செவ்வாய், 12 ஜூலை, 2016

கயிலைக்கு சமமான தலங்கள் - சிதம்பரம்

கயிலைக்கு சமமான தலங்கள் - சிதம்பரம் 

கயிலைக்கு சென்று வழிபட இயலாதவர்கட்கு கயிலைக்கு சமமான தலங்கள் நமது அருளாளர்கள் நமக்கு காட்டியுள்ளனர். அத்தலங்களு்க்கு சென்று வழிபட்டு கயிலை நாதரின்அருள் பெறுவோமாக .
கயிலைக்கு சமமான திருத்தலங்களான திருக்காளத்தி,திருச்சி மலைக்கோயில், மாயவரம், திருநல்லூர்  ஆகிய கண்டோம். இனி நடராஜர் நடனம் புரியும் தில்லைவாணர் எழுந்தருளியுள்ள தில்லையம்பலம் பற்றி காண்போம்.

தில்லை சிதம்பரம்
தில்லை எனும் தாவரம் நிறைந்து காணப்பட்டதால் இத்தலம் தில்லை வனம் எனப்படுகிறது. சிதம்பரம் வடமொழி சொல். சிற்றம்பலம் என்பது தமிழ் சொல் ( சித் = ஞானம், அம்பரம்= ஆகாயம், ஞான வெளி ) என்று பொருள்படும்

ஆன்மாக்களின் எல்லா பற்றுக்களையும் போக்கும் இடம் " பெரும்பற்றப் புலியூர்"

புலிக்கால் முனிவர் வழிபட்டதால் புலியுர் என்றானது

இத்தலத்தில் உள்ள நடராசர் சன்னதிக்குப் பின்னால் உள்ள ஆலயம் திருமூலத்தானம் எனப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள மூலவர்
இறைவர் / திருமூலநாதர்
இறைவி / உமையம்மை
கனக சபை / நடராசப் பெருமானார் / சிவகாமியம்மை

தலத்தின் அருமையும் பெருமையும்
1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம்
2.பன்னிரண்டு திமிழ் வேதங்களிலும் போற்றப்பட்டுள்ள அரிய தலம்
3. இங்குள்ள நடராசர் அசைந்தால் தான் உலக உயிர்கள் அசையும். இவர் தமது ஆட்டத்தை நிறுத்தும் போது உலக இயக்கமே நின்றுவிடும் என்பது நம்பிக்கை
4. ஐம்பூதத் தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது , மண், நீர், நெருப்பு, காற்று, ஆகிய நான்கு பூதங்களும் ஆகாயத்திற்குள் அடங்குவது போல் அனைத்துச் சிவாயலயங்களில் உள்ள  சிவகலைகள் யாவும் இரவு வழி பாட்டிற்கு பிறகு தில்லையில் ஒடுங்கும்.
5.இவ்வாலயத்தில் தான் மாணிக்கவாசகர் ஊமைப் பெண்ணை பேச வைத்தார். புத்தர்களை வாதில் வென்றார்
6.சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணம் பாடுவதற்கு " உலகெலாம் " என்ற அடியெடுத்துக் கொடுத்த இடம் தில்லை ஆகும்.
7. 12 வது தமிழ் வேதமாக திகழும் பெரியபுராணம் அரங்கேற்றப்பட்டதும் தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் தான் ஆகும்
8. தில்லை பெருமான் தேர் ஓடாமல் சகதியில்சிக்கிய போது, ேசந்தனார் திருப்பல்லாண்டு பாடத் தேர் தானே ஓடி நிலையில் நின்றது.
9. உபமன்யு முனிவர் சிறு குழந்தையாக இருந்தபோது அழுதார். அக்குழந்தைக்கு தில்லைத் திருமூலநாதப் பெருமானார் பாற்கடலையே வரவழைத்து தந்தார்
10. வியாச முனிவர், சுகமுனிவர், சுதமுனிவர்,சைமினி முனிவர், குருநமச்சிவாயர், முதலாம் வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்
11. பதஞ்சலி முனிவர் வழிபட்டு பேறு பெற்ற தலம்
12, முருகப் பெருமான், திருமூலநாயனார், திருநீலகண்ட நாயனார். திருநாளைப்போவார், இராசராச சோழன், சேந்தனார்,உமாபதி சிவனார், போன்ற கணக்கற்ற அருளாளர்கள் இத்தலத்தை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள்.
13. இத்தலம் உலகத்தின் இருதய தலமாகும்
14. இத்தலத்தில்தான் மூவர் பாடிய தேவாரப்பதியங்கள் கிடைக்கப் பெற்றது.
15. தென்கயிலை எனப்போற்றப்படுகிறது.
16, இக்கோயிலில் தங்கத்தால் வேயப்பட்ட கூரை காணலாம்
  தில்லையின் பெருமை எல்லையில்லாதது. எழுத்தினால் எழுதிவிட முடியாது.


செல்ல நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர்வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன்கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதம்
ஒம் நமசிவாயம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக