வெள்ளி, 8 ஜூலை, 2016

கயிலைக்கு சமமான சிவத்தலங்கள் / திருநல்லூர்

கயிலைக்கு சமமான சிவத்தலங்கள் / திருநல்லூர்


கயிலைக்கு சென்று வழிபட இயலாதவர்கட்கு கயிலைக்கு சமமான தலங்களை நமது அருளாளர்கள் நமக்கு காட்டியுள்ளார்கள். அத்தலங்களுக்கு சென்று வழிபட்டு கயிலை நாதரின் அருள் பெறுவோமாக.
கயிலைக்கு சமமான தலங்கள் ; 
1). திருக்காளத்தி, 2) திருச்சிராப்பள்ளி, 3) மாயவரம், 4) திருநல்லூர், 5) திருக்கோணமலை, 6) சிதம்பரம், என்பதன்றும் அதில் திருக்காளத்தி  திருச்சி தாயுமானவர் கோவில் மற்றும் மாயவரம் , திருநல்லூர் பஞ்சவரணேசுவரர், பற்றி இ்ப் பதிவில் கண்போம்.

திருநல்லூர்

இருப்பிடம் ; பாலைத் துறைக்கு அருகில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நகர பேருந்துகள் செல்கின்றன,
இறைவர் ; பஞ்சவரணேசுவரர் , கல்யாணசுந்தரரேசுவரர்
இறைவி ; கல்யாண சுந்தரி, கிரிசுந்தரி
தலத்தின் அருமையும் பெருமையும்
1, ஞான சம்பந்தர்,அப்பர் பாடல் பெற்றது.
2. கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட கட்டுமலைக் கோவில் அழகிய மாடக்கோயில், ஒரு முறையாவது வழிபட வேண்டிய ஆலயம்
3. "வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும்தம்வாழ்பதியே " என்பது அப்பர் வாக்காகும். தென்கயிலாயம் இத்தலம்.
4. ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறம் மாறிக் காட்சி அளிக்கும் மூலவர்,ஐந்து நிறவண்ணர்.
5. இறைவர் இத்தலத்தில் அப்பர் பெருமானுக்கு திருவடி தலைமீது சூட்டியருளினார்.
6. பிருங்கி முனிவர் வண்டு வடிவில் இறைவரை வழிபட்டதால், மூலவராக விளங்கும் சிவலிங்கத் திருமேனியில் வண்டு துளைத்த துளைகள் உள்ளன.
7. முசுகுந்த சக்கரத்தி, குந்திதேவி, சிங்கம் வழிபட்டது.
8. இத்தலத்திலும் அகத்தியருக்கு இறைவர் திருமணக் கோலம் காட்டியருளினார். இந்த கல்யாண சுந்தரர் உருவம்கதை வடிவில் கருவறையில் உட்புறம், மூலவருக்கு பின்னால் உள்ளது.
9. அமர்நீதி நாயனாருக்கு இறைவர் காட்சி வழங்கி ஆட்கொண்டருளிய அரிய தலம்
10 குந்திதேவி தான் பெற்ற பிள்ளையை (கர்ணனை) பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட பாவம்தொலைய தெளமிய முனிவரின் அறிவுரைப்படி இத் தலத்து இறைவரை வழிபட்டுப் புண்ணியம் பெற்றாள்,
11. மாசிமகத்தில் மகாமக குளத்தில் நீராடிய பெருமை இத்தலத்திலுள்ள குளத்தில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்



திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக