்கு மலைத் தொடரில் , மேருமலையின் முதலான எட்டு மலைகளுக்கும் தலைமையான மலையாக கருதப்படுகிறது. சதுரகிரி என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆடி அமாவாசை தான் , ஆடி அமாவாசை மகாலிங்த்தை நினைவு கூறும் திருவிழா. புரட்டாசி மகாள அமாவாசை என்றால் நம் நினைவுக்கு வருவது சதுகிரி ஆனந்த வல்லி யம்மன் தான். சதுரகிரியில் சிவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதுபோலவே சக்தி ரூபமான ஆனந்தவல்லிக்கும் , ஏன் அகத்திய மகரிசிக்கு இறைவன் காட்சி கொடுக்கும் போதும் சிவசக்தியாகவே தான் காட்சி தந்தருளினார். இங்குதான் அந்த பராசக்தி சூரனை வதம் செய்ய ஒன்பது தினங்கள் தவம் செய்து சூரனை வதம் செய்தாள். எனவே இங்கிருக்கும் ஆனந்தவல்லிக்கும் பெருமை சேர்ப்பது இந்த சதுரகிரிதான். சதுரம் என்றாலே நான்கு பக்கங்களைக் கொண்டது என்பதற்கிணங்க இங்குள்ள ஆலயம் கிழக்கே இந்திர கிரியும், தெற்கில் ஏமகிரியும், மேற்கில் வருணகிரியும், வடக்கில் குபேரகிரியுமாக எல்லைகளாய் கொண்டு நடுவில் சஞ்சீவிகிரியைக் கொண்டு அமைந்துள்ள மலைதான் சதுரகிரி. இச் சதுரகிரியில் சிவ மூர்த்தி, சுந்தரலிங்கம், மகாலிங்கம், சந்தனலிங்கம்,இரட்டை லிங்கம் என்று நான்கு திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியுள்ளார். மூலிகை வளங்களைக் காண சதுரகிரி வந்த அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப் பெற்று அவருக்கு திருக்கையாலயத்தில் நடந்த தன் திருமணக் காட்சியைக் கண்டுகளிக்கத் தந்தருளியவரே சுந்தரலிங்கர். பச்சைமால் என்னும் ஆயர்குல முதல்வனுக்காக லிங்க வடிவில் காட்சி கொடுத்தருளியவர் மகாலிங்கர் பின்னர் இறைவன் உமையொரு பாகமாகி அர்த்த நாரீஸ்வரர் என்னும் பெயர் கொண்டெழுந்தருளும் பொருட்டு சர்வலோக மாதாவாகிய உமையம்மை தவவேடந்தாங்கி சந்தன மரத்தடியில் காட்சி தந்த மூர்த்தியே சந்தனமகாலிங்கமாவார். ஆனந்த சுந்தரன் என்ற வர்த்தகனுக்கு அவன் மனைவி ஆண்டாளம்மாளுக்கும் சங்கரநாராயண மூர்த்தி யாக காட்சி கொடுத்தருளும் பொருட்டு எழுந்தருளியதே இரட்டை லிங்கம். இச்சதுரகிரியில் ஸ்ரீ சுந்தரமகாலிங் மூர்த்தி யின் சன்னிதானத்திலிருக்கிற கானாற்றில் சந்திர தீர்த்தமென்ற ஒரு புஷ்ப கரணியும், அதன் வடபக்கத்தில் கெளடின்னிய தீர்த்தமும் உள்ளன. இச்சதுரகிரியில் குகைகளிலும், ஆசிரமங்களிலும் இருந்து ஆத்ம ஞானம் கருதி பதினென் சித்தர்கள் தவஞான நிஷ்டை புரிந்திருக்கின்றனர். சதுரகிரியின் நடுவில் உள்ள சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகள் காய சித்தி பெறுவதற்கும் அஷ்ட சக்திகளான வசிகம், மோகனம், தம்பனம்,பேதனம், மாரணம் , ஆகிருஷ்ணம், உச்சாடனம், வித்துவேடனம் முதலான அஷ்டகருமங்களுக்கும் ஆதாரமாகிய அநேக மந்திர சித்திகளிக்கு உதவுவதேடு இம்மலையின் காற்றானது மனிதனின் தேகத்தில் பட்ட மாத்திரத்திலேயே சகல வியாதிகளையும் போக்க வல்ல மூலிகைகளைக் கொண்டது. நவராத்திரி கொலு பூசை இத்தகைய சிறப்பு வாய்ந்த சதுரகிரியில் நீண்ட நெடுங்காலமாக நவராத்திரி கொலு பூசை திருவிழா தென்மாவட்டத்திலுள்ள ஏழுர் சாலியர் மக்களால் அருள்மிகு உமையம்மையின் தவக்கோல ஆனந்தவல்லிக்கு அஷ்ட்டோத்திர முறைப்படி கொலுவில் ஆனந்தவல்லி அம்மையை எழுந்தருளச்செய்து நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அஷ்ட கோச்சார முறைப்படி பூசைகள் செய்து வரப்படுகிறது. துன்பங்கள் செய்யும் அசுரர்களை வதம் செய்த சம்கார மூர்த்திகள் போலும் சிவ சக்தியான பரமேஸ்வரிக்கும் வதம் செய்து அசுரர் களை வதம்செய்ய வேண்டு மென்றும், ஆதிபராசக்தியே, பிரம்மா முதலான தேவர்களுக்கெல்லாம் உயர்வானவர் , அவள் அருளாலே வேண்டுவன கிடைக்கும் என்றுஎண்ணிய பிரமர், காலங்கி சட்டைநாதர் ஆகிய மகரிஷிகள் ஆதிபராசக்தியை மகிஷா அசுரனை வதம் செய்ய, தேவி உபாசனை பூசை விரத்தை கொண்டு, தவம் இருக்க செய்ய வேண்டிக்கொண்டதன் நிகழ்வே இந்த சதுரகிரி ஆனந்தவல்லி நவராத்திரி கொலு விழா. புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை தினத்தில் ஆரம்பம் ஆகி விஜய தசமி நாளுடன் இவ் விழா முடிவு பெறும். பிரதமையில் ஆனந்தவல்லியம்மன் கொலு மண்டபத்தில் தலை வாழை இலை பரப்பி அதில் நெல்லை பரப்பி, அதன் மேல் திருநூல் சுற்றிய தீர்த்த கும்பத்தை வைத்து, அக்கும்பத்தின் மீது மாவிலை யுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைத்து ம், அதன் முன் வாழையிலையில் பூசை பொருட்களும், படையல் பொருட்களும் வைத்து, நெய்வேத்தியம் செய்து முனைமுறியாத மஞ்சளை ஒரு கயிற்றில் கட்டி மான் தோல் ஆசனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து தேவியின் பஞ்சாட்சர மந்திரத்தினை, ஒரு செம்பு தகட்டில் எழுதி கும்பத்தின் முன்பு வைத்து அம்மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 1008 முறை உருச் செய்து மணமலர்களால் அஷ்ட்டோத்திர அர்ச்சனைகள் செய்து கற்பூர தீபாரதனைகள் செய்து நிகழ்வுக்கு காப்புக்கட்டுதல் என்றுபெயர், இந்நாளிலிருந்த ஒன்பது நாட்களிலும் இது போன்ற பூசைகள் மற்றும் ஆனந்தவல்லி தோத்திரப்பாடல்ககள் பாடி அம்மனுக்கு உருவேற்றி , நமஸ்கரிக்க பிரம்ம முனிவரின் உபாஸனா பூசா விரத்திற்கு இரங்கி அக்கும்பத்தில் இருந்து அலங்கார மங்கை மதி முக விலாசரூபத்தோடு ஆதிபராச்க்தி பிரசன்னமாகி திருக்காட்சி தந்து, ஒன்பதாம் நாள் அம்மனை மலையில் உள்ள சுந்தரரர் ஆலயத்தின் எதிரில் பள்ளத்தில் அசுரான வாழை மரத்தில் உள்ள மகிசாசூரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அம்மனுக்கு பின்னால் பிரதமை முதல் வளர்க்கப்பட்ட முளைப்பாரியும் உடன் எடுத்துச் சென்று கரைக்கப்படும். முளைப்பாரியம்மன் எடுப்பதால் நல்ல மழை வேண்டி முளைப்பாரியும் கொண்டப்படுகிறது. இவ்விதம் திருக்காட்சி தந்தருளி சதுரகிரிய திருக்கோவிலில் கொண்டிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய தேவி அன்னை பராசக்தியாம் ஆனந்தவல்லியை தோத்திரம் செய்ய தோத்திரப்பாடல்கள் சுந்தரபாண்டியத்தில் சாலிய வம்சத்தில் தோன்றி திரு முத்துச்சாமி மூப்பனார் அவர்களின் தோத்திரப்பாடல்கள் சில வற்றை இங்கு வைத்துள்ளேன் தாங்களும் பாடி அந்த ஆனந்தவல்லிஅம்மனின் அருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகிறேன். ஆனந்தவல்லியம்மன் தோத்திரப்பாடல்கள் 20ல் சில விநாயகர் துதி அல்லல் வினையை யகற்றிடு மானந்த வல்லிமேற் செந்தமிழ் வழுத்த வேணது இல்லை யென்னாமலே யீயும் சதுர்வரை வெள்ளப் பிள்ளையார்தம் மெய்ப்பதம் போற்றுவாம். ஆனந்தவல்லியம்மன் வரலாற்று பாடல் மாதவர்க் கிடர்செய்யு மகிஷா சூரன்தனை வதைத்திட வராகி வாலை வளர்சதுர கிரிதனின் மாலிங்கரைக் கருதி வந்திடுங் கன்னி மாதஞ் சாதன மதாகவே நவராத்திரி தன்னில் தசமி வரை பத்து நாளுந் தவமி வியற்றியே கொலுவினி லிருந்திடத் தாணுவு மிரங்கி வந்து தீதரக்கன் கெடவரந் தந்து வாயுதந் தேவியும் பெற்று வந்து சிந்திடக் கணைகளை நொந்திட வரக்கனுஞ் சீரியே யெதிர்த்து வந்த பாதகன் சிரமற்று வீழவு நொடியினிற் பதைத்துயிர் துடிக்க மாய்த்த பங்கயச் செல்வியே ! துங்கமிகு வல்லியே! பாவை யானந்தி யுமையே!! தோத்திரப்பாடல் - 1 மங்கள கல்யாணி பரிபூரணி மனோன்மணி வதன சிங்கார ரூபி மாலின் சகோதரி வாலை பரமேஸ்வரி வராகி மாதங்கி வர்மி சங்கரி சடாக்ஷரி தயாபரி மக்ஷேஸ்வரி சாமளாதேவி தர்மி சத்துரு சங்கரி நிர்த்தனி யுத்தமி தாய் பராசக்தி வாணி கங்கை திரிபுரை கெளரிகாளி கங்காளி சிவ காமி தவநேமி வாமி கமலி கருணாகரி விமலி கிருபாகரி கபாலி திருசூலி நிலி அங்கற் கண்ணியுவுராமி யெனதாயினின் னடியேனே யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் -2 சந்தனச் சோலைய மஞ்சள் நீரோடையுந் தடாகமும் பொய்கை வளமுந் தாய் கன்னி மார்தினம் நீராடி யூஞ்சலிற் றானாடு கின்ற வனமும் விந்தைசேர் நவகோடி சித்தர்கள் சதாநிஷ்டை மேவியே புரியு மிடமு மேலான சஞ்சீவி மூலிகை ரசவாத வித்தைக் கிசைந்த தழையுஞ் சுந்தர மாலிங்கர் சன்னதி வாசல்முன் றூய திருக்கூட்ட முயர்வுந் தோணும் பலாவடி தன்னிற் கருப்பண்ண சுவாமியும் பேச்சியருளும் அந்தமிகு நவராத்திரி கொலுவலங் காரியே அடியேனை யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் 3 மாதா பிதாகுரு தெய்வ முனையல்லாது மற்று மொரு செயலு முளதோ மனமும் புண்ணாகியே தினமுங் கண்ணோயினான் வாடுவது கண்டிருந்து நீயே சோதனை யாகவே யெதுவுஞ் சொல்லாமலே சும்மா விருக்க லாமோ சுருதிமறை வாக்கியம் கேட்பதின் நோக்கமோ தூங்கிடாத தூக்க மாமோ பாதமே கதியென்று நம்பினே னிதுவரை பட்ட துன்பங்கள்போதும் பளீரென்று நயனங்களொளிதந்து வருள்செயும் பாக்யமே யெனது பாக்யமே ஆதரி யீததி யாகிலாண்ட யீஸ்வரி அடியேனை யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் 20 சந்தன முந்தனைச் சிந்திக்கு மென்மனந் தளரா திருக்க வேண்டுஞ் சரியை கிரியா யோக ஞானமார்க் கந்தனிற் சார்ந்துமோ பழக வேண்டும் புந்தியிற் கருதியே புருவநடு மத்தியிற் பொந்தி மனநிற்க வேண்டும் பொன்னில மாதர் தமாசையு நிராசையெப் போதுமே கொளவும் வேண்டும் எந்தையுயர் சுந்தர மகாலிங்கர் பொற்பத மெப்பவும் வணங்க வேண்டும் ஏழுருச் சாலியர் நவராத்திரி யுற்சவ மெனும் பெயர் துலங்க வேண்டும் அந்திபகல யெனக் காறுதலைத் தேறுதலை அருள்புரிந் துதவ வேண்டும் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் 21 கும்பமுனி மச்சமுனி சட்டைமுனி கருவூரார் கொங்க னர் புலிப் பாணியுங் கோரக்கர் புண்ணாக்கர் கமலமுனி காலாங்கி கூன ரழுகண்ணர் மூலர் இன்பமுறு நந்தீசர் சுந்தரம் ரோமரு மிடைக்காடர் போகநாதர் இவர்கள் பதிணென்மருந் தவமுனிவர் நாதாக்க ளிணையடி தனையுந் துதித்து சம்பிர மாமுத்துச் சாமி பாமாலையாய் சாற்றினேன் தயவு கூர்ந்து சகலவித ரோகமும் மகலவிரை வாகவுந் தள்ளித் துரத்தி யருள்வாய் அம்பிகை நின்பதஞ் தஞ்சமென வந்தநின் னடியேனை யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. இப்பாடல்களை கொலுவில் பாடி அம்மனுக்கு உருவேற்றி அம்மனின் அருள் பெறலாம், (இப்பாடல்கள் வேண்டுவோர் கேட்டுக்கொண்டால் டைப்செய்து அனுப்புகிறேன்.) திருச்சிற்றம்பலம் தொகுப்பு : வை. பூமாலை. சுந்தரபாண்டியம் மேலும் பல ஆன்மிகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 19 அக்டோபர், 2015


மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகம் / தோணோக்கம் தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார். இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை. பாடலின்பம் பூத்துஆரும் பொய்கைப் புனல்இதுவே எனக் கருதிப் பேய்த்தேர் முகக்கஉறும் பேதைகுணம் ஆகாமே தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தே திருநடம்செய் கூத்தா, உன் சேவடி கூடும்வண்ணம் தோள்நோக்கம். * என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவுஎறிந்தான், பிரமன் காண்புஅரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம்பரவித் துன்றுஆர் குழலினீர், தோள்நோக்கம் ஆடாமோ. பொருளின்பம் கானல் நீரைப் பார்த்து, நன்கு பொங்கிப் பெருகுகிற பொய்கை நீர் இது என்று நினைத்து, அதை அள்ளிக் குடிக்க முயற்சி செய்து ஏமாறுபவன் முட்டாள். அப்படி நான் முட்டாளாகிவிடாமல், சிவபெருமான் எனும் அமுதத்தைப் பருகி வாழச் செய்தவனே, என் தலைவனே, சிறந்து விளங்கும் தில்லையின் அம்பலத்தில் திருநடனம் செய்கின்ற கூத்தனே, உன்னுடைய செம்மையான திருவடிகளைச் சேர்வதற்காக நாம் தோள்நோக்கம் ஆடுவோம். * செறிவான கூந்தலை உடைய பெண்களே, நாம் தொடர்ந்து பிறந்து, இறந்து துன்பத்தில் விழாதபடி நம்மை ஆண்டுகொண்டவன் சிவபெருமான், கன்று வடிவத்தில் வந்த அசுரனை விளாமரமாக நின்ற அசுரன்மீது எறிந்து, அவர்கள் இருவரையும் அழித்தவனாகிய திருமால், பிரமன் ஆகியோரும்கூடக் காண இயலாத தன்மையுடையவன் அந்தச் சிவபெருமான், சிறப்புகள் குறையாத தில்லை அம்பலவன், அவனுடைய பெருமைகளைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம் http://poompalani.blogspot.com

அறியாமையால் செய்த வினையாலும் விடா.......


அறியாமையால் செய்த வினையாலும் விடா....... திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கொடிய சூலை நோய் (வயிற்று வலி) வந்தது. இந்த வயிற்று வலி எமனைப் போல வந்து கொடிய துன்பத்தைக் கொடுத்தது. இப்படிப்பட்ட கொடிய நோய் வருவதற்கு காரணத்தை அவரே கூறியுள்ளார். " கூற்று ஆயினவாறு விலக்கிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்? ........... தமிழ் திருமுறை 4 முதல் பாடல் கொடும் செயல்கள் செய்வதால் தான் நோய், வறுமை, அறிவின்மை, உடல் ஊனம், முதலிய துன்பங்கள் வருகின்றன என்பதை வீரட்டானத்து இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட சுவாமிகள் அவர்களின் திரு வாக்கால் அறிய முடிகிறது. அறியாமையால் இப்படிப்பட்ட கொடிய செயல்களைச் செய்து விடுகின்றோம். அதன் பயனை அனுபவிக்கும் போது ஏன் அவற்றைச் செய்தோம் என்று வருந்துகின்றறோம். அறியாமல் நெருப்வை மிதித்து விட்டாலும் நெருப்பு சுட்டு புண்ணாக்கி ரணமாகி துன்பத்தைக் கொடுப்பது போல் , நாம் அறியாமல் செய்த தவறானாலும் அதன் வினைப்பயன் நமக்கு தீங்கை அளித்தே தீரும். இத்தகைய தீவினைகளிலிருந்து விடுதலை அடைவதற்கு உரிய வழியையும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். " ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்" என்கிறார் ஏற்றாய் - காளை வாகனம் உடைய சிவபெருமானாரை இரவும் பகழும் பிரியாது தொழுதும்வணங்கியும், சிவத் தொண்டுகள் செய்தும், மேலும் வினைகள் வராதிருக்க செய்ய வேண்டும். துன்பங்கட்கு காரணம் தீவினைப் போக்கும் ஆற்றல் உடைய ஒரே கடவுள் பிறப்பும், இறப்பும் இல்லாத சிவபரம் ஆகும். எனவே இந்த இறையை பற்றினால் தீவினைகள் நம்மை அணுகா. இதைத்தான் திருநாவுக்கரசர் அருளிய முதல் பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது. பெரும் பான்மையான மக்கள் தமக்கு துன்பங்கள் வருவது தம் வினையால் என்பதை உணர்வது இல்லை. பிறகு இத்துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி துறவிகளையும், தாமே கடவுள் என்று சொல்லி கொள்ளும் இக்கால் இரணியர்களையும் நம்பி மோசம் போகின்றனர். இவ்வாறு வழியில்லாத வழியில் செல்லும் மக்களுக்கு பொருட் செலவும், காலவிரயமும், ஆவதுடன் அவர்களுடைய துன்பங்களும் தொலைவதில்லை. இப்படிப்பட்ட கால சூழ்நிலையில் தான் தமிழ் வேதங்களின் அறிவுரைகள் மக்களுக்கு மிகமிக அவசியமாகிறது. சிவ வழிபாடு ஒன்றினால்தான் நம் வினைகள் போக்கி க் கொள்ள முடியும். தாயும் தந்தையும் இல்லாதவரும், பிறப்பும் இறப்பும் இல்லாதவரும் ஆகிய சிவபெருமானார் ஒருவரே முழுமுதற்கடவுள் இவரே பெருந்தெய்வம். " பிறப்பும் இறப்பும் இல்லாததால் அவரே முழுமுதல் பொருளாவார். அவரே உண்மைப் பொருளாவார். இவற்றையெல்லாம் உணர்ந்த அருளாளர்கள் முதலில் வைத்து போற்றப்படுகின்ற திருஞானசம்பந்தர் திருவாக்கினை இங்கே காண்போம். "கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்தமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" நமக்கு வரக்கூடிய துன்பங்களிலிருந்து முன்பு செய்துள்ள வினைகளை உணரலாம். இறந்த பிறப்பை பிறந்த பிறப்பால் அறிக ..... என்கிறது அறநெறிச்சாரம் நம் பிள்ளைகட்கு திருமணம் தடைபடுகின்றது என்றால் கடந்த பிறவியில் யாருடைய திருமணத்தையாவது நிறுத்தியிருக்கலாம். இதுபோன்றே நாம் முற்பிறவிகளில் செய்த தீவினையே அப்படியே நமக்கு பிரதிபலிப்பாக அமையும். இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பவர் செய்கையினாலே முடிந்தது .............. திருமந்திரம் கடந்த பிறவிகளில் கருணை மிகுதியால் பிறருக்கு உதவிகள் செய்தும், தீமைகள் செய்யாமலும் வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் செல்வ செழிப்புடன் வாழ்கின்றனர். நாம் நலமாக வாழ்வதற்கு தீவினைகள் செய்யாமல் வாழ வேண்டும். பிறருக்கு செய்யும் தீவினையே நமக்கு கடனாக நம்மை வந்தடையும். அந்த துன்பத்தை நாம் அனுபவித்த ஆக வேண்டும் இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமம் செய்யாதவர் தம்பால தாகும் உருமிடி நாகம் உரோணி கழலை தருமம் செய்வார் பக்கம் சாரகிலாவே ....................... திருமந்திரம் இருமல், சோகை, சளி, காய்ச்சல் போன்ற பலவகை நோய்களும் இம்மைத் துன்பங்களும் தருமம் செய்யாதவருக்கே வந்து சேரும். பேரிடி விழுதல், பாம்பு முதலியவற்றால் துன்பம் நேரிடுதல் ஆகியவை தருமம் செய்பவர் இருக்கும் திசையை கூட பாரா. எனவே நோய் வருதல், இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகள் அபாங்கள்,.பிற கொடிய உயிரினங்களால் வரும் துன்பம் ஆகிய யாவும் தருமம் செய்யாததால் வருவனவே என்பதை ஐயமமின்றி உணராலாம். தருமம். செய்து வாழ்ந்தால் நாம் வாழும் திசையில் அத்துன்பங்கள் நம்மை வந்து அடையா. உதாராணமாக நாம் உணவு, நீர் ஆகியவற்றை உட்கொள்கிறோம் சிலமணி நேரம் கழித்து அவைகள் சிறுநீர், மலமாக வெளியேற ேவ்ண்டும் இது இயற்கை. இல்லை யென்றால் அதுவே நமக்கு நோய் எனும் துன்பத்தை கொடுக்கும் அவரவர்களுக்கு நேர்ந்த தொழிலை செய்கிறோம்., உலகிலிருந்து செல்வம் நம் வீட்டிற்கு வருகிறது. வந்த செல்வம் தருமாக வெளி உலகிற்கு செல்லவேண்டும். இதுதான் நியதி. இல்லை என்றால் நோய் தான் வரும் . உய்த்துணர்க. திருச்சிற்றம்பலம் நன்றி ; தமிழ் வேதம் மேலும் பல ஆன்மிகத் தேடலுக்கு எனது பிளாக்ஸ் பாட் வலைதளத்தைக் காண்க

வியாழன், 15 அக்டோபர், 2015

Sadhananda Swamigal: ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...

Sadhananda Swamigal: ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...: 9ன் சிறப்பு தெரியுமா? எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்க...

செவ்வாய், 13 அக்டோபர், 2015

தினமும; ஒரு திருபுகழ;


முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே, சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்** சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும், கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே. குறிப்பு: முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது. * தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார். ** அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்.

திங்கள், 12 அக்டோபர், 2015

திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் 4ம் திருமுறை (இப்பதிகப் பாடல்களை பாடுவோர்க்கு துண்பம் என்பதே வாராதாம்) மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே விளக்கம் மாப்பிணை - மான் கன்று. சிவபிரான், தனது இடது பாகத்தில் மான் கன்றினை ஏந்திக் காட்சி அளிக்கிறார். தனது உடலின் இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருக்கும் சிவபிரானைப் பற்றி குறிப்பிடும்போது, அப்பர் பிரானுக்கு சிவபிரான் இடது கையில் ஏந்தி இருக்கும் மான் கன்று நினைவுக்கு வந்தது போலும். அழகான உமையம்மையை நினைக்கும் எவருக்கும், இளமானின் அழகான தோற்றம் நினைவுக்கு வருவது இயல்புதானே. சிவபிரானின் திருவடிகளை அனைவரும் பூக்கள் தூவித் தொழுவதால், அவரது திருவடிகள் எப்போதும் பூக்களுடன் இணைந்த தன்மையில் காணப்படுகின்றன. நாவுடன் பிணைந்து தழுவிய பதிகம் என்று குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான் நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகம் பிணைந்து, எப்போதும் பிரியாது, இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று இங்கே அறிவுறுத்துகிறார். கடைக்காப்பு என்ற வகையில் தனது பதிகங்களுக்கு அப்பர் பிரான், அந்தப் பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பதில்லை. ஆனால், இந்த நமச்சிவாயப் பதிகத்தில் பலன் கூறப்பட்டுள்ளது. இதேபோல், இராமேச்சுரம் மீது அருளிய பாசமும், கழிக்க கில்லா என்று தொடங்கும் பதிகத்திலும், அப்பர் பிரான் அந்தப் பதிகத்தைப் பாடுவதால் ஏற்படும் பலனைக் குறிப்பிட்டுள்ளார். அப்பர் பிரானுக்கு சமணர்கள் கொடுத்த துன்பம் நீங்கப்பெற்று அவர் திருப்பாதிரிப்புலியூர் அருகே கரை ஏறியதே, இந்தப் பதிகம் அளிக்கும் பலனுக்குச் சான்றாகத் திகழ்கிறது. பொழிப்புரை மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக்கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால், எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது. ••• முடிவுரை துன்பங்கள் நம்மைத் தாக்கும்போது, நம்முடன் இருந்து காக்கும் திருவைந்தெழுத்தினை நினைத்து, நாவுக்கரசர் நிரம்பிய அன்புடன் இந்தப் பதிகத்தைப் பாடியவுடன், கடலில் நாவுக்கரசரைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த கல் மிதந்தது என்றும், அவரைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்தன என்றும் சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகிறார். மேலும், நல்வினை தீவினை என்றும் இருவினைப் பாசங்கள், ஆணவ மலம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால், பிறவிப் பெருங்கடலில் விழும் உயிர்களைக் கரையேற்றும் ஐந்தெழுத்து மந்திரம், நாவுக்கரசரைக் கடலில் ஆழாது மிதக்கச் செய்வது ஒரு வியப்பான செயல் அல்ல என்றும், சேக்கிழார் அதற்கு அடுத்த பாடலில் கூறுகிறார். இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வரு பாவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ நமது உயிர், இருவினைப் பாசங்களால் (அறம், பாவம்) ஆணவ மலத்துடன் பிணைக்கப்பட்டு, உடலுடன் கூடிய நிலையில் இருப்பது, திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகரால் உணர்த்தப்படுகிறது. மறைந்திட மூடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை தனது அலைக் கரங்களால், நாவுக்கரசுப் பெருமானை கரையில் கொண்டு சேர்ப்பதற்கு வருணன் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும் சேக்கிழார் கூறுகிறார். நாவுக்கரசர் கரையேறிய இடம், கரையேறிய குப்பம் (கடலூருக்கு அருகில் உள்ளது) என்று அழைக்கப்படுகிறது. பின்னர், நீலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தில், அப்பர் பிரான், சமணர்களின் வஞ்சனையால் தான் கல்லோடு கட்டப்பட்டுக் கடலில் தள்ளப்படும் நிலைக்கு ஆளானது என்று குறிப்பிடுகிறார். கல்லினோடு என்னை பூட்டி அமண் கையர் ஒல்லை நீர் புக என் வாக்கினால் நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியினைக் கடந்து கொள்ளம்புதூர் சென்று இறைவனைத் தரிசிக்க ஞானசம்பந்தர் நினைத்தார். வெள்ளத்தை மீறி தன்னைக் கரை சேர்க்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை இறைவன் முன் வைத்தபோது அருளிய பதிகம், கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம். அதேபோன்று, வெள்ளம் பெருகியோடும் காவிரியின் எதிர்க்கரையில் உள்ள திருவையாற்றுப் பெருமானைத் தரிசிக்க சுந்தரர் திருவுள்ளம் கொண்டார். வெள்ளம் வடிந்து தனக்கு வழிவிட வேண்டும் என்று சிவபிரானிடம் விண்ணப்பம் வைத்த பாடல், பரவும் பரிசு ஒன்று அறியேன் என்று தொடங்கும் பதிகம். இந்த இரண்டு பதிகங்களும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகம்போல் காந்தாரபஞ்சமம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். கடல் அலைகளின் இரைச்சலையும், நதியில் காணப்பட்ட வெள்ளப்பெருக்கின் ஓசையையும் மீறி தங்களது பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, உரத்த குரலில் பாடப்படும் காந்தாரபஞ்சமம் பண், மூவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டதோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. வாழ்வில் எத்தனை துன்பம் வந்தாலும், அவற்றை வெற்றிகொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும், நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப்படுகிறது.

திருமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார். தில்லையில் அருளப்பட்டது பாடலின்பம் சீர்ஆர் திருவடித் திண்சிலம்பு சிலம்புஒலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகம்மகிழ, தேர்ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடம்செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ. * மாஆர ஏறி, மதுரைநகர் புகுந்துஅருளி, தேவுஆர்ந்த கோலம் திகழ, பெருந்துறையான் கோஆகி வந்துஎம்மைக் குற்றேவல் கொண்டுஅருளும் பூஆர் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. பொருளின்பம் சிறப்பு நிறைந்த சிவபெருமானின் திருவடிகளில் திண்மையான சிலம்புகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்பதற்கு என் மனத்தில் தீராத ஆசை உண்டானது, தேர்கள் சிறப்பாகச் செல்லும் அகன்ற வீதிகளைக் கொண்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் என் உள்ளம் மகிழும்படி திருநடனம் செய்தான், அந்தப் பேரானந்தத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம். * குதிரையின்மேல் ஏறி மதுரைநகருக்குள் புகுந்தான் சிவபெருமான், தன்னுடைய தெய்வ வடிவத்தை அழகுறக் காட்டினான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தலைவனாக வந்து நம்மை ஆட்கொண்டான், எல்லாருக்கும் அருள் பொழியும் அவனுடைய மலர்த் திருவடிகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

திருமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார். தில்லையில் அருளப்பட்டது பாடலின்பம் சீர்ஆர் திருவடித் திண்சிலம்பு சிலம்புஒலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகம்மகிழ, தேர்ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடம்செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ. * மாஆர ஏறி, மதுரைநகர் புகுந்துஅருளி, தேவுஆர்ந்த கோலம் திகழ, பெருந்துறையான் கோஆகி வந்துஎம்மைக் குற்றேவல் கொண்டுஅருளும் பூஆர் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. பொருளின்பம் சிறப்பு நிறைந்த சிவபெருமானின் திருவடிகளில் திண்மையான சிலம்புகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்பதற்கு என் மனத்தில் தீராத ஆசை உண்டானது, தேர்கள் சிறப்பாகச் செல்லும் அகன்ற வீதிகளைக் கொண்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் என் உள்ளம் மகிழும்படி திருநடனம் செய்தான், அந்தப் பேரானந்தத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம். * குதிரையின்மேல் ஏறி மதுரைநகருக்குள் புகுந்தான் சிவபெருமான், தன்னுடைய தெய்வ வடிவத்தை அழகுறக் காட்டினான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தலைவனாக வந்து நம்மை ஆட்கொண்டான், எல்லாருக்கும் அருள் பொழியும் அவனுடைய மலர்த் திருவடிகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

திருமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார். தில்லையில் அருளப்பட்டது பாடலின்பம் சீர்ஆர் திருவடித் திண்சிலம்பு சிலம்புஒலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகம்மகிழ, தேர்ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடம்செய் பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ. * மாஆர ஏறி, மதுரைநகர் புகுந்துஅருளி, தேவுஆர்ந்த கோலம் திகழ, பெருந்துறையான் கோஆகி வந்துஎம்மைக் குற்றேவல் கொண்டுஅருளும் பூஆர் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. பொருளின்பம் சிறப்பு நிறைந்த சிவபெருமானின் திருவடிகளில் திண்மையான சிலம்புகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்பதற்கு என் மனத்தில் தீராத ஆசை உண்டானது, தேர்கள் சிறப்பாகச் செல்லும் அகன்ற வீதிகளைக் கொண்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் என் உள்ளம் மகிழும்படி திருநடனம் செய்தான், அந்தப் பேரானந்தத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம். * குதிரையின்மேல் ஏறி மதுரைநகருக்குள் புகுந்தான் சிவபெருமான், தன்னுடைய தெய்வ வடிவத்தை அழகுறக் காட்டினான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தலைவனாக வந்து நம்மை ஆட்கொண்டான், எல்லாருக்கும் அருள் பொழியும் அவனுடைய மலர்த் திருவடிகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு நவ ராத்திரி கொலு பூசை


அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு நவ ராத்திரி கொலு பூசை நாளை காப்பு நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அன்றையதினம் அம்மன் கொலுவில் எழுந்தருள, திரு ஆனந்தவல்லியம்மன் கொலு மண்டபத்தில் ைவத்து இந் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் ஏழுர் சாலியர் சமுதாயத்தினரால் ஏழு முளைப்பாரியும் வளர்க்கப்படும். அனுதினமும் அம்மன் கொலுப்பாடல்கள் பாடியும் சிறப்பு ஆராதனைகளும் செய்து, அம்மன் உரு ஏற்றி ஆனந்தவல்லியின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க சிறப்பு பூசைகள் செய்யப்படும். விழாவிற்கு ஆனந்தவல்லி யம்மன் திருவருளால் நல்ல மழை பெய்தும், அரசு பாதுகாப்பு முயற்சியாலும் தாணிப்பாறை ஒரு சுத்தமான ஒரு ரம்மியமான ஆன்மிகத்தலமாக இவ்வாண்டு காட்சி அளிக்கிறது. வரும்13.10.2015 பிரதமை திதியில் அம்மன் ஏழுர் சாலியர் சமூகத்தினரால் நடத்தப்படும் நவராத்திரி திருவிழாவிற்கு காப்புக் கட்டும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நவராத்திரி கொலும் சிறப்புடன் நடைபெற உள்ளது. ஆன்மிக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இவ்வாண்டு சரியான தருணம் என்பதை பக்த கோடிகள் அனைவருக்கும் விண்ணப்பிக்கப் படுகிறது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மாணிக்க வாசகர் அருளிய திரு வாசகம்


மாணிக்க வாசகர் அருளிய திரு வாசகம் உலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற தினமும் இதைப்பாடினால் மெய்ஞான அறிவு பெருகும். இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே பாடல் 1 அடங்கிய அலைகளையுடைய கங்கையின் நீர் ததும்புகின்ற சடையை உடையவனே! இரும்பு போன்ற வலிமையான நெஞ்சையுடையவனாகிய என்னைப் பலகாலும் உன் வசமாக இழுத்து என் எலும்பினை உருகும்படி செய்து உன் இரண்டு திருவடிகளில் கரும்பு தருகின்ற இனிமை போன்ற இனிமையை எனக்கு உண்டாக்கி யருளினாய். இத்தகைய உன்னுடைய பெருங்கருணை நரிகள் எல்லா வற்றையும் பெரிய குதிரைகளாக ஆக்கியது போன்றது அன்றோ கடைசி பாடல் பாடல் எண் : 10 நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.
 பொழிப்புரை : தேன்போன்றும், இனிமையான அமுதத்தைப் போன்றும் இனிக்கின்ற " சிவாய நம " என சிவபிரானானவன் தானே எழுந்தருளி வந்து, என் மனத்துள் புகுந்து உடம்போடு கூடிய உயிர் வாழ்க்கையை வெறுத்து நீக்கும்படி அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான். அதனால் சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப் பெற்றேன். இப் பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?. உயிர் வாழ்க்கையை ஒறுத்து அன்றே வெறுத்திட அருள் செய்தான்; அதனால், சிவாயநம எனப் பெற்றேன்; அதற்கு அன்னதொரு தவத்தை நான் செய்தேனோ` என்கிறார்.

புனல் வாத திருப்பதிகம் (ஏடு வையாற்றில் எதிர்த்து வந்தது ) திரு ஞானசம்பந்தர் பாடியது


புனல் வாத திருப்பதிகம் (ஏடு வையாற்றில் எதிர்த்து வந்தது ) திரு ஞானசம்பந்தர் பாடியது சமணர்கள், பாண்டியர் நகை உட்கொண்டு சொல்லிய சொற்பொருளை அறியாராகி, திரித்துணர்ந்து. "முன்னே இரண்டு தரம் வாது செய்தோம். இன்னும் ஒருதரம் செய்ய வேண்டும். மூன்றுதரத்தில் ஒருதரமாயினும் வெற்றி பெறுவோம்" என்றார்கள். பாண்டியர் "இது என்னவார்த்தை" என்று மறுத்த பின்னும். பிள்ளையார் சமணர்களை நோக்கி "இனி என்ன வாது செய்வோம்" என வினாவியருள; சமணர்கள் "நாங்கள் இருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை ஓடுகின்ற வைகையாற்றிலே இடுவோம் எதிர்த்துச் செல்லும் ஏடே மெய்ப்பொருளையுடையது" என்றார்கள். பிள்ளையாரும் "அப்படியே செய்வோம்" என்று அருளிச்செய்தார். அப்பொழுது குலச்சிறைநாயனார் சமீபத்தில் வந்து, "இனிச் செய்யப்படும் இவ்வாதிலே தோற்றவர்கள் செய்வது யாது" என்றார். அதைக் கேட்ட சமணர்கள் அவர் மேற் கோபங்கொண்டு, பொறாமை காரணமாக, தங்கள் வாய் சோர்ந்து "நாங்கள் வாதிலே தோற்றோமாயின், எங்களை இவ்வரசர் கழுவில் ஏற்றக்கடவர்" என்றார்கள். இதைக் கேட்ட அரசர் "வைகையாற்றிலே ஏடு இடும்பொருட்டுப் புறப்படுங்கள்" என்று சொல்ல; முன்னே பிள்ளையார் இரத்தினாசனத்தினின்றும் இறங்கிப் போய், முத்துச்சிவிகைமேற் கொண்டு சென்றார். அவர்பின்னே பாண்டியர் குதிரைமேற்கொண்டு சென்றார். சமணர்கள் மயக்கமேற்கொண்டு சென்றார்கள். சமுத்திரத்தை நோக்கித் திரையெறிந்து அதிவேகத்துடன் பாய்கின்ற வைகையாற்றின் கரையை அடைந்தவுடனே பாண்டியர் "இருபக்ஷத்தாரும் தங்கள் தங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை இடக் கடவர்கள்" என்றார். அரிசியாகிய உள்ளீடில்லாத நெற்பதர்போல "அறிவாகிய உள்ளீடு இல்லாத மக்கட்பதராகிய சமணர்கள் "அத்திநாத்தி" என்று எழுதிய ஏட்டை நதி அதிவேகத்துடன் பாய்தலைக் கண்டும், அவா மேலீட்டினாலே இடுதலும்; அது விரைந்து கொண்டு கடலை நோக்கி ஓடிற்று. சமணர்கள் ஆறுகொண்டோடும் ஏட்டைத் தொடர்ந்து எதிரே அனைப்பவர் போலக் கரைமேல் ஓடிப்போனார்கள். அவ்வேடு நூறுவிற்கிடைக்கும் அப்பாற் சென்றமையால், அதைக் காணுதற்கும் கூடாதவர்களாகி, வேறொருசெயலுமின்றி, தங்களுக்கு நாசகாலம் வந்தது என்று அஞ்சி நடுநடுங்கி, அரசருக்கு எதிரே வந்து தங்கள் நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார்போல பிள்ளையாரை நோக்கி "நீரும் உம்முடைய ஏட்டை இட்டால் அறியலாம்" என்றார்கள். பாண்டியராஜா அவர்களை விட்டு பிள்ளையாருடைய திருக்குறிப்பை நோக்க; தம்மை அடைந்த அன்பர்களுடைய சனனமரணங்களுக்கு ஏதுவாய் இருக்கின்ற மலமாயாகர்மங்களை நீக்கியருளுந்தேசிகோத்தமராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், பாண்டியராஜர் தம்முடைய அருமைத் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி பூசப் பெற்று மல பரிபாகமும் இருவினையொப்பும் உற்று நிற்றலால், அவருக்கும் அவர் போலப் பக்குவப்படும் சர்வான் மாக்களுக்கும் சைவ சமயத்துண்மைப் பொருளை விளக்கும் உபதேசமொழியாகிய "வாழ்கவந்தணர்" என்னும் திருப்பாசுரத்தைப் பாடி, ஏட்டில் எழுதி அத்திருவேட்டைத் தமது திருக்கரத்தினாலே வைகை நதியில் இட்டருளினார். அத்திருவேடு நதியிலே எதிர்ந்து ஜலத்தைக் கிழித்துக்கொண்டு சர்வான்மாக்களுக்கும் இதுவே மெய்ப்பொருள் என்று காட்டிக் கொண்டு சென்றது. பரமசிவனே எல்லாப்பொருளும் என்று எழுதிய திருவேட்டிலே "வேந்தனு மோங்குக" என்று பாடியருளியபடியால் பாண்டியராஜருடைய கூன் நிமிர்ந்தது. ஏடு எதிகொண்டு செல்லும்பொழுது, தேவர்களெல்லாரும் ஸ்தோத்திரஞ்செய்து, புஷ்பமாரி பெய்தார்கள் பாண்டியர் அற்புதங்கொண்டு நின்றார். சமணர்களெல்லாரும் அஞ்சிப்பதைபதைத்துத் தலைகுனிந்து நின்றார்கள். குலச்சிறைநாயனார் அத்திருவேட்டைத் தொடர்ந்து எடுத்தற்கு விரும்பி, காற்றைப்போல அதிவேகத்தோடு செல்கின்ற குதிரைமேல் ஏறிக்கொண்டு, பின் சென்றார். பிள்ளையார் அவ்வேடு தங்கும் பொருட்டு, "வன்னியுமத்தமும்" என்னுந் திருப்பதிகம் பாட; குலச்சிறைநாயனார் சிவாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற நீர் நடுவிலே புகுந்து, அங்கே தங்கிய ஏட்டை எடுத்துச் சிரமேற் கொண்டு பெருமகிழ்ச்சி பொங்க, கரையில் ஏறி, திருவேடகத்தில் எழுந்தருளியிருக்குங் கடவுளை வணங்கித் துதித்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சந்நிதியில் வந்து அவருடைய திருவடிகளை வணங்கிக்கொண்டு, பாண்டியர் முதலாயினோ ரெல்லாருக்குங் காட்ட; அடியார்கள் எல்லாரும் அத்தியந்த ஆனந்தத்துடனே "ஹரஹர" என்று ஆரவாரித்தார்கள். பாடல் எண் : 1 வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. பொழிப்புரை : உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக பாடல் எண் : 2 அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. பொழிப்புரை : பாச ஞானத்தாலும் , பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர் . பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து , நெருப்பேந்திய கையர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியவர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர் . ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர் . அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ? பாடல் எண் : 3 வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ. பொழிப்புரை : இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர் . தந்தையும் , தாயுமில்லாதவர் . தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர் . அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது பாடல் எண் : 4 ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். பொழிப்புரை : இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும் , பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும் , சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன . ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா . எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும் , தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது . தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை . பாடல் எண் : 5 ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே. பொழிப்புரை : இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா . அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும் , அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன் . அவனை விரைவில் வந்து சார்ந்து , மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் . இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் . பாடல் எண் : 6 ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக் கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில் நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே. பொழிப்புரை : இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா , மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின் , இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம் . இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம் . பாடல் எண் : 7 கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே. பொழிப்புரை : சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவபூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ? பாடல் எண் : 8 வேத முதல்வன் முதலாக விளங்கி வையம் ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப் பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. பொழிப்புரை : வேதத்தை அருளிச் செய்தவனாய் , வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு , குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க , பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும் பாடல் எண் : 9 பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப் பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப் போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே. பொழிப்புரை : கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட , அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி , தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து , தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ? பாடல் எண் : 10 மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும் பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. பொழிப்புரை : திருமாலும் , நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும் , பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி , பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு , தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான் பாடல் எண் : 11 அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும் தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில் பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே. பொழிப்புரை : சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி , மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர் . சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல , வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில் , இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும் . ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு . ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும் , அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும் . திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை

வெள்ளி, 9 அக்டோபர், 2015

Aanmigam: சனி மகா பிரதோஷம்

Aanmigam: சனி மகா பிரதோஷம்: சனி மகா பிரதோஷம் சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும். 10.10.2015 சனிக்கிழமை மகாபிரதோஷம் பிரதோஷ விரத மகிமை ...

செவ்வாய், 6 அக்டோபர், 2015

சக்கரை அம்மா. | இந்து சமயம்

சக்கரை அம்மா. | இந்து சமயம்

திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்


https://vpoompalani05.files.wordpress.com/2015/10/manickavasagar_1.jpg திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார் உலகம் முழுவதும் உள்ள நம் தமிழ் இனம் அழியாமல் தடுத்து நிறுத்தவும், இனப்படுகொடுலையை எதிர்த்து போராடுவர்கள் எதிரிகளிடமிருந்து வெற்றி கொள்ளவும், நாம் அனுதினமும் பரம்பொருளாகிய சிவபெருமானை நினைந்து மனம் உருகி ஓத ேவண்டும். அப்படி தொடர்ந்து பாடினால் தக்கன் வேளவியை எப்படி வீரபாகுத்தேவரால் தகர்க்க ஆற்றல் தந்தருளினாரோ அதுபோல், நமக்கும் ஆற்றல் தந்து அநீதியை அழிக்க வல்லமைையத்தந்து எதிர்ப்பு சக்தியை பெருக்கி, எதிரியை வெல்ல முடியும் என்பது திண்ணம். இது ஞான வெற்றயாகும். இந்த வெற்றியின் புகழ்பாடும் இப்பாடல்களை பாடி நாமும் வெற்றி பெறுவோமாக. பாடல் எண் : 1 வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. பொழிப்புரை : இறைவனது வில் வளைந்தது; வளைதலும் போர் மூண்டது; மூளுதலும் முப்புரங்களும் ஒருமிக்க வெந்து நீறாயின. அந்தத் திரிபுரத்தை அழித்த நற் செய்தியை நினைத்தால் வியக்கத்தக்க தாக இருக்கிறது என்று உந்தீபறப்பாயாக! பாடல் எண் : 2 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. பொழிப்புரை : இறைவர் திருக்கரத்தில் இரண்டு அம்பிருக்கக் கண்டிலேம்; கண்டது ஓரம்பே; அந்த ஓர் அம்பும் திரிபுரம் எரித்தற்கு அதிகமேயாயிற்று என்று உந்தீபறப்பாயாக! `ஏகம்பர் தங்கையில்`` என்றதனை முதலில் வைத்து. ``ஓரம்பே`` என்றதன்பின், `கண்டனம்` என்பது வருவிக்க, ``முப்புரம்`` என்று அருளினாராயினும், `புரம் மூன்று` என உரைத்தல் திருவுள்ள மாம். ஆகவே, `இறைவர் கையில் இருந்தது ஓரம்பே; பகையாய் எதிர்ந்த புரங்களோ மூன்று; எனினும், அவைகளை அழித்தற்கு அவ் ஓர் அம்புதானும் சிறிதும் வேண்டப்படாதாயிற்று` என்பது பொருளாதல் அறிக. சிவபெருமான் திரிபுரங்களை அம்பு முதலிய வற்றால் அழியாது, புன்சிரிப்பானே அழித்தமையின், அவ் ஓர் அம்பும் வேண்டப்படாததாயிற்று. இதனால், இறைவன், எல்லாவற்றையும் கரணத்தானன்றிச் சங்கற்பத்தானே செய்தலைக், கூறியவாறு. பாடல் எண் : 3 தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற. பொழிப்புரை : தேவர்கள் தேரினை இணைத்து விடுத்ததும், அத் தேரில் இறைவன் திருவடியை வைத்ததும், தேரினது அச்சு முறிந்தது; எனினும் முப்புரங்கள் அழிந்தன என்று உந்தீபறப்பாயாக! `தச்சு`` என்றதற்கு, `தேர்` என்னும் செயப்படு பொருளும், அச்சுமுரிதலுக்கு, அஃது என்னும் எழுவாயும், வருவிக்க. ``தாம்`` என்றது, முன்னை திருப்பாட்டில், ``ஏகம்பர்`` எனக் குறிக்கப்பட்டது. பாடல் எண் : 4 உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. பொழிப்புரை : பிழைக்க வல்லவராயிருந்த மூவரையும் கயிலைக்குத் துவார பாலகராகச் செய்து முப்புரத்தை அம்பேவி எரிக்க வல்லவனாகிய உமாதேவி பாகனைக்குறித்து உந்தீபறப்பாயாக! இதனைத் திருஞானசம்பந்தரும் எடுத்தருளிச்செய்தல் காண்க. `திரிபுரங்கள் அழிக்கப்பட்ட பொழுது அழியாது பிழைத்தவர் மேற்குறித்த மூவரே` என்பதையும், பின்பு அவர்கள், சிவபெருமான் திருவருளால் அப்பெருமானது வாயில் காவலராயினர்` என்பதையும், முப்பு ரங்களின் மூவர் புத்தன் மொழித்தி றத்தின் மயங்கிடாது அப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு ளாற்றின் நின்றனர் ஆதலால் பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை நாவின் மன்னவர் போல்எரி தப்பி வாழ்ந்தனர் ஈசன் ஆணையில் நிற்ப வர்க்கிடர் சாருமோ. சுதன்மன் என்று சுசீலன் என்று சுபுத்தி என்று சொலப்படும் அதன்மம் நீத்தஅம் மூவருக்கும் அருள்சு ரந்துமை பாகனார் இதம்வி ளங்க வரங்கள் வேட்ட விளம்பு மின்என அங்கவர் பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி வாயில் காப்பருள் என்றனர். பாடல் எண் : 5 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருத்திர நாதனுக் குந்தீபற. பொழிப்புரை : தக்கனது யாகம் குலைதலும் தேவர்கள் ஓடின விதத்தைப் பாடி உந்தீபற; உருத்திர மூர்த்தியாகிய இறைவன் பொருட்டு உந்தீபறப்பாயாக! பாடல் எண் : 6 ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் றுந்தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. பொழிப்புரை : பிரம தேவனுக்குத் தந்தையாகிய, திருமாலானவன் தக்கன் வேள்வியில் அவியுணவைக் கொண்டு, அந்நாளில் வீரபத்திர ரால் பெரிதும் தாக்கப்பட்டு உயிர் ஒன்றையுமே உடையவனாய் இருந்தான் என்று சொல்லி, உந்தீபறப்பாயாக! பாடல் எண் : 7 வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. பொழிப்புரை : கொடியவனாகிய அக்கினிதேவன் அவியுண்ண வளைத்த கையை வெட்டினான் என்று உந்தீபற, வெட்டுதலும் யாகம் கலங்கிற்று என்று உந்தீபறப்பாயாக! பாடல் எண் : 8 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேஏடி யுந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. பொழிப்புரை : பார்வதி தேவியைப் பகைத்துப் பேசின தக்கனை உயிரோடு வைத்துப் பார்ப்பதனால் சிவபெருமானுக்கு என்ன பயன்? என்று உந்தீபறப்பாயாக! பாடல் எண் : 9 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற. பொழிப்புரை : இந்திரன் ஒரு குயில் உருக் கொண்டு ஒரு மரத்தில் ஏறினான்; அவன் தேவர்களுக்கு அரசன் என்று உந்தீபறப்பாயாக! பாடல் எண் : 10 வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற. பொழிப்புரை : கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக! திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

https://vpoompalani05.files.wordpress.com/2015/10/manickavasagar_1.jpg?w=200 மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி) சென்ற தொடரில் திருக்கோவை என்பதன் விளக்கம் பற்றி பார்த்தோம். இப்பகுதியில் மாணிக்க வாசகரின் திருக் கோவையின் பாடல்களின் சிறப்பு பற்றி காண்போம். இயற்கை புணர்ச்சி பாடல் எண் : 1 திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே இதன் பொருள்:திருவளர் தாமரை திருவளருந் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் அழகு வளரு நீலப் பூக்களையும்; ஈசர்தில்லைக் குருவளர் பூ குமிழ் ஈசர் தில்லைவரைப்பின் கணுண்டாகிய பூங்குமிழினது நிறம்வளரும் பூவினையும்; கோங்கு கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு; ஓங்கு தெய்வ மரு வளர் மாலை ஒர் வல்லியின் ஒல்கி மேம்பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒருவல்லிபோல நுடங்கி; அன நடை வாய்ந்து அன்னத்தினடைபோல நடைவாய்ந்து; உரு வளர் காமன்தன் வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது வடிவுவளருங் காமனது வெற்றிக் கொடி போன்று விளங்காநின்றது; என்ன வியப்போ! என்றவாறு. திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்றவாறு. திருமகடங்குந் தாமரையெனினுமமையும். பூங்குமி ழென்பது, முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்ற தோராகுபெயர். ஈசர் தில்லையென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால், நில மயக்கங் கூறியவாறாயிற்று. ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்கு மின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே துய்ப்ப ரென்பது போதரும். போதர, இம்மையின்பத்திற்குத் தில்லையே காரணமென்பது கூறியவாறாயிற்று. ஆகவே, ஈசர் தில்லை யென்றதனான், மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும். செய்யுளாதலாற் செவ்வெண்ணின்றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலையெனவியையும். தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றானியன்ற பிறமாலையோடு இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்தது. உருவளர்காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத்தோற்று உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை. அன நடைவாய்ந்தென்பதற்கு அவ்வவ் வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும். திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்க மென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோவெனின், யாவ னொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவும் நலனும் ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால், திரு வென்றது அழகுக்கே பெயராயிற்று. அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; கோயிலைத் திருக்கோயிலென்றும், கோயில் வாயிலைத் திருவாயி லென்றும், அலகைத் திருவலகென்றும், பாதுகையைத் திருவடிநிலை யென்றும் வழங்கும் இத்தொடக்கத்தன வெல்லாந் திருமகளை நோக்கியெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது. ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக. அதனாற்றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே. அல்லதூஉந் தான் கண்டவடிவின் பெருமையைப் பாராட்டுவானாகலான், ஒருத்தியிருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானாமெனக் கொள்க. இனித் திருவளர்தாமரை சீர்வளர்காவி யென்றனபோல இதனையுங் குருவளர் குமிழென்னாது பூங்குமிழென்ற தெற்றிற் கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவைநோக்கியன்று, ஈண்டுச்செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகுபெயரை நோக்கியு மெனவறிக. அஃதென்போலவெனின், ``தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்`` (முல்லைக்கலி-1) என்பது போல. கோங்கென இதனை யொழிந்த நான்கிற்கு மடைகொடுத்து இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுதனோக்கி. என்னை, பாலைக்கு நிலமின்றாகலான். ஆயின் மற்றைய நிலம்போலப் பாலைக்கு நிலமின் மையாற் கூறினாராகின்றார் மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய முலைக்கு வமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோவெனின், அடைகொடுப்பிற் பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம். ஆகலான் இதற்கடைகொடாமையே முலைக்கேற்றத்தை விளக்கி நின்றது, அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு அடைகொடுத்து நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க. இனி உடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. அவ்விரண்டனுள்ளும் இத்திருக் கோவையின்கணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடிபோன்று விளங்கி அன்னநடைத்தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப்பூக்களாற் றொடுக்கப் பட்டோங்குந் தெய்வமருவளர்மாலையின் வரலாறு விரித்துரைக்கப் படுகின்றதென்பது. என்றது என்சொல்லியவாறோ வெனின், தாமரை மருதநிலத்துப்பூவாதலான் மருதமும், நெய்தல் நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லைநிலத்துப் பூவாதலான் முல்லையும், கோங்கு பாலைநிலத்துப் பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற் குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையுஞ் சுட்டினார். ஆகலாற்றா மெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமைகூறாது தில்லைநகரின் பெருமை கூறினார், நிலமயக்கங் கூறுதலான். அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப் பொருண் முடித்த லென்னுந் தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார். என்னை, பைங்காந்தளென்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான். அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு இத்திருக்கோவையின்கண் முன்னர்க் ``குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்`` (தி.8 கோவை பா.205) என்னும் பாட்டினுட் கண்டு கொள்க. அல்லதூஉஞ் ``சினையிற்கூறு முதலறிகிளவி`` (தொல் - வேற்றுமைமயங்கியல் - 31) என்னுமாகு பெயரானுமாம். ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங் கூறவேண்டியது எற்றிற்கெனின், ஓரிடத்தொரு கலியாணமுண்டா னால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத் துக்கூடி அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன. உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப் பொருளைச்சுட்டினார். யாருங்கேட்போரின்றித் தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கத்தையே யொத்த களவொழுக் கத்தையே சுட்டினார். ஈசர்தில்லை யென்றமையின், வீடுபேற்றின் பயத்ததெனச் சுட்டினார். களவொழுக்கமென்னும் பெயர்பெற்று வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்பொருணுதலிக் கந்தருவ ரொழுக்கத்தோடொத்துக் காமனது வென்றிக்கொடிபோன்று ஐந்திணையின்கண்ணும் வென்று விளங்காநின்ற கடிமலர்மாலையின் வரலாறு இத்திருக்கோவையின்கணுரைக்கப்படுகின்றதென்றவாறு. களவொழுக்கத்தினை ஒரு மாலையாகவுட்கொண்டு உருவகவாய் பாட்டா னுணர்த்தினாரென்பது. இன்பத்தை நுதலியதென்றா ராயினும், இன்பந் தலைக்கீடாக அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையும் நுதலிற்று. அவற்றுள் வீடுநுதலியவாறு மேலே சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலிய வாறென்னையெனின், ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார். இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாருமில்லை இழிந்தாரல்லது; இவளுமன்னள். இவர் ஒருவர்கண்ணொருவர் இன்றியமையாத அன்புடையராகலான், இவர்கண்ணே அம்மூன்றுமுளவாம். இவ் வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே விழைவு விடுத்த விழுமி யோருள்ளமும் விழைவின்கட்டாழுமாதலின், காமனது வென்றிக் கொடியெனவே வென்றிகொள்ளாநின்றது என்றானென்பது. முதற்கட் கிடந்த இப்பாட்டுக் காட்சியின்மேற்று. இப்பாட்டால் வேட்கை இவன்கணுண்டாயவாறென்னை பெறுமாறெனின், உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையிற் பெற்றாம். உவகைமிகுதியாற் சொன்னானாகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு: உவகை. உவகையாவது சிருங்காரம்; அது காமப் பொருண் முதலாய வின்பத்தின்மேற்று. உவகையென்பது காரணக்குறி, உவப்பித்தலினுவகையாயிற்று. உவந்த நெஞ்சினனாய் அவளையோர் தெய்வப் பூமாலையாக வுருவகங்கொண்டு காமனது வென்றிக்கொடியோடுவமித்துச் சொன்னானென்பது. என்னை மாலையாமாறு, பூப்புனை மாலையு மாலைபுனை மாதருந் தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியுங் கோச்சேரன் பெயருங் கோதையென் றாகும் -திவாகரம், 11ஆவது என்பதனாற் பெண்ணுக்கு மாலையென்று பெயராயிற்று. ஆயின் யாரொருவரையுங் கேசாதி பாதமாதல் பாதாதிகேசாமாதல் வருணிக்கவேண்டும். அவற்றுள், இது கேசாதிபாதமாக வருணிக்கப் பட்டது. என்னை, திருவளர் தாமரை யென்று முகமுதலாகவெடுத்துக் கொண்டு அன்னநடையென்று பாதத்திலே முடித்தலான். ஆயின், இதில் நடைகண்டானாயின் மேல் ஐயநிலையுணர்த்தல் வழுவா மெனின், இவன் நடைகண்டானல்லன், இம்மாலை நடக்குமாயின் அன்னநடையையொக்குமென்றான். வாய்ந்தென்பது நடையின் வினையாகலிற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்த தென்றது அன்னத்திற்குச்சினை கால், காலிற்கு வினை நடை, ஆகையால் முதலென்றது அன்னத்தை. அங்ஙனமுவமித்துச் சொன்னதனாற் பயன் மகிழ்தல். என்னை, ``சொல்லெதிர் பெறாஅன் சொல்லியின் புறுதல், புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே`` (தொல். பொருள். அகத்திணை - 50) என்று அகத்திணையியற் சூத்திரத்திற் சொன்னாராகலினென்பது. அஃதேல் உவகையென்னும் மெய்ப்பாட்டானே மகிழ்ச்சி பெற்றாம். இனியிச்சொற்கள் விசேடித்து மகிழ்வித்தவா றென்னை யெனின், நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து தான் வேட்ட பொருள் வயிற் றன்குறிப்பன்றியேயுஞ் சொன்னிகழும்; நிகழுந் தோறும் மகிழ்ச்சி தோன்றுமென்பது. என்போல வெனின், ஒருவன் தான்வழிபடுந் தெய்வத்தைப் பரவிய செய்யுட்களை யோதியுணர்ந் திருந்தானெனினும், அவற்றான் அத்தெய்வத்தை வழிபடும்போழ்து கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் காண்டும். அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது துன்பமீதூரக் கலுழக்காண்டும்; இவை போலவென்பது. ஆகலின் நினைப்பின்வழியதுரையாயினும் நினைப்பின் உரைப்பயன் விசேடமுடைத்தென்பது. நெஞ்சின்மிக்கது வாய்சோர்ந்து சொன்னிகழுமென்பதனை இக்கோவையின் எண்வகை மெய்ப்பாட்டின்கண்ணுந் தந்துரைத்துக் கொள்க. பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது. மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின் கட்டோன்றிய விகாரத்தின் விளைவு. எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான்புகின் வரம் பின்றிப் பெருகுமென்பது. நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே இதன் பொருள்: சிற்றம்பலத்து நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்தின்கண் நிருத்தத்தை யிடைவிடாதே யாடியவன்; நெற்றித் தனிக்கண் ஒருத்தன் நெற்றியிலுண்டாகிய தனிக்கண்ணை யுடைய ஒப்பிலாதான்; பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி அவன் பயிலுங் கயிலையாகிய மலையினது உயர்ந்தவுச்சியில்; திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி புண்ணிய நீர் இடையறாது நிற்குஞ் சுனையைக் குடைந்தாடி; சிலம்பு எதிர் கூய் சிலம்பிற் கெதிரழைத்து; வருத்தம் பயின்று கொல்லோ இவ்வாறு வருத்தத்தைச் செய்யும் விளையாட்டைப் பயின்றோ பிறிதொன்றி னானோ; வல்லி மெல்லியல் வாடியது வல்லிபோலும் மெல்லிய வியல்பினை யுடையாள் வாடியது குறைநயப்பு கூறல்; தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித் தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர் மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ்சொல்லார் யாதே செயத்தக் கதுமது வார்குழ லேந்திழையே இதன் பொருள்: மாதே மாதே; தாது ஏய் மலர்க் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி தாதுபொருந்திய மலரையுடைய குஞ்சிகளின்கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் தண்டேனைப் பருகி; தேதே எனும் தில்லையோன் சேய் என தேதேயெனப்பாடுந் தில்லையையுடையானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சின வேல் ஒருவர் புனத்திடை வாளா வருவர் சினவேலையுடையாரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாராநிற்பர்; வந்து யாதும் சொல்லார் வந்து நின்று ஒன்று முரையாடார்; மது வார்குழல் ஏந்திழையே மதுவார்ந்த குழலை யுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே - அவரிடத்து நாஞ்செய்யத் தக்கது யாதென்றறிகின்றிலேன் எ-று. குஞ்சி தில்லை வாழ்வார் குஞ்சி; மலரினது குஞ்சியென விரித்து அல்லியென்றுரைப்பி னுமமையும். சேயோடொத்தல் பண்பு வடிவுமுதலாயினவும், சினவேலேந்தி வரையிடத்து வருதலுமாம். வேட்டைமுதலாகிய பயன்கருதாது வருவரென்பாள், வாளா வருவரென்றாள். முகம்புகுகின்றாளாதலின், பின்னும் ஏந்திழையே யென்றாள். சேயென்புழி எண்ணேகாரந் தொக்குநின்றது; என்னை, மேலே ``புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள் கொல்` மணம் சிறப்புரைத்தல் பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே இதன் பொருள்: சந்த புரை மேகலையாய் நிறத்தையுடைய வுயர்ந்த மேகலையையுடையாய்; எவர்க்கும் முன்னாம் அரசு அரியயன் முதலாகிய யாவர்க்கும் முன்னாயிருக்குமரசு; அம்பலத்து நின்று ஆடும் பிரான் இவ்வாறு பெரியனாயினும் எளியனாய் அம்பலத்தின்கண் எல்லாருங்காண நின்றாடுமுதல்வன்; அருள் பெற்றவரின் துயர் தீர அவனதருளுடையவரைப்போல நாந்துயர்தீர; புகுந்து நின்று நம்மில்லின்கட் புகுந்துநின்று; பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் முரசம் திகழும் பெருந்தேன் றிகழு மலை போலும் யானையினது வலியை நங்காரணமாக வழித்தவரது முரசு முழங்கி விளங்காநின்றது; முருகியம் நீங்கும் அதுவேயுமன்றி, வெறி காரணமாக ஒலிக்கும் முருகியமும் நீங்காநின்றது; இனியென்ன குறையுடையோம் ? எ-று. புகுந்துநின்று திகழுமெனக் கூட்டுக. வரையுயர்யானை யென்பதூஉம் பாடம். முருகுங் கமழுமென்று பாடமோதி, கலியாணத்திற் குறுப்பாம் நறுவிரை நாறாநின்றனவென் றுரைப்பாரு முளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை மகிழ்வித்தல். பரத்தையர் உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம் படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே இதன் பொருள்: உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வரகச்சாகவும் உடுத்து அணியாகவுமணிந்த வாளரவை யுடையவனது தில்லைக்கணுளனாகிய வூரன் இவ்வீதிக்கண்வர; எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப தெரிந்தணியப்பட்ட கைக்கணுளவாகிய இனவளைகளொலிப்ப; இள மயில் ஏர் கடுத்து இளமயிலதெழிலை யொத்து; அணி காமர் கரும்புருவச் சிலை கண் மலர் அம்பு அடுத்து மிக்கவழகையுடைய கரியபுருவமாகிய வில்லோடு கண் மலராகிய வம்பைச்சேர்த்தி; அணிவாள் இளையோர் ஒருங்கே சுற்றும் மாதிரம் பற்றினர் அணிகளுண்டாகிய வொளியையுடைய மகளிர் ஒருங்கே சுற்றுந்திசைகளைப்பற்றினர்; இஃதிவன் காதலிமாட்டென்னாம்! எ-று. அணி காமர் என்பன ஒருபொருட்கிளவியாய், மிகுதிதோன்ற நின்றன. ஒன்றாகவெழுந்து அணியினுங் கையினுமுளவாகிய சங்கொலிப்ப இளமைக்கணுண்டாகிய வுள்ளவெழுச்சிமிக்கு வில்லோடம்பையடுத்துப் பற்றி அரைக்கணியப் பட்ட வுடைவாளையுடைய இளையோர் திசைமுழுதுஞ் சூழ்ந்து பற்றினரெனப் பிறிதுமோர் பொருடோன்றி நின்றவாறு கண்டுகொள்க. கருப்புருவச் சிலை என்பது பாடமாயின் புருவமாகிய காமனது உட்கை உடைய கருப்புச்சிலையோடு கண்ணாகிய கள்ளையுடைய மலரம்பை யடுத்தென்றுரைக்க. சுற்றும்பற்றிய மாதிரமென்பது பாடமாயின், சுற்றும்பற்றி மேவாநிற்ப, அவ்விடத்து நகைக்குறிப் பாலெடுக்கப்பட்டு இவர் கைகள் வளையொலிப்பத் தலைமேலேறின வெனக் கூட்டி யுரைக்க. இதற்குச் சுற்றும் பற்றிப் போர்செய்யாநிற்பப் படைக்கல மெடுத்துச் சங்கொலிப்ப அணியுங்கையு மொருங் கெழுந்தனவெனப் பிறிது மொரு பொருளாகக் கொள்க. இதற்குப் பிறவுரைப்பாருமுளர். உரத்தகு வேல் உரத்தாற்றக்கவேல். மெய்ப்பாடு: மருட்கை. வியப்பாகலின், பயன்: பிரிவுணர்த்துதல் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com