வியாழன், 12 ஜூன், 2014


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 14 தியான வழி - ஞான வழி தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் "தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே" தூங்கும் போது என்ன நிகழ்கின்றன என்று அறியாது இருப்பது போலத் தியான நிலையில் உலக விடயங்களை உணராது இருத்தலின் , அந்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையை தூங்கும் நிலையாகும், தூங்காமல் தூங்கி சுகம்பெறும் அமைதியான நிலையை தியானம் என்கிறார் திருமூலர், அந்நிலையில் இருப்பவர் இறைவனது இருப்பிடமான சிவலோகத்தையும், சிவனோடு ஒன்றியிருக்கும் யோகநிலையையும் அடைவர், இதனால் அவருக்கு அழியா இன்பத்தையும் பெறுவர் என்கிறார், மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம், மகான்கள் இடைவிடாது ஆற்றொழுக்காய் தியானித்து கொண்டிருக்கிறார்கள், தியானத்தில் கிடைக்கிறது ஆத்ம ஞானம், அதுவே மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாலமாகிறது, அது பொய்யில் இருந்து உண்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், நிம்மதியற்ற நிலையில் இருந்து நிலையான அமைதிக்கும், தீயஒழுக்கத்தில் இருந்து நல்லொழுக்கத்திற்கும் நம்மை நிலைமாற்றம் செய்கிறது, தியானத்தில் ஈடுபடுகிறவர் அமைதியும், ஒருமுகப்படத்திய அறிவும், கவனமும் கொண்டிருக்கவேண்டும், நுட்பமான பிரம்மத்தை நுட்பமனத்துடன் அணுகுங்கள், தியாகத்திற்கேற்ற சாத்வீக சூழ்நிலையை தோற்றுவித்துக் கொள்ளுங்கள், தியானத்ததிற்கு உகந்த நேரம் பிரம்ம முகூர்த்த காலை நேரமே உகந்தது, ஏனெனில் அந்நேரம் உங்கள் மனம் தெளிவாகவும், அமைதியாகவும, இருக்கும், பற்றுகளைப போலவே கவலைகளையும் ஒதுக்கியவர்க்கே தியானம் உண்டாகும், மனதை வழிக்கு கொண்டு வருவதற்கு கடுமையான போராட்டங்கள் வேண்டாம், எண்ணங்களை வலுக்கட்டாயமாக விரட்டியடிக்க முடியாது, எண்ணஙகள் தானாக வந்து, தானாகவே போய்விடும், என்று இயல்பாக இருந்து விடுங்கள், தியானப் பயிற்சி பழக்கத்தில் சரியாக அமையும். தியானத்தில் பொறுமை அவசியம், அதன் பலனை உடனே எதிர் பார்க்க முடியாது, சிலருக்கு பல ஆண்டுகள் வரைகூட ஆகலாம், பொறுமையுடன் பயிற்சி அவசியம், தியானப்பாதையில் தடைகள் நீங்கும், ஐயங்கள் தீர்வதும் படிப்படியாகவே நிகழும், தியானம் ஒரு யோகம், மோட்ச சாதனம், எண்ணங்களின் ஆற்றல் பெருகவும், நோக்கம் நிறைவேறவும் தியானம் உதவும், தியானம் என்கிற பெருநெருப்பில் தீய சக்திகள் அழிந்துவிடும், கீதையில் " தியான யோகத்தில் முன்னேற விரும்புகிறவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்று இருப்பது உபாயமாகிறது,"என்கிறது, மனம், புலன்கள் இவற்றை அடக்கி எதிலும் ஆசையில்லாமல் தனியொருவனாய் தன்னிடத்தில் இருந்து இடைவிடாது மனதை ஒடுக்க வேண்டும்,உள்ளதை உள்ளபடி அறிய ஏகாந்தம் அவசியம், தியானிப்பவர் நாசி முனையில் பார்வையை ஒருமுனைப்படுத்தினால் தடுமாற்றம் தூக்கம் ஏற்படாது, தியானத்தின் போது விருப்பு வெறுப்பு மகிழ்ச்சி துயரம், தீய நினைவுகள் இருக்கக் கூடாது, மனதில் வைராக்கியம் இருக்க வேண்டும், தியானத்தின் மூலம் யோகி தன்னுடைய ஆத்மாவை இறைவனுடன் இணைத்துக் கொண்டு அமைதி அடைகிறான், மிதமாய் உண்டு, மிதமாய உறங்கி, அளவோடு கர்மங்கள் செய்து, விழிப்போடு இருப்பவனுக்கு தியான யோகம் துக்க்ததைப் போக்கும், மனதை வசப்படுத்துவது கடினந்தான் ஆனாலல் பயிற்சினாலும், வைராக்கியத்தினாலும், அதை வசப்படுத்த முடியும், என்றார் பரமாத்மா, தியானம் பற்றி திருமந்திரம் இறைவனை இடைவிடாது சிந்தித்திருப்பது தியானம், சரீரத்தில் அக்கறை காட்டுகிறவர்கள் தங்கள் ஆன்மா குறித்து அக்கறை கொள்வதில்லை, அவர்கள் இறைவனை நினைப்பதில்லை, இறைவன் விளக்கமுறும் சிந்தையிலும், கவனம் வைப்பதில்லை, தியானம் என்பது இறைவனை சிநதித்தருப்பதன்றி வேறேயென்ன என்று கேட்கிறது திருமந்திரம், இதன் பாடல்: ஒரு பொழுதுன்னார் உடலோடுயிரை............ சுழிமுனை தியானம் குறித்து கீழ்கண்ட பாடல் மனத்து விளக்கினை மான்பட ஏற்றி சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்கும் திரயொக்கத்தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே, மனத்தில் விளஙகும் ஒளியை மேலே செலுத்தி சினத்து நெருப்பை நீக்குதல் வேண்டும், கருவி கரணங்களை வழிப்படுத்தி தூண்டவும் மனத்துள் விளங்கும் சிவம் மங்காத விளக்காகும், ஆயிரமான்ணட யோகத்திருந்தும் காணமுடியாத இறைவன் கண்ணிலும், இதயத்திலும், நிறைந்திருக்கிறான், கண்ணாடியில் உருவத்தை காண்பது போல் உங்கள் தியானத்தில் அவனை எளிதாய் நீங்கள் காணமுடியும் என்கிறார் ததிருமூலர், பாடல்: எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்............ இறைவன் ஒளிவடித்ததிலும், ஒலிவடிவிலும் தன்னை வெளிப்படுத்துவதை தியானிப்பவர் அறியமுடியும், தியானத்தை மேற்கொண்டவர் பத்துவித ஒலிகளை கேட்கிறார் , மணி கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு தும்பி, சங்கு, பேரிகை, யாழ் இவற்றின் ஒலிகள், நுட்ப ஒலிகளை அறியும், திறன் தியானத்தில உண்டாகிறது. பாடல் ; மணிகடல் யானை வார்குழல் மேகம்................. தியானம் செய்யும சாதகர் தனது கண் பார்வையை புருவ மத்தியில் செலுத்திருக்க வேண்டும் என்கிறார் திருமூலர், பள்ளி அறையிற் பகலே இருளில்லை கொள்ளி அறையில் கொளுந்தாமற் காக்கலாம் ஒள்ளிது அறியில் ஓர்ஓசனை நீளிது வெள்ளி அறையில் விடிவில்லை தானே. சகஸ்கரதளத்தில் விளங்குகறாள் அன்னை, அங்கே பேரோளி தீபம் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது, ஞானியரும், யோகியரும் அவ்வொளியை காண்பர் பேரின்பத்தை வழங்கும் பேரோளி அனுபவம் தியானத்தில் கிடைக்கும், ஆணவ இருட்டு அதிகரிப்பில் நெஞ்சம் இளைப்புறும், தியானத்தில் ஒளி மண்டலம் மூன்றிலும் பொருந்தி மேற்ெச்ல்ல அந்த இளைப்பு நீங்கும், தாமதம், இராசதம், சாத்துவிகம், என்கிற முக்குண தோசத்தில் உண்டாகும் இருள் தியானத்தில் நீங்கும், உச்சியில் ஒளி காணும், திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாய ஓம் மேலும் பலகாண: http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக