திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 10
குரு நிந்தனை கூடாது
குரு என்பவர் மனித உருவில் தோன்றம் கடவுள். சாதகனின் பக்தியை ஊக்குவி்த்து அவனது ஆன்ம முன்னேற்றத்திற்காகவே குருவின் வடிவெடுக்கிறார் கடவுள். அவருடைய கருணை அத்தகையது.
குரு இணைப்புப் பாலம் சிவனுக்கும் சீவனுக்கும் தெய்வீக ஐஸ்வர்யங்களைப் பெற்றவர் அவர். அவரை ஆனந்த ஊற்று ஞானக்கடல் எனலாம். குருவைக கடவுள் நிலையில் வைத்து வணங்கவேண்டும். அறியாமை இருள் நீக்கி, அறிவொளியை வழங்கும் பெருமை உடையவராயிற்றே! அவருடைய வாக்கை கடவுள் வாக்காய் மதிக்க வேண்டும்.
நம்குறைகளை அகற்றி நம்மை முழுமைப்படுத்தும் குருவை வெறும் மனிதராய் பார்க்கக் கூடாது. மனிதனுக்கு உபதேசிக்க மனித உருவில் கடவுளே வந்திருப்பதாய் கொள்ள வேண்டும்.
குரு உடன் வருவதில்லை, இதோ உன் பாதை என்று காட்டுவிப்பார், போகிற பாதையை செப்பனிட்டு வைப்பார். நம்மை தவறான வழியில் செல்லாதபடிக்கு அவர் பாதுகாப்பார்.
குருவின் ஆசி சீடனை மகிழ்விக்கும். சீடன் அவருக்கு விசுவாசமாயிருந்து அவர் சொன்னபடி நடந்து அவரை மகிழ்விக்க வேண்டும். குருைவ விமர்சிக்கும் தகுதி சீடனுக்கு கிடையாது. குருவிடம் உள்ள தெய்வீகத் தன்மையில் மட்டுமே அவன் அக்கரை காட்ட வேண்டும். தன்னுடைய அறிவை அளவு கோலாய் கொண்டு சீடன் தனது குருவை அளவிட முடியாது. அவன் தெய்வீக பாவணையுடன் அவருக்கு சேவை செய்ய வேண்டும். பணிவும் விருப்பமும் காட்டி தர்க்கமோ கர்வமோ முணுமுணுப்போ இல்லாமல் குரு சேவை செய்ய வேண்டும்.
குரு பல வழியிலும் சீடர்களை சோதிப்பார்,அவரை தவறாக புரிந்து கொண்டு அவர் மீது நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.
குருவில்லா வித்தை பாழ் என்பார்கள் சுயமாக கற்பது இயலாத காரியம். அது ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைப்பதற்கு ெபாருந்தும் இப்படி போக வேண்டும் என்று வழிகாட்டுகிறவர் குரு.
மாதா, பிதா இருவரும் குருவிடம் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை படைக்கிறார்கள். குருவால் உயர்வடையும் காரணத்தால் மாணவனுக்கு குருவும் தெய்வத்துக்கு சமமான குருவிடம் பணிவுகாட்டி நடக்க வேண்டும். தன் குருைவ விமர்சிக்கிற தகுதி சீடனுக்கு இல்லை. அவரை எந்தவொரு காரணத்திற்காகவும் பழிக்கிற பாவத்தை அவன் செய்யக் கூடாது.
கீழ்மக்கள் மகாஞானியான குருவையும் மதிப்பதில்லை, யார் மரியாதையுடன் நடந்து கற்றுக் கொள்கிறாரோ அவரே அறிவுத் தெளிவு பெறுகிறார் என்கிறது மந்திரம்
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை யுளைவன சொல்லுவர்
கற்றிருந்தார் வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார் பெறும்பேறே,
ஞான் பெற்ற குருவை உற்றிருந்தாரை உளைவன சொல்லுவர் என்பதன் பொருள் தம்முடன் இருப்பவரை வருந்தும்படி கூறுதல் என்பதாகும்.
குருவை பழிப்பவன் நாயாய் பிறப்பான் , ஒரிடத்தில் நிலைகொள்ளாது நாய் போல திரிந்தலைவான் பின்பு நெடுங்காலத்துக்கு பின் பழுவாய் கிடப்பான் என்கிறார் திருமூலர். பாடல்; ஓரெழுத்து ஒரு பொருள் உணரக்கூறிய........)
குரு நிந்தை ெசய்பவரின் பொருளும் உயிரும் விரைந்து கெடும், ( இங்கே குரு என்றது இல்லற ஞானிகளையும் தத்துவ ஞானிகளையும் குறிக்கும்)
நல்ல ெநறியை புகட்டிய குருவின் முன்பாக பொய் கூறினால் முந்தைய தவமும் கெட்டு, குருவிடம் பெற்ற ஞானோபதேசமும் தங்காது போகும். ஆன்ம வளர்ச்சி குன்றுவதோடு வறுமையும் உண்டாகும். பாடல்; சன்மார்க்க சந்நிதி பொய்வரின்...........)
குருவிடம மந்திரம் பெற்று ஜபிக்க வேண்டும். சுயமாக இலட்சம் உரு செய்தாலும் பலனில்லை. தனக்குத்தானே வியந்து கொள்கிறவர் மந்திரக் காட்டில் மயங்கி நிற்க வேண்டியதுதான்.
சிந்தையை இறைவன்பால் செலுத்தாமல் புறச் செயல்கள் (கிரியை) மூலம் செய்கிற வழிபாடு எப்படி சிறக்காதோ அப்படித்தான் குருவில்லாமல் ஆன்ம வளர்ச்சி பெற முற்படுவதும், அது கையில் சிக்கிய மாணிக்கத்தை விட்டு காலில் இடறிய வெறுங்கல்லை சுமப்பது போலவாகும். பாலும் தயிரும் நெய்யும் தன்னிடமிருந்து பிடியளவு விட்டு உண்பவனின் நிலையது என்கிறது திருமந்திரம் பாடல்; கைபட்ட மாமணிதானிைட கைவிட்டு...........
திருசிற்றம்பலம் . ஓம் நமசிவாய ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக