ஞாயிறு, 10 ஜூலை, 2016

திரு நாமத்தின் மகிமை


திரு நாமத்தின் மகிமை



இறைவனும் அவருடைய திருநாமமும் வெவ்வேறு அல்ல. திருநாமம் என்பதே இறைவன்தான். இறைவனுடைய திருநாமம் மனதில் நிரம்பிவுடன் உள்ளம், இறைவனின் சந்நதியாகிவிடும். நமது சிந்தனைகள் இறைவன்பால் நிறுத்த, அவருடைய திருநாமத்தை இடையறாமல் நினைவு கூர்ந்து எளிமையான வழி. திருநாமத்தின் மீது உள்ளன்போடு மனம்கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முக்தி நெறிக்கு கூட்டு விப்பது திருநாமம். அது நான்கு தேவங்களின் உண்மை பொருளாக விளங்குபவனாகிய சிவபெருமானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமாகும். 
" காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது நாதன் நாமம் நமச்சிவாயவே " உயிர்களின் துன்பங்களையும், சொன்ன மாத்திரத்தில் நீக்க வல்ல அற்புத மந்திரமாகும் என்கிறார் சம்பந்தர். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செலவர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ் பல்லோரும் ஏத்த பணிந்து என்கிறார் மாணிக்க வாசகர். 
இம் மந்திரத்தை பொருள் உணர்ந்து சொல்லுவோர், சிவனடிக்கீழ் ஆனந்தம் பெறுவது இம்மந்திரத்தின் பொருள். உணர்ந்தோ, உணராமலோ எப்படி சொல்லிடினும் உயர்வு உறுதி என்கிறார்.
திருநாமம் ஒருவனை ஆன்மீக வாழ்வின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்கிறத. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு வெளிச்சமாக இருக்கிறது. திருநாமத்தின் சக்தி வெல்ல முடியாது. வெல்லற்கரியது. மனதில் திருநாமம் நிறையும் போது மனம் பணிவுள்ளதாகவும், மென்மையாகவும் இணக்க முள்ளதாகவும் மாறுகிறது. திருநாம மகிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. திருநாமத்தில் தஞ்சம் அடைந்தவன் பல அதிசங்களை ஆற்ற முடியும். நீங்கள் எந்த இனம், மதம், ஜாதி கொள்கை கொண்டவராயினும் இறைவனின் நாமத்தை சொல்லி சொல்லி திருநாமத்துடன் இனிய உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தன்னை அறியாமலே " நா" நமச்சியவாயம் என கூறவேண்டும். " நற்றவ உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே " என்கிறார் சுந்தரர்.
நாமம் என்னும் நதியில் நாளும் மூழ்கும் உங்கள் ஆன்மா தூய்மை அடைவது மட்டுமல்லமல், யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் அருளாலும் அன்பாலும் ஈர்க்கப்படும் என்பது உறுதி. திருநாமத்தை இடைவிடாமல் ஓதும் பயிற்சினால் ஆபாங்களில் அலை பாயும் மனதை ஒரு நிலையில் வைத்துக் கொண்டு தியானம் செய்யும் போது முகமும், உடலும் ஒரு அசாதராண ஒளியுடன் பிரகாசிக்கும். இமைப்பொழுதும் நீங்காமல் திருநாமத்தை சொல்ல முடியாவிட்டாலும், காலையில் எழும் போதும், இரவு தூங்கப் போகும் போதும், பகலில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நமசிசியவாய என்று சொல்லி வாருங்கள் வாழ்க்கை சுகப்படும். பிறவா நிலை ஏற்படவும் முக்தி அடையும் வழிகிடைக்கும். 
திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக