ஞாயிறு, 10 ஜூலை, 2016

உண்மையான சொத்து


உண்மையான சொத்து

மனிதன் எந்த ஒரு மூலப் பொருளிலிருந்து வந்தானோ, அந்த பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே பிறவிப் பயன். இந்த உண்மையை புரிந்து கொண்ட ஞானிகள், சித்தர்கள், யோகிகள், எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். நாமோ மனம் போன போக்கெல்லாம் வாழ்ந்து, பாவ புண்ணியங்களைச் செய்தபடி நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பூமியில் பிறவி எடுக்கிறோம். இந்த மனிதப்பிறவியிலிருந்து பிறவி கரையேற வழி தேட வேண்டும். அதற்கு இறைவனே உயர்ந்த உறவு. இறைவனின் திருநாமமே மிகப் பெரிய சொத்து என்று கருத வேண்டும், இந்த நியதிப்படி வாழ்ந்த இருவர் வாழ்விைன் கொண்டு உண்மையான சொத்து என்ன என்று பார்க்கலாம். அப்படி வாழ்ந்த இருவரின் நிலயைில் ஒருத்தர் பணம் சேர்ப்பதே வாழ்க்கையின் நோக்கம் என்றும், இன்னெருவர் பிறவி பயன் அடைய வேண்டும் என்ற நோக்கிலும் வாழ்ந்தார்கள்.
அவர் தெய்வ பக்தி நல்லொழுக்கம் பெற்றவர், அவரின் மனைவி அவருக்கு நேர்மாறான குணம் கொண்டு அதிகமான பணம் சம்பாதிக்கும் படி கணவனை நச்சரித்து தொந்தரவு செய்தாள். கணவன் நமக்கு போதுமான செல்வத்தை இறைவன் தந்திருக்கிறான் இதற்கு மேல் ஆசைப்படாதே என்று நயமாக கூறுவார் ஆனாலும் மனைவி கேட்பதில்லை. ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தும் பல சித்திகள் இருப்பதாக ஊர் பேசியது. நம் ஊருக்கு வந்துள்ள துறவியிடம் பல யோக சக்திகள் இருக்கிறதாம் அவரிடம் நாம் நிறைய பணம் சேர்க்க வழி ஏதாவது செய்யும்படி கேட்டு வர கணவரை நச்சரித்து அனுப்பினாள். வேறு வழியில்லாமல் கணவனும் வேண்டா வெறுப்பாக துறவியிடம் சென்று கேட்டார். அதற்கு துறவியோ, அன்பனே உன்மனதில் குழப்பம் என்ன என்று கேட்டார்? சுவாமி என் மனைவி பணத்தாசை பிடித்தவள் அவள் ஆசை பூர்த்தி செய்ய ஒரு மாயக்கல் இருந்தால் கொடுங்கள் என்றார். அதற்கு துறவி ஒரு மாயக்கல் அதோ அந்த சாக்கடையில் வீசுயுள்ளேன் , நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் என்றார். சாக்கடையில் தேடி எடுத்த மாயக்கல்லுடன் வந்தவர் , சுவாமி அற்புதமான கல்லையே தாங்கள் சாக்கடையில்அற்பமாக வீசுயுள்ளீர்கள், அப்படியானால் தங்களிடம் இதனைக் காட்டிலும் அருஞ்கல் தங்களிடம் இருக்க வேண்டுமே என்று கேட்டார். அதற்கு துறவி ஆமாம் இறைவனுடைய திருநாமம் என்றும் மிக உயர்ந்த ஒரு பொருள் ஒன்று என்னிடம் இருக்கத்தான் செய்கிறது. அதையும்உனக்கு தர தயார் ஆனால் அதை பெறுவதற்கு உரிய பக்குவத்தை உன் மனைவி அடையவில்லை அவரிடம்இந்த மாயக்கல்லை கொடுத்து விட்டு நீ என்னிடம் வரலாம் என்றார். இந்த மாயக்கல்லை விட உயர்ந்தது தான் இறைவனின் திருநாமத்தை உனக்கு மகிழ்ச்சியுடன் தருகிறேன் என்றார் துறவியின் யோசனைப்படி அவர் மாயக்கல்லை மனைவியிடம் கொடுத்து விட்டு திரும்பினார். அவருக்கு உலக இன்பங்களையும், செல்வங்களையும் விட இறைவனின் நாமம் எவ்வளவு மகிமை வாய்ந்தது என்பதை விளக்கினார். அன்றிலிருந்து இறைநாமத்தை எந்நேரமும் ஆர்வத்துடன் செபித்து இறைவனிடம் இரண்டர கலந்து முக்தி பெற்றார். 
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக