ஞாயிறு, 22 ஜூன், 2014


பன்னிருதமிழ் திருமுறைகளில் இறைவழிபாடு ஒரு ஆன்மா தன்னைத்தான் கடைத்தேற்றிக் கொள்வதற்கு தானே எடுக்கும் முயற்சிதான் இறைவழிபாடு என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும், கடவுளிடம் வியாபாரம் செய்வது இறைவழிபாடு ஆகாது. பொருள் வேண்டியும், இம்ைமப் போகங்கள் வேண்டியும் இறைவழிபாடு செய்வதை தமிழ் வேதங்களில் காணவே முடியாது. "தனத்தினைத் தவிர்த்து நின்று தம்அடி பரவு வார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே" ......... நாவுக்கரசர் இறைவழிபாடு என்பது இறைவழிபாட்டிற்கே என்பதுதான் தமிழ்வேதங்கள் கூறும் உண்மை, வேண்டத்தக்கதை இைறவர் அறிவார், காலமும் நேரமும் வரும் போது நம் தகுதிக்கு ஏற்ப வழங்குவார், என்னும் எண்ணத்துடன் இறைவழிபாடு அமைய வேண்டும். இதன் பொருட்டு மாணிக்கவாசகர் தம் பாடலில் " வேண்டத்தக்கது அறிவாய் நீ வேண்ட முழுவதுந் தருவோய் நீ ........................................... வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொனறுண்டெனில் அதுவும் உன்றன் விருப்பன்றே." என்கிறார் எனக்கு எதுவேண்டும் என்பதை நீ அறிவாய் , என்பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை அதனையே நானும் விரும்புகின்ற பொருள் ஒன்று உண்டென்றால் அது நான் உன்மேல் வைக்கும் அன்புதானே என்று இறைவன் விருப்பமே நம் விருப்பமன்றல்லோ என்று நாம் விரும்புவதையே இறைவனும் நமக்கு அருள்புரிவார் என்பதை காட்டுகிறார், எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்யும் பொழுது நம்முைடய மனத்தில் உள்ள மாசுகளை இறையருள் போக்கிவிடும் என்கிறார் நாவுக்கரசர் கூவாமிகள் மனத்திற்கு மாசு / குற்றங்களாவன பொய், வஞ்சனை விரோதம், குரோதம், புறங்கூறல், கோபம், லோபம், (கஞ்சத்தனம்) ஆணவம், நான் எனது என்பனவாகும், " மாசற்ற மனமே ஈசன் கோயிலாகும் என்பதை மனத்தில் இறத்த வேண்டும், இைவ இறையருளையும் மனத்தினுள் புகவிடாமல் தடுத்து விடும், இறையருைள பெறுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பக்தி செய்ய வேண்டும், என்பது தான் திருநாவுக்கரசரின் திருவுள்ளமாகும், புதிய மலர்கள் தூவி அருந்தமிழ் பாடலைப்பாடி துதிக்க வேண்டும் அன்று மலர்ந்த வாசனையுள்ள நல்ல மலர்களைத் தூவி பண்ணமைந்த பாடல்களால் இறைவனை பாடித்துதித்திடல் வேண்டும், பேசும் திறம் பெற்ற நாம் வாயாறப் பாடி வணங்க வேண்டும் நமக்கு பசி வந்தால் நாம்தான் உணவு உண்ண வேண்டும், நமக்காக பிறர் உணவருந்த முடியாது, இது போல நம் வினைகள் நீங்கி நலம் பெறுவதற்கு நம் வாயினால் நாமே பாடி வணங்க வேண்டும்,நம் கைகளால் மலர்களை தூவ வேண்டும் என்கிறார், மேலும் " சாலம்பூவோடு தூபமறந்தறியேன் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் என்று அவரின் ஐந்தெழுத்து நாமத்தை கூறி பூசை ெசய்ய வேண்டும் என்கிறார், ஆலங்கட்கு கொண்டு செல்லும் மலர்கள் வாசனையுைடயவனவாகவும், புதியவனவாகவும், இருத்தல் வேண்டும், என்பதை சைவப் பெருமக்கள் அனைவரும் உணர்தல் வேண்டும் நாம் இறைவருைடய உடைமைப் பொருள், நம்மை காப்பது அவருடைய கடமையாகும், நம்முடைய உடைமைப் பொருளை நாம் எவ்வாறு பாதுகாக்கின்றோம் என்பதை மனதில் கொண்டால் இது புரியும், இறைவன் என்கின்ற பேரின்ப வெள்ளத்திலிருந்து வந்த சிறுதுளிதான் உயிர்களாகிய நாம், நமக்கு நன்மைகளையே செய்வார், ஒரு காலும் தீமையை அளிக்க மாட்டார், நாம் தீமை என்று நினைப்பதிலும், ஒரு நன்மை இருக்கும், நம்முடைய நன்மையின் பொருட்டே இறைவர் அதையும் அளித்துள்ளார், அதில் உள்ள நன்மை பின்னால் விளங்கும், கசக்கும் வேப்பிலை சாற்றை கொடுத்து தாயானவர் குழந்தையின் உடல் நலத்தைக் காப்பது போல எண்றுணர்தல் வேணடும், தேவை பொறமைதான், பொறமையுடையவர் பெருமையடைவார், யாது வரினும் இறைவருடைய திருவடியை மறவாமல் பொறுமையுடன் வழிபாடு செய்துவந்தால் அளவற்ற நலன்களை இறைவர் அளிப்பார் என்பது உறுதி. ஓம் நமசிவாயம் ஓம் திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக