வியாழன், 26 ஜூன், 2014


உண்மையான ஞானிக்கு உடமைகள் இல்லை உண்மையான ஞானியான ஒருவர் தன் உடமைகளாக தனக்கென்று இரு வேஷ்டிகள் இரு துண்டுகள்,ஒரு பிச்சைப்பாத்திரம், தண்ணீர்வைக்க ஒரு மண்குடம் மட்டும் கொண்டு வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப மழித்தலும், நீட்டலும் இல்லாமல் உலகம் பழிக்கும் எந்த செயல்களையும செய்யாமல் ஒரு ஓலை குடிசையில் வாழ்ந்து வந்தார், அன்றாடம் சிவாலயம் சென்று தூய்மை செய்வார், மலர் பறித்து மாலை தொடுத்து மூன்று வேளையும் ஆலயம் தொழுவார், நண்பகலிலும், இரவிலும் வீடுகளில் யாசித்து உண்பார், தர்ப்பைப் புற்களின் மீது படுத்துறங்குவார், மக்களை ஏமாற்றி திரிவது இவருக்கு தெரியாத கலை, இவரைக் காண்பதற்கு அண்டைமாநிலத்திலிருந்து மிக ஆடம்பரமாக வாழ்ந்த ஒருவர் வந்தார், அவரை தம் குடிசைக்குள்வரவேற்று அமரச்செய்தார்,தண்ணீர் கொடுத்து உபசரித்தார், நல்ல அறவுரைகளை கூறினார், இந்த குடிசைக் கண்டு வந்தவர், வியப்படைந்து, " இவ்வளவு எளிமையான குடிசையில் பொருட்கள் எதுவும் இல்லையே " என் கேட்டார், அதற்கு ஞானியார் " உங்களிடம் கூட உடமைகள் ஏதும் இல்லையே " என்றார், உடனே அண்டைமாநிலத்திலிருந்து வநதவர் " இங்கே தங்களைக் காண்பதற்காக விருந்தினராக தானே வந்துள்ளேன் , சிறிது நேரத்தில் சென்று விடுவேன் அதனால் எனக்கு பொருட்கள் இங்கே தேவைப்படவில்லை, எனவே நான் எதுவும் என்னுடன் கொண்டுவரவில்லை "என்றார், இதனைக் கேட்ட ஞானியார் " நானும் இந்த உலகில் விருந்தினராகத்தான் வந்திருக்கிறேன், இங்கேயே நிலையாக இருக்கப் போவதில்லை " என்று பதில் அளித்தார், இவர்களின் உரையாடலின் உட்கருத்து : உண்மைத்துறவிகள் உடைமைகள் வைத்துக் கொள்வதில்லை, கோடி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பவர்கள் போலிவேட தாரிகள் என்பதை நாம் கண்டு கொள்ளவேண்டும், நாம் எதைக் கொண்டு வந்தோம் எது நமது எதை நாம் இறுதியில் கொண்டு செல்லமுடியும்? மேலும் உடைமைகளைத் துறப்பவர்களே உண்மையான துறவிகள் கடமைகளை துறந்து நாட்டிற்கு பாரமாக இருப்பவர் துறவியர் அல்லர், பிறப்பெடுக்கும் அனைவருக்குமே இந்த உலகம் ஒரு சத்திரம் தான், அந்த காலத்தில் கால்நடைப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருந்தது, அதற்காக வேண்டி அங்கங்கே நடைப்பயணம் செல்வோர் தங்கிச் செல்வதற்கு என்று சத்திரங்கள் எனப்படும் தங்குமிடங்கள் கட்டிவைத்தனர், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் அந்த சத்திரத்தில் ஒரிருநாட்கள் தங்கி இருப்பார்கள், பிறகு தங்களின் இருப்பிடத்திற்கு சென்று விடுவார்கள், இந்த உலகமும் ஒரு சத்திரம் தான், நாம் சில வருடங்கள் தங்கி இருப்போம், பிறகு இந்த உலகமாகிய சத்திரத்தை விட்டு போகத்தானே வேண்டும், இதைத்தான் அந்த ஞானியார் இந்த உலகத்திற்கு தான் ஒரு விருந்தினர் என்றார், நூற்றாண்டு வாழ்வோம்என்று எண்ணி வாழ்க்கையை எதிர் பார்த்து நடத்த வேண்டாம், ஆனால் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், என்று எண்ணி இருக்கும்போதே நற்காரியங்களை மட்டும் விரைந்து செய்துவிட வேண்டும் , இந்த உலகிற்கு நாம் விருந்தினராகவே வந்துள்ளோம் உடைமைகளைச் சேர்ப்பதே தொழிலாக வாழ்ந்து விடக் கூடாது என்பதை மனத்தில் கொண்டு வாழ்வோம், வளமும் நலமும் பெறுவோம் திருச்சிற்றம்பலம் - தென்னாடுடைய சிவனே போற்றி - ஓம் நம சிவாய ஓம் நன்றி : தமிழ் வேதம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக