திங்கள், 23 ஜூன், 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 17 தவத்தின் பயன்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 17 தவத்தின் பயன் தவம் என்றால் விரதம், மனதின் நற்குணம் மூன்றில் இராசத குணத்தில் ஒன்றாகவும், சாத்துவிக் குணத்து ஒன்றாகவும் இது இடம் பெற்றது இராசதத்தில் கூறப்படும் ஞானத்தையும் ஊக்கத்தையும் உள்ளடக்கியது, சாத்துவிகத்தில் பொறுமையையும் மோனத்தையும் தன்னில் கொண்டது தவம், சாத்திரங்கள் தவத்தை புண்ணியத் தோற்றம் நான்கில் ஒன்றாகவும், குறிப்பிடுகின்றன, தவம், ஒழுக்கம் கொடை, கல்வி இவை புண்ணியத் தோற்றங்கள். தவத்தின் மிக்கார் இயல்பு இவையென திருமந்திரம் கூறும், "ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவது இல்லை நமனும் அங்குஇல்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும் பயன் இல்லை பற்றுவிட்டோர்க்கே " சிவத்திடம் மனதை வைத்த உத்தமர்கள் உலகத் துன்பங்களை கண்டு அஞ்சுவதில்லை, அவர்களுக்கு எமபயம் கிடையாது, அவர்கள் வாழ்வது சிவவாழ்க்கை, அதனால் எவ்விதத் துன்பங்களும் அவர்களை அணுகுவதில்லை, சிவனின் நினைப்பால் அவர்கள் இரவென்றும், பகலென்றும் வேறுபடுத்தி அறிகின்ற நிலையில்லை, பொருளின் மீது ப்ற்றில்லை, என்பதால் அவர்களுக்கு விளைவு பற்றியும் கவலை கிடையாது, தங்கள் பிறப்பின் நோக்கத்தை அறிவதோடு பிறப்பை நீக்கும் வழியையும் வியக்கத்தக்கது, எந்த வொன்றிலும் கவனத்தை சிதறவிடாமல் ஏகாந்தத்தில் இருந்து தங்கள் மனதை அவர்கள் இறைவன்பால் வைத்திருப்பர், இந்திராதி தேவர்களே நேரில் வந்தாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள், தவத்தின் தன்மையை அறியவும், தவத்தால் மேன்மை அடையவும் சிவத்தின் அருளை பெற்றிருக்க வேண்டும், தவசீலர்கள் தங்கள் மன உறுதியால் இயைவனை காண்கின்றார்கள், இவர்கள் தவத்தை வாழ்க்கையாய் கொண்டவர்கள், இல்லற ஞானிகள் வாழ்க்கையை தவமாய் கொள்வார்கள், திருமூலர் கூறுகிறார் " நீங்கள் சாத்திரங்கள் கற்பதன் மூலம் பெருமையடையப் பார்க்காதீர்கள், ஒரு கணமேனும் புறத்தே திரிந்தலையும் உங்கள் மனத்தை தடுத்து அகத்தே நோககுங்கள், அகமுகப் பார்வை இறைவனின் அருளோடு உங்களை பொருந்தியிருக்க செய்யும் " என்கிறார், தவம் என்பது ஞானத்தை அடைவதற்கு முயற்சி சமாதி நிலையடையும் தவமெல்லாம் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லை, மனதை புலன் வழி போகாது தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையவர் தனியொரு இடத்தில் இருந்து தவம் செய்யத் தேவையில்லை, பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி இருப்பதே தவம், மனமாகிய உறையில் இருந்து மதியாகிய வாளையுருவி சினம் போன்ற மாயா சக்திகளை வென்று, சிவத்திடம் வேறுபாடின்றி பொருத்த வேண்டும், பொறிகள் ஐந்தினையும் உலக விசயங்களில் போகவிடாது தடுத்து தவத்தினால் சிவஒளி காணவேண்டும், அதுவே சுயஒளியாகும், பாடல் : மனத்திடை நின்ற மதிவான் உருவி............ சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஒதி சிமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை, சிவனை எண்ணி சிமாதலே தவத்தின் பயன், பாடல் : சிததம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்............. எப்போதுமே உயர்ந்ததையும் சிறந்ததையும் உலக பிரதியெடுத்துவிடும்,அசல் எது? போலி எது? என்று உஙகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும் ஆன்மீகத்திலும் போலிகள் உண்டு, போலி ஆசாமிகள் போடுவது சிவவேடமும் அல்ல, தவமும் அல்ல, அவ வேடம், அவம் இழிவானது பயனற்றது, எப்போதும் நிலைத்திருப்பது உண்மை, இடம் தெரியாமல் ஒடி ஒளிவது பொய், அசலுக்குள்ள பொலிவு போலிக்கில்லை, சிறதளவும் ஞானம் இல்லாமல் தவவேடம் பூண்டு தகாத செயல்களைச் செய்பவர்கள் நாட்டில் உண்டு, தங்கள் செயலால் நாளை தலைகுனிவு ஏற்படுமே என்று அவரக்ளமனக்குனிவு கொள்வதில்லை, ஆன்மீக சமுதாயந்தான்அவர்களுக்காக வெட்கி தலைகுனியும, சொர்க்கத்தைப் பற்றி பேசும் போலி ஆசாமிகள் போய் சேருகிற இடம் நரகம்தான் இருக்கும், அற்ப சுகங்களுக்காக ஆைச்ப்பட்டு போடுகிற வேடம் புண்ணியமாகாது, உண்மையான ஞானம் உள்ளவரே தவத்தின் பயனை அடைவர், உண்மையான ஞான வேடம் புனைவதில்லை, போலிகள் தவத்திற்குரிய குண்டலம், உருத்திராட்சம், பாதக்குகறடு, யோகதண்டம் சடை, திருநீறு, அவற்றின் தன்மையை அறிந்திருக்கமாட்டார்கள்,போலிகள் தங்கள் நிலையை நிறுவிக் கொள்ள வாதிடுவார்கள், அசலானவர்கள் எதையும் மூடிமறைக்கின்ற நிரூபிக்கின்ற அவசியம் கிடையாது அவர்கள் எப்போதும் மவுனமாகவே இருப்பார்கள், இதனை திருமூலர் " யோகிக்கும், ஞானிக்கும் திருநீறு உத்திராட்சம் சடாமுடி, ஐந்தெழுத்து என்கிற நான்கு புறச்சாதங்கள் தேவையில்லை என்கிறார் பாடல் சிஞானிக்கு சிவயோகிகட்கும் அவமான சாதனமாகாது.............. உண்மை ஞானி நடமாடும்கோயில் தன்பார்வையினாலோ, பரிசத்தாலோ அடுத்தவர்க்கு ஆன்ம பக்குவத்தை அவனால் வழங்க முடியும் - தீட்சத் வழங்க முடியும் ஆணவத்தை விட வேண்டும் ஆணவத்தால் ஏற்படும்மயக்கத்தை விட்டோழிக்க வேண்டும், செயலற்றிருக்க வேண்டும், மவுனத்தின் சிறப்பை உணர்ந்திருக்க வேண்டும்,அப்போதே நீங்கள்தேடுகிற சிவமாம் இன்பபொருளை அடைய முடியும், என்கிறார் திருமூலர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக