திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 15 சைவ சாதனங்கள்
சரியை, கிரியை யோகம் ஞானம் இவை இறைவனை அறியவும் அடையவும் உதவும் சாதனங்கள்.
சரிளையாளர்கள் நாடு நகரந்தோறும் கோவில்களைத் தேடிச் சென்று இறைவனை வணங்குவர்,, அந்நிலையில் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் அவர்களுடைய நெஞ்சத்தையும் தனது கோயிலாக்கி கொள்வார்.
கிரியை வழியில் நிற்பவர் திருநீறு, ருத்ராட்சம் முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவவேடம் தாங்கி நிற்பர், இவர் பூசை முறைகளை செய்து வருவர்,
இவ்விரண்டும் புறத்தே வழிபடுமட முறைகள், யோகியரும் ஞானியரும் அகத்தே வழிபடும் முறைகளை பயன்படுத்துவர்.
வண்ண மலர்களையும், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களையும் சார்த்தி வணங்கினாலும், உடல் பற்றை விட்டு தியானிப்பவர்க்கன்றி,, தேன்போல் இன்பந் தரும் உச்சித் தளத்திருவடியை சேரமுடியாது என்கிறது திருமந்திரம், பாடல்: கானுறு கோடி கடிகமழ் சந்தனம்..............
யோகம் என்பது பொறிகளை அடக்கி, சித்தத்தை பிரமத்தில் நிறுத்துதல் ஆகும், கட்டுந்தறிபோல் உடலை ஆடாது அசையாது இருக்கச் செய்து, காற்று, மழை, மின்னல், இடி, மோதினும் பற்றிய கருத்தில் மாறாது சிவத்தை அறிபவர் சிவமயம் ஆனவர், பாடல் : நெறிவழியே சென்ற நேர்மையுள் ஒன்றி.................
சிவனானவன் தேவர்களுக்கும், திருமால் பிரமனுக்கும் எட்டாத இடத்தில் இருப்பவன், ஆனால் யோகியால் அவனை அடைய முடியும் எப்படி? சொல்கிறார் திருமூலர்
" பூவினற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவியணைந்த நடுதறியாமே",
பூவினில் பொருந்திய மணம்போல் சீவனுக்குள்ளே சிவமணம் விளந்தது. அசைவற்ற சித்திரம் போல் மனதை சமநிலையில் வைத்து அறியவல்லார்க்கு சிவனை உணர்ந்தறிவது சாத்தியம் இது பாடலின் பொருள்.
ஞானம் என்பது தெளிவு, வீடு பேற்றுக்கான வழி " உலகம் மாயா காரியம் உலகமும் தான் பெற்ற சரீரமும் நிலைபேறுடைய திருவருளால் கிடைத்தன எல்லாம் அவனருள் என்றிருப்பது ஞானம், நெறியுடைய ஞானிக்கு சிரசில் சிந்தையில் அருவி நீர்ச் சலசலப்பு அமைந்திருக்கும், அந்த நீர்த் தொனி பேரருளாளனின் வரவை ஞானிக்கு புலப்படுத்தும் என்கிறது திருமந்திரம் பாடல் : அறிவும், அடக்கமும் அன்பும் உடனே.............
ஞானம் பெற்றவன் நல்வினையினால் உண்டாகும் நற்பயனையும், பாவத்தால் விளையும தீய பயனையும் கடந்து நிற்பான், அவன் மும்மலக் குற்றங்கள்( ஆணவம், கனமம், மாயை, ) அவனே சித்தன், சிவமுத்தன், பாடல் : நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்.............
ஞானத்தில் சிறந்தவனே மாமனிதன் என்கிறார் திருமூலர்
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டிலில்லை
ஞானத்ததின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நாரின்மிக் காரே. "
ஞானமே சிறந்த அறநெறி ஞானத்தைக் கொடுக்காத சமயம் ஏற்றதல்ல ஞானத்ரில் திளைப்பவரே மக்களில் மேலானவர்
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாயம் ஓம்
மேலும் பல காண:
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக