செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தமிழ் வேதப் பதிக பாராயணப் பயன்கள்


தமிழ் வேதப் பதிக பாராயணப் பயன்கள்


கலிகாலத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிவபெருமானாரால் இம்மண்ணுலகிற்கு அனுப்பட்டவர்தான் திருஞான சம்பந்த சுவாமிகள். இறைவர் திருஞானசம்பந்தருக்கு முன்மொழிந்தார் அவற்றை வழி மொழிந்தவர் சம்பந்தர். எனவே திருஞான சம்பந்த சுவாமிகள் அருளியுள்ள 384 பதிகங்களும் சிவபெருமானாரே அருளியவை என்பதை ஞான சம்பந்த சுவாமிகளே கூறியுள்ளதை சைவப் பெருமக்கள் மனதில் ஆழமாக கொள்ள வேண்டும்.
" பழுதில் இறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே " திருமுறை 3 - பதி, 67, பாடல் 12

முன்பெல்லாம் ஒரு கூட்டம் நடைபெற்றால் அதில் ஒருவர் " திருஐயா அவர்களை தலைமை யேற்று கூட்டத்தை நடத்தித்தரும்படி முன் மொழிகிறேன் " என்று சொல்வார், உடனே மற்றொருவர்எழுந்து " அதனை நான் வழி மொழிகிறேன் " என்பார். இது வழக்கமாக இருந்தது.

இதைப்போல திருஞானசம்பந்த சுவாமிகள் தான் வழி மொழிந்ததாகவும், பழுதில் இறை முன் மொழிந்ததாகவும் ( பழுதில் இறை எழுது மொழி) கூறியுள்ளதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

வான் புகுவர் வானோர் எதிர் கொளவே

" தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதியாது போய் வான்புழுவர் வானோர் எதிர் கொளவே " ----- தமிழ் திருமுறை 3 - பதி - 102 - பாடல் 11

திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய முதல் மூன்று திருமுறைகளையும் பாராயணம் செய்பவர்கட்கு மண்ணுலக வாழ்வில் வெறுப்பு ஏற்படும் எமன் தூதர் நெருங்கவே மாட்டார்கள்

ஊனசம்பந்தத்து உறுபிணி நீங்கும்

" ஞான சம்பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரை செய்து நவில்வார்
ஊனசம்பந்தத்து உறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டு 
வாளிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே " தமிழ் திருமுறை 3 - பதி 118 - பாடல் 11

திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களை பாராயணம் செய்தால்,
1, பிறந்து இறக்கும் நிலை ஒழியும்
2. உள்ளம் ஒருநிலைப்பட்டு அமைதி பெறும்
3. இனி பிறப்பு இல்லையாகும்
4. வானிடை - சிவலோகத்தில் இனிதே வாழலாம்

ஆணையிட்டுக் கூறியுள்ளார் நம்பொருட்டு சம்பந்த சுவாமிகள் பொருட் செலவில்லாத எளிய வழி இதுவாகும். கடவுளைக் கண்டு அம்மயமான நிறைஞானிகளின் மொழிகளே கொள்ளத்தக்கவை, போலி வேடதாரிகளின் சொற்களை நம்பி மோசம் போகத் தேவையில்லை.
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக