வியாழன், 4 ஆகஸ்ட், 2016

பாட்டி வைத்தியம்...

பாட்டி வைத்தியம்....._*


*இருமல் :-*
இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது.
*குமட்டல் :-*
சிறு துண்டு எலுமிச்சை அல்லது இஞ்சியை வாயில் வைத்து சப்பி சாப்பிட்டால் குமட்டல் நின்றுவிடும்.
*தீக்காயங்கள் :-*
ஒருவேளை தீக்காயங்கள் எற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் கற்றாளை இலையின் உள்ளிருக்கும் சாற்றை எடுத்து தடவினால் சீக்கிரம் காயம் குணமடையும்.
*பல் வலி :-*
பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.
பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.
*குடல் பிரச்சனைகள் :-*
டான்டேலியன் (மஞ்சள் மலர் கொண்ட சிறிய செடி வகை), இதை டீயில் கலந்து பருகி வந்தால் குடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றளவிலும் இது நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.
*சிறுநீர் உபாதை :-*
குருதிநெல்லி சிறுநீர் உபாதைகளுக்கு நல்ல தீர்வளிகிறது
*மாதவிடாய் கோளாறுகள் :-*
வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்ல மூன்று வெற்றிலையின் சாரை கலந்து பருக வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பருக வேண்டும். இவாறு செய்து வந்தால் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.
*மாதவிடாய் கால மாற்றம் :-*
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் மாற்றங்கள் ஏற்படும் பிரச்சனை சரியாக வேண்டும் எனில், எலுமிச்சை ஜூஸில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை போடி செய்து கலந்து தினம் தோரும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும்.
*அஜீரண கோளாறு :-*
ஆரஞ்சு ஜூஸில் கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுப் பொடியை கலந்து தினமும் பருகி வந்தால், நாளடைவில் அஜீரண கோளாறு சரியாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக