வெள்ளி, 27 ஜூன், 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 எந்தையும் தாயும்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 எந்தையும் தாயும் எம் தாய் எல்லையற்ற மகாசக்தி அவளை உபாசனா சவுகரியம் கருதி, அவள் இயற்றும் தொழிலுக்கேற்ப அல்லது அவர்கள் பிரியத்திற்கேற்ப பேதப்படுத்தி வழிபடுகிறார்கள், அவளே திருமகள் , அவளே கலைமகள், மலைமகள், எல்லாம் மும்மண்டலங்களின் தலைவி, என்பதால் அவள் ஈசனுடன் வேறுபடாதிருப்பதால் திரிபுரசுந்தரி, பிரிப்பின்றி விளங்கி ஐந்தொழில் புரிகிறாள். திரிபுரையே ஓம் எனற பிரணவத்தின் உள்ளொளியாகவும், மந்திரமாகவும், மூர்த்தியாகவும் அவற்றைக் கடந்தும் விளங்குகிறாள என்கிறார் திருமூலர், அவள் பேரழகி, வானவடிவினள், அநேக நிறத்தனள், தன்னைநினைப்பவர் நெஞ்சில் நிலைத்தருப்பவள், மகேசுவரனின் சக்தியாய் கருநிறம் காட்டுவாள், உலகத்தை காக்கும் செவ்வொளி வீசுவாள், அன்புடன் தழுவி அறிவை வழங்குவாள், திரிபுரை - முப்புரநாயகி பேரழகி என்பதால் அவள் சுந்தரி, வானவடிவினள் என்பதால் அந்தரி, நினைப்பவர் நெஞ்சில் நிலைத்திருப்பதால் அவள் மனோன்மணி. அவளே இராசேசுவரியாய் சிவந்த பட்டுடுத்தி மார்பில் கச்சணிந்து காலில் சிலம்பணிநது மலர் அம்பும்அரும்பு வில்லும் தாங்கி அங்குச பாசத்துடன் கரிய நீல நிற குண்டலத்துடன் காட்சியளிப்பாள், தியானத்தில் வசியமானவள். அன்னை திருபுரை உயிர்கள் ஈடேறவேண்டும் என்பதற்காகவே உயிர்களுடன் கலந்து நிற்பாள், அவள்மாசற்ற அழகு வாய்ந்தவள், ஆதியானவள் ஞானச்சுடர் வீசும் கண்கள் அவளுடையவை. எத்திக்கிலும்இருப்பவற்றை தன்பக்கம் இழுக்கும் ஈர்ப்பு தன்மை கொண்டவள், அவளை சுத்தவித்ததியாதேவி என்பார் சித்தர்கள். அவளை யறியா அமரரு மில்லை அவளன்றி செய்யும் அருந்தவ மில்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி ஊர்புகுமாறறியேனே. என்கிறார் திருமூலர் ஒளிமண்டலமான தேவியை உணராத தேவரில்லை. அவளை முன்னிட்டு கொள்ளாது தவமேதுமில்லை, படைத்தல்,காத்தல், அழித்தல் அருளல், மறைத்தல் என ஐந்தொழில்கள் செய்யும் பிரமனாதி ஐங்கடவுளாரலும் ஆவது ஒன்றுமில்லை. அவளை அறியாது திருவடிப் பேறு காணும் வழியும் இல்லை. அவள் பரவெளியில் ( வான்கடந்து) விளங்குவது பராசக்தி, எத்தனை வடிவெடுத்தாலும், எத்தனை பெயர் படைத்தாலும், அவளோடு சிவனோடு இணைந்தே செயல்படுபவள், அந்த மகாசக்தியின் திருவுளப்பாங்கில் இயங்குகின்ற அன்ட சராசங்களும் அனைத்து உயிரினங்களும், அவளை அறிவ வடிவமாகவும் ஆனந்த வடிவமாகவும் ஞானியர் காண்பர். அவள் யாவற்றையும் தாங்கி நிற்கும் ஆதிபராசக்தி. ஊழிதோறும் புவன்ம் காத்து புண்ணியம் தருபவள் அவளே. சித்தர்கள் அவளுடைய நடப்பாற்றலுக்காக பரை என்பர் வனப்பாற்றல் கண்டு பராபரை என்பர். அந்த கரணம் நான்கையும் ( மனம்,புத்தி, சித்தி, அகங்காரம்,) செயல்பட செய்வதால் ஸ்ரீவித்யை என்றும், மாறா இளமை கொண்டதால் அவள் வாலை " வாலையடி சித்தருக்குத் தெய்வம்" என்பார்கள் உச்சிட்ட தளத்தில் விளங்கும் பராசக்தி மனோன்மணியை உள்ளத்துள் நிறுத்தும் வழியை அறிந்தவர் எத்தனைபேர்? நான் பற்றற்றவனாக இருந்தேன், எனது இயல்பு நோக்கி அன்னை எனக்கு பக்குவமளித்து சிவகதி காட்டினாள்,தன் ஒளியில் என்னை ஒன்றாக்கி கொண்டாள் என்கிறார் திருமூலர் அவள் பிணவத்தி, ஐந்தொழிலுக்கும் தலைவி பச்சை நிறத்தவள், ஐங்கடவுளரும் ( சதாசிவர்,மகேசுவர், உருத்திரர், திருமால், நான்முகன், ) அவளுடைய அம்சம், ஹ்ரீம் என்கிற மந்திர பீஜத்தில் அவள் வீற்றிருக்கிறாள்,என்கிறது இந்த பாடல் ஒங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை யுடையவள் ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே, அன்னையை பூசிக்கும் வழிமுறை: வாசமலர்களும் வழிபாடு செய்ததற்கான நறுமணப் பொருட்களும் புதிய ஆடைகளும் , இசை முழக்கமும் திருவைந்தெழுத்து மந்திரமும் கொண்டு செய்யப்படும் பூசையை அவள் விரும்புவாள், தையல் நாயகியான தலைவியை பணிந்தால் பிறவிப்பணி அண்டாது, என்னை இயக்குகின்ற இணையற்ற தலைவி அவள் தன்னை இயக்க ஒருவரில்லாதவள், என்னுடைய ஆணவம், கன்மம், மாயை, அகற்றி என்னை விரும்பத்தக்கவனாய் ஆக்கி வைத்தாள் என்கிறார் கீழ் கண்ட பாடல் மூலம்: இனியதென் மூலை இருக்கும் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனன் சார்வு படுத்து நனிபடு வித்து உள்ளம் நாடி நின்றானே. தனக்கு முற்பட்டதாய் ஒன்றும் இல்லாமையால் அவள் தொன்மையானவள், அனைத்துக்கும் தானே காரணமாக, தன்கொ காரணம் இல்லாதிருப்பவள், ஒளிகளுக்கு மூலமான பேரோளி, இன்பத்தில் பேரின்பம், அவள் அமைதியையும் சிவசிந்தையையும் அருள்பவள், அந்த மங்கல குணமுடைய இறைவி என்னுள் பிரிப்பின்றி விளங்குகிறாள். பாடல்: ஆதி அனாதி, அகாரணி,காரணி............. படிப்பறிவால் உண்டாகும் அகந்தை நீக்கி பற்றக்களை அகற்றிட, முதல்வியின் செவ்வொளி வீசும் கருணை முகம் நம்முன் விளங்கி நிற்கும் ஆன்மாக்களை பக்குவம் செய்யும், பராசக்தியை தரிசிப்பவர்க்கு முகப்பொலிவு உண்டாகும், நாடாளும் மன்னரும் வசமாகி நிற்பர், நாயகியின் திருவடியை பற்றினால் தெளிவு உண்டு. இன்பமும் துன்பமும் கலந்த நடைமுறை வாழ்வில் நாளும் இன்பமே விளைய நல்லருள் புரிவாள் அவள், காமம், வெகுளி மயக்கம் என்கிற மும்மலங்களை அவளால் நீங்கும் . அவளை வணங்கினால் உள்ளத்தில் மெய்பொருள் விளங்கும், மண்ணிலும் நீரிலும் காற்றிலும், ஒளியிலும் வானிலும் கண்ணின் மணியிலும் உடலிலும் அவளை காணலாம், அவள் வழியிலேயே நாம் செயல் படுகிறோம், சக்தியின் வடிவம் தாய், தாயாயிருப்பது சக்தி. எங்கும் வியாபித்திருப்பது வானம் அவளே, தானே அனைத்து பொருளாகி தன்னுள் அனைத்தையும் அடக்கியிருப்பவள் அகில அண்டங்களையும் அவளே ஆழ்கிறாள், எனவே யாருக்கும் தாயாக ஆனாள் சக்தி திருசிற்றம்பல் மேலும் தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக