புதன், 6 ஜூலை, 2016

கயிலைக்கு சமமான சிவத்தலங்கள் - 3, மயிலாடு துறை

கயிலைக்கு சமமான சிவத்தலங்கள் - 3, மயிலாடு துறை ( மாயவரம்)


கயிலைக்கு சென்று வழிபட இயலாதவர்கட்கு கயிலைக்கு சமமான தலங்களை நமது அருளாளர்கள் நமக்கு காட்டியுள்ளார்கள். அத்தலங்களுக்கு சென்று வழிபட்டு கயிலை நாதரின் அருள் பெறுவோமாக.
கயிலைக்கு சமமான தலங்கள் ; 
1). திருக்காளத்தி, 2) திருச்சிராப்பள்ளி, 3) மாயவரம், 4) திருநல்லூர், 5) திருக்கோணமலை, 6) சிதம்பரம், என்பதன்றும் அதில் திருக்காளத்தி மற்றும் திருச்சி தாயுமானவர் கோவில்  பற்றி முன் பதிவில் கண்டோம். 
இன்று உமையம்மை மயில்வடிவம் கொண்டு வழிப்ட்ட தலம் மாயவரம் என்ற மயிலாடு துறை பற்றி காணலாம்.

3, மயிலாடு துறை ( மாயவரம்)
இறைவர் ; மயூரநாதர், வள்ளலார்
இறைவி ; அபாயம்பிகை , அஞ்சொல்நாயகி
தலத்தின் அருமை பெருமை

சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்

உமையம்மை மயில் வடிவம் கொண்டு வழிப்ட்ட தலமாதலால் இதற்கு மயிலாடுதுறை என்ற பெயர் வந்தது.

இந்திரன் பிரமன், வியாழன் , அகத்தியர்  சப்தமாதர்கள் வழிபட்ட தலம்

காவிரியின் கரையில் காசிவிசுவநாதர் ஆலயம், உத்தரமாயூரம் எனப்படும் வள்ளலார் ஆலயமும் உள்ளன.

தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

இத்தலத்தில் நாதசர்மா, அனவித்யாம்பிகை என்ற சிவ தம்பதியர் இத்தலத்தில் ஐப்பசி புண்ணியதானம் செய்வதற்காக மாதத்தின் கடைசிநாள் வந்தனர், ஆனாமல் அவரகள் கோயிலை அடையும் முன் 30 நாட்கள் ஸ்தான நிகழ்வு முடிந்து வி்ட்டது என்பது கண்டு அதிர்ச்சியுற்று மனம் வருந்தி இரவு முழுவது இறைவரை நினைத்து செய்வதறியாது திகைத்து நின்றனா். அப்போது இறைவர் அவர்களுக்கு காட்சி அளித்து நாளைக்காலையும் ஸ்தானம் பண்ணலாம், என்று அதிகாலையில் ஸ்தானம் முடித்து புண்ணியம் சேர்ப்பீர்களாக என்று அசிரீரி வாக்காக கூறி மறைந்தார். தம்பதிகள் இருவரும் அதிகாலையில் ஐப்பசி ஸ்தானம் முடித்து புண்ணியமும் சித்தியும் பெற்றனர். இவர்களும் இக்ேகாவிலில் முத்தியடைந்ததால் இவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இதன் அடிப்படையில் இன்றும் இத்தலத்தில் கார்த்திகை முதல் நாளும் அதி காலையில் புண்ணிய ஸ்தானம் மேற்கொள்ளப்படும் வழக்கம் உள்ளது. தம்பதியருக்காக ஐப்பசி புண்ணிய ஸ்தானம் சிவன் முடக்கிவைத்தபடியால் இதற்கு "முடவன் முழுக்கு" என்று பெயர் வழங்கப்படுகிறது

     தச்சன் யாகம் செய்யும் போது சிவனாரை மதியாமல் அழைக்காமல் யாகம் செய்ய, அத்தைய யாகத்திற்கு பார்வதி தேவி மட்டும் செல்ல, யாகத்தை அளித்தார் வீரபுத்திரர் , தன் கணவரை மதியாமல் யாகத்திற்கு சென்றதாலும், யாகத்திற்கு வந்திருந்த மயிலுக்கு அடைக்கலம் கொடுத்த தேவியை மயிலாக சென்று தவமிருக்க சாபமிட்டார், அதன்படி தேவியாரும் மயில் வடிவம் கொண்டு இவ்விடத்தில் சிவனை வேண்டி  தவத்தின் மூலம் வழிபாடு செய்து வந்தார், இத்தவத்தின் பால் இறைவர் ஈர்க்கப்பட்டு தனும் மயில் வடிவம் கொண்டு இத்தலத்திற்கு வந்து இறைவியை ஆட்கொண்டார் அதனால் இறைவர் மாயூரிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பங்கேற்கும் பிற கோயில்கள்
அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்
கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்
சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்
துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக