திருஐந்தெழுத்தின் ஆற்றல்
அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்லவாறு சிவாயநம வென்று
நல்லம் மேவிய நாதன் அடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே .. நாவுக்கரசர்
ஐம்பூதங்களினால் துன்பங்கள் ஏற்பட்டாலும், "சிவாயநம " என்று நல்லம் மேவிய சிவபெருமானாருடைய திருவடிகளை வணங்கினால் நம்மைத் தாக்க வரும் தீவினைகள் ஒழியும்,
நாம் செய்த தீவினைகளினால் நமக்கு துன்பங்கள் பல வகைகளில் வருகின்றன, இது தான் உண்மை, நோயினால் துன்பங்கள் வரலாம், ஐம்பூதங்களினால் ( நீர், நெருப்பு, காற்று, மண், ஆகாயம் ) இடி,மின்னல், பெருமழை பெருவெள்ளம், பெருங்காற்று தீப்பற்றுதல் பூமி அதிர்ச்சி இப்படி பலப்பல இன்னல்கள் நேரிடலாம்.
இவ்வகையான துன்பங்கள் வராமலிருக்க வேண்டுமானால் சிவாயநம என்று உச்சரித்தால் போதும் என்பது கடவுள்நிலை அறிந்து அம்மயமான திருநாவுக்கரசர் அனுபவ வாக்கு ஆகும்,
போலிச்சாமியார்களை நாடவேண்டாம், வெற்றுச் சடங்குகளில் பொருள் விரயம் செய்ய வேண்டாம் காலையில் 108 முறையும் நண்பகல் 108 முறையும் மாலையில் 108 முறையும் உறங்கப் போகும் முன் 108 முறையும் சொல்லி வருவதே நலம் பயக்கும், பேரிடி இடிக்கும் பொழுது சிவாயநம சிவாயநம என்று சொல்லவேண்டும், இடி நிச்சயம் சொல்பவர் மீது விழாது, சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை.
திருசிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் /
தகவல் ; தமிழ் வேதம்
மேலும் பல காண;
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக