வியாழன், 26 ஜூன், 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 19 தகுதி நிர்ணயம்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 19 தகுதி நிர்ணயம் தான் பக்குவப்பட்டுவிட்டதாய் நம்புகிறான் சீடன் " உனக்கு இன்னும் பக்கவம் வரவில்லை" என்கிறார் குரு. பக்குவம் என்பது தகுதியாதல் - ஏற்றநிலை அடைதல், தகுதியற்றவன் அபக்குவன். சமையலில் பக்குவம் போல ஆன்மீகத்திலும் அது உண்டு, பக்குவமில்லாத சமையல் உணவுக்கு ஏற்றதல்ல என்பது போல தகுதியற்றவர் ஆன்மீக நிலையை அடையமுடியாது, குருடன் ஒருவன் இன்னொரு குருடனைக் துணையாய் கொண்டால் நிலை தடுமாற குழியில் விழவேண்டும் அவன் பார்வையுள்ள ஒருவனின் பின்னே நடப்பதுதான் பாதுகாப்பு, பக்குவமில்லாத சீடன் அறிவாளி வழங்கும் உண்மையான குருவை தேடிப்போவதில்லை, அறியாமை நிரம்பிய பொய்யரையே குருவாய் கொள்வான் என்கிறது திருமந்திரம். பக்குமற்ற சீடனும் பக்குவமில்லாத குருவும் சேர்ந்தால் பாழான இருளில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான், மனம் துடைத்துவிட்ட கண்ணாடியாய் இருக்க வேண்டும், தூசி படிந்த கண்ணாடியில் எதையும் காணமுடியாது. எண்ண மற்றருங்கள், எண்ணங்களைப் பெருக்கி தூசிபடிந்த கண்ணாடி ஆகிவிடாதீர்கள் என்கிறது திருமந்திரம், எண்ணங்களை பெருக்கி கொண்டு போனால் தீமைகள் பெருகும், காமத்தை விரும்புகிறவன் கண்டபடி எண்ணமிடுவான். பாடல் : மனதில் எழுந்தது ஓர் மாயக்கண்ணாடி.................. பக்குவமற்றவன் யார்? எண்ணுவது ஒன்றாய் சொல்வது பிறிதொன்றாய் , செய்வது வேறொன்றாய் இருப்பவன் அவனிடம் முக்கரணத் தூய்மை இருக்காது, (மனம், வாக்கு, காயம் இவை முக்கரணம் ) பக்குவன் யார்? சினமயற்று எண்ணமற்று, செயலற்றிருப்பவன், அவன் உண்பதிலும், சுவையறிவதிலும், நாட்டமற்றவன், அவன் தீமை செய்வதில்லை, திருப்தியோ அதிருப்தியோ, அவனுக்கில்லை, அவனிடம் தற்பெருமை கிடையாது, பக்குவமில்லாதவன் தான் எடுத்தற்கெல்லாம் கோபப்படுவான் எண்ணங்களை பெருக்குவான் செயலில் கருத்தூன்றிருப்பான், பெருந்தீனிப் பிரியன் அவன், நல்லது கெட்டது பாகுபடுத்தி பார்க்கமாட்டான், எதிலும் அதிருப்திக்கு முக்கியத்துவம்அளிப்பான், அவன் சுயதம்பட்ட பேர்வழியாகவும் இருப்பான், புறநோக்குடையவர்களே உங்கள் பார்வையை உள்நோக்கி திருப்புங்கள் என்பார் திருமூலர், அவர்கள் உலகியலில் இருந்து விடுபட்டு, உண்மையான பொருளை நாடவேண்டும் என்கிறார், அபக்குவனுக்கு அது சாத்தியமா? முத்தியில் விருப்பம் கொண்டு மும்மலக் குற்றம் ( ஆணவம், கன்மம், மாயை) நீக்கினால் அது சாத்தியமே, ஞானம் பெறுவதில் மன அறுதியே முதன்மையாய் வேண்டப்படுகிறது, பக்குவம் உள்ளவன் தகுதி உடையவன் , அவன் வேதாகம முறை உணர்ந்து குற்றங்கள் ஏதும் இல்லாத குருவைத் தேடியடைவர், அவர் மூலம் வீடு பேறு பெற தகுதியை அவன் பெறுகிறான். அவன் பிறவித் துன்பம் கண்டு அஞ்சுகிறான், அவன் இறைவனின் திருவடியை இடைவிடாது தேடியலையகிறான், உலக வாழ்க்கை அவனுக்கு சலித்து விடுகிறது. இறைவா என் வினைகள் நீக்கி, கவலை போக்கி என்னை உவந்தேற்றி கொள் " என்பதே அவனுடைய வேண்டுதலாக இருக்கும், நல்ல குருவிற்கு உன்னுடைய பொருளையும் உடலையும் ஏன் உயிரையும் கூட காணிக்கையாய் தரலாம் என்கிறார் திருமூலர். பாடல்: கொள்ளினு நல்ல குருவினை கொள்க................... குரு தன்னுடைய உபதேசத்ததின் மூலம் உங்கள்சிந்தையை தூயதாக்கிறார், ஒளிமயமான இறைவன் அங்கே எழுந்தருள்கிறான், அப்போதே சாதகனின் வினைகள் நீங்கி, இறைவனின் திருவடியில் அவனது சிந்தை தங்குகிறது. அவருடைய அருளுக்கு அவன் பாத்திரமாகி விடுகிறான், எது அழியும் பொருள் எது அழியாதிருப்பது என்பதை அறிந்து, சிவசக்தி உவந்தேற்கும்படியாய் தன்னை தயார்படுத்திக் கொள்பவேன நல்ல சீடன், அவனே ஞானமுடையவன், அவன் குருவை வழிபடுவதன் மூலம் இறைவனோடு இணைந்து கொள்கிறான்,, நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை குருவினடி, நீக்காமை, மெய்யறிவால் இன்பம் பெறும் உணர்வு சிந்தித்து தெளிதல் , அற்புதம் என்பன பக்குவம் உடையானின் தகுதிகள் ஆகும், திருச்சிற்றம்பலம் - ஓம்நமசிவாயம் மேலும் பல தகவல்கள் காண http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக