கயிலைக்கு சமமான சிவத்தலங்கள்
கயிலைக்கு சென்று வழிபட இயலாதவர்கட்கு கயிலைக்கு சமமான தலங்களை நமது அருளாளர்கள் நமக்கு காட்டியுள்ளார்கள். அத்தலங்களுக்கு சென்று வழிபட்டு கயிலை நாதரின் அருள் பெறுவோமாக.
கயிலைக்கு சமமான தலங்கள் ;
1). திருக்காளத்தி, 2) திருச்சிராப்பள்ளி, 3) மாயவரம், 4) திருநல்லூர், 5) திருக்கோணமலை, 6) சிதம்பரம், என்பதன்றும் அதில் திருக்காளத்தி பற்றி நேற்றைய பதிவில் கண்டோம்.
இன்று தாயும் ஆனவர் எழுந்தருளியுள்ள திருச்சி மலைக் கோட்டையைப்பற்றி காணலாம்.
இருப்பிடம் தமிழ் நாட்டின் மத்தியில் உள்ள திருச்சி மலைக்கோட்டை கோவில்
இறைவர் ; மாத்ருபூதேசுவரர் / தாயும் ஆனவர்
இறைவி ; மட்டுவார்கழலி
தலத்தின் பெருைம;
1, சம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது.
2. திரிசிரன் எனும் அசுரன் வழிபட்டுப் பேறு பெற்றான், அதனால் அதற்கு (திரு)சிராப்பள்ளி என ஆயிற்று
3. தென்கயிலாயம் எனப்படும் அரிய தலம். மூலவர் இராச கம்பீரமான தோற்றம். மலைமீது கோவில் உள்ளது. இறையருள் பெற்ற மன்னன்தான் கட்டியிருக்க வேண்டும்
4. சிவபக்தியில் மிகுந்த ஒரு பெண்ணினுடைய மகப்பேறு ( பிரசவ காலம்) சமயத்தில் இறைவரே தாயாக வந்து உதவி செய்தார். ஆதலால் தாயுமானவர் ஆனார்.
6. சடாயு, சப்தரிசிகள், சாரமா முனிவர் மெளனகுரு , நாகக்கன்னியர், அனுமன், இந்திரன், இராமன் வழிப்பட்ட தலம்
காவேரியின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் இறைவர் ராட்சச லிங்கமாக ( பெரிய லிங்கமாக) காட்சியருள் செய்கிறார். பஙகுனி மாதம் 3 நாட்கள் மாலையில் இறைவர் மீது சூரிய ஒளி படுவது இங்கு சிறப்பு. இறைவரையே நம்பியிருந்த பெண்ணிற்கு மகப்பேறு காலத்தில் இறைவர் அவளுடைய தாயாக வந்தது தான் இதுவே இறைவருடைய எளிவந்த தன்மை. இவர் கோபக்காரர் இல்ைல. கொடுக்கும் வள்ளல். இறைவரை செவ்வந்தி மலரால் வழிபட்டதால் இவருக்கு செவ்வந்திநாதர் என்ற பெயரும் உண்டு. இவரை சென்று வழி பட்டாலே கயிலை சென்று பிறவிபயன் பெற்ற பலன் பெறலாம். திக்கற்றவர்களுக்கு இறைவர் தாயாக வந்து அருள் செய்வார் என்ற நம்பிக்ைக உண்டு. எனவே கைலாயம் செல்ல இயலாதவர்கள் திருச்சி தாயுமானவரை தரிசித்து கைலை சென்ற பலன் பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
தொகுத்தவர் ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ்வேதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக