திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 12
கொடுக்கின்ற மனம் வேண்டும் ( ஈதல்)
ஈதல் இசைபடி வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிருக்கு ............ வள்ளுவர்
ஏழைகளுக்கு வேண்டியதை தருக, அதனால் புகழ் பெருக வாழ்க, அப்புகழை தவிர மக்கள் உயிருக்கு நன்மை தருவது வேறு இல்லை, என்று ஈதல் என்ற மற்றொருவருக்கும் கொடுக்கும் உணர்வே உயர்வு என்கிறார், வள்ளுவர்,
தங்கள் தேவைக்கு உதவுகிறவர்களை மக்கள் வள்ளல் என்று புகழ்கிறார்கள், அந்த வள்ளலுக்குப் பொருளையும் கொடுப்பதற்கான அறச்சிந்தையையும் அமைத்தவன் கடவுளல்லவா! கடவுளை விடவும் கொடுக்கக் கூடியவர் யார்? ஈகை மனப்பான்மைக்கு இறைவனை விடவும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?
புறநானூற்று பாடலில் ஒருபாடல் பாரியும் மாரியும் ஒப்பிட்டு பாடும் கபிலர் என்ற புலவர் " பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவர் புகழ்வர், செந்நாப்புலவர் பாரி ஒருவனும் அல்லன், மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே" கொடுப்பதில் உலகம் சிறக்க பாரிமட்டும் இல்லை மாரியும் உண்டு என்பதை நினைவுறும் கபிலர் ஈகை மனம் மாரி போல பாரிக்கும் உண்டு என்று உவமைப்படுத்துகிறார்,
அன்பும் அறவுணர்வும் நல்லெண்ணமும் உள்ளவரால்தான் அடுத்தவருக்கு ஈயமுடியும் உண்மையில்ஈகை என்பது பிரதிபலலை எதிர்பாராது மற்றவருக்கு பயன்படுகிற விதமாய் நடந்து கொள்வது, தாகத்தில் இருப்பவருக்கு தண்ணீர் அளிப்பதும், துயரத்ததில் இருப்பவருக்கு ஆறுதல் தருவதும் பாதையில் கிடக்கும முள்ளையும கல்லையும் அகற்றி சீர் செய்வதும் நோயுற்ற வருக்கு மருந்து கொடுப்பதும் ஈகையே, தமக்கு ஒருவர் செய்த தீமையை மறந்து மன்னிப்பதும் ஒருவகை ஈகைதான். எல்லோரும் இறைவன் தோற்றம்தான், ஆனால் விழலுக்கு நீரிறைத்தால் நேரமும் பொருளும்ஆற்றலும் வீணாகிவிடும். சமயத்திற்கும், சமுதாய நிறுவனங்களுக்கும் கொடுப்பது நல்லது தான், ஆனால் அவற்றிலும் அசல் எது போலி எது என்ற அடையாளம் காண வேண்டியிருக்கிறது,
ஈதலை தற்பெருமையின்றி, அமைதியாக செய்ய வேண்டும் கொடுப்பதன் மூலம் ஒரு நிறைவான இன்பம் கிடைக்கிறது என்பதற்காகவே கொடுக்க வேண்டும், ஈகையும் எளிமையும் இதயத்தை தூய்மைப்படுத்தும். கிடைத்ததைக் கொண்டு காலம் தள்ளுகிறவர்கள் கொடுப்பதன் மூலம் நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும், கொடுக்கிற மனமே ஒருவரை உயர்த்துகிறது,அது வெற்றியைத் தருகிறது.
கொடு, கொடாமலிரு
பாத்திரமறிந்து தான் கல்வியை தானம்செய்வார்கள் குருமார்கள். பண்பாளரை இனங்கண்டே பொருளை வழங்குவர் அறிவுடைய செல்வர்கள், கொடுக்கத் தகாதவருகுகு கொடுப்பதால் பயனில்லை, கொடுக்கத் தக்கவருக்கு வழங்காமல் இருந்தாலுமு நன்மையில்லை, என்கிறார் திருமூலர், பாத்திரம் , அபாத்திரம் என்று திருமந்திரம் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பாத்திரம் என்றால் தகுதி, அபாத்திரம் தகுதியின்மை, யார் தக்கவர் யார் தகாதவர் என்பதை அறிந்து வழங்கவேண்டும், பாத்தரம் - தக்காருக்கு தகாதலும், அபாத்திரம் - தகாதருக்கு தகுதலும் பாவமே என்கிறது பழமொழி
எவ்வளவு பொருளாயினும் அன்பு மனத்தோடு , மலர்ந்த முக்தோடு கனிந்த மொழியோடு சிவஞானியர்க்கு வழங்கினால் செல்வம் பெருகும், போகமும் திருவடிப்பேறும் வாய்க்கும், தெரிந்தோ தெரியாமலோ அஞ்ஞானிகளுக்கு வழங்கினால் இம்மையிலும பயனில்லை மறுமையிலும் இன்பம் கிட்டாது, பாடல்: திலமத்தனை பொன் சிவஞானிக்கீந்தால் ...........
நல்லார்க்கு ஈவதால் பயனுண்டு என்கிற திருமூலர் அல்லார்க்கு ஈவதால் பயனில்லை என்பதையும் இங்கே தெளிபடுத்துகிறார், நீங்கள் மலட்டு பசுவிற்கு அக்கறையோடு தீவனமிட்டாலும் அதனிடம் பால் கறக்க முடியாது, ஒழுக்கமும் விரதமும் இல்லாதவர்க்கு ஒன்றை கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை,என்கிறது திருமந்திரம் பாடல்: கோல வறட்டைக் குனிந்து குளகிட்டு.....
யோகத்திற்கானவைகளை அறிந்து அன்பு உடையவர்களுக்கே தானம் செய்யவேண்டும், இதனையே வள்ளுவரும் ஈகை என்னும் அதிகாரத்தில் " வறியார்க்கென்று ஈவதே ஈகை, மற்று எல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து " குறள், பொருள் இல்லார்க்கு கொடுப்பதே ஈகை , மற்றையோருக்கு கொடுப்பன எல்லாம் அளவிட்டுக் கொடுத்து திரும்ப வாங்குவதற்கு சமமாகும் என்கிறார்
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் -
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக