நட்புக்கு இலக்கணம் தந்த கல்யான விகிர்தீஸ்வரர்
ஆலயம் : வெஞ்சமாங்கூடலூர் - கரூர்
" தொழுவார்க்கு எளியாய் துயர்தீர் வெஞ்சமாகக் கூடல் விகிர்தா! " சுந்தரரர்
சிவத்தல யாத்திரை வந்த சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார் அப்போது அவர் வைத்திருந்த பொன்னும் பொருளும் தீர்ந்து விட்டது, எனவே விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக் கேட்டார். சிவன் தன்னிடம் பொன் இல்லை என்றார். உன்னிடம் இல்லாத பொருள் எது? என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரரர். அப்போதும் தன்னிடம்கொடுப்பதற்கு ஒன்றுமில்லை உனக்கு பொன்தர வேண்டுமானால் எந்த பொருளையாவது யாரிடமாவது அடமானம் வைத்துத்தான் தர வேண்டும் என்றார் இறைவர். அதற்கும் சுந்தரரர் விடுவதாக வில்லை எதையாவது யாருக்காவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள் என்றார். சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய இறைவர் பார்வதி தேவியை ஒரு மூதாட்டியாக மாற்றி அங்கு வரச் செய்தார். அவளிடம் தனது மக்கட் செல்வங்களான முருகன், விநாயகர் இருவரையும் மூதாட்டியாகிய தேவியிடம் அடகு வைத்து, அதற்கு ஈடாக பொன் பெற்று அதனை சுந்தரருக்கு ஈந்தார்.
நண்பன் உதவி என்று தன்னிடம்வந்தபோது தன் பிள்ளைகளை கூட அடமானம்வைத்து உதவி செய்தார். நட்பின் வலுவை உலகுக்கு உணர்த்தினார். நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் அருள் செய்து வருகிறார் வெஞ்சமா கூடலூர் விகிர்தீஸ்வரர் ஆகிய இறைவர். இவரிடம் வேண்டிக் கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும். நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக