திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 26
மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல்
சாத்வீகக் குணத்திலொன்று மவுனம் , மவுனத்தில் ஒடுங்கும் நிலை மோன நிலை சமாதி . சிவநிலையில் பொருந்தியவர்கள் இருந்த இடத்திலேயே உலகத்தை அறியும் திறனை பெறுகிறார்கள். எப்போதும் சிவத்துடன் தொடர்புடையவர்க்கு ஏது கவலை? குரு உணர்த்துவதை சீடன் உணர்ந்தபோது தன் சுய அனுபவத்தில் அவன் சிவத்தை காண்கிறான். பாடல் : உணர்வுடையார்கட்கு உலகமுந்தோன்றும்...................
மோனத் தவத்திருப்பவர் இங்கு மீளப் பிறப்பதில்லை, அடுத்தவர்க்கு அருள்புரியும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. சிவசக்தியோடு பொருந்திய நிலையில் உலகை மறந்தாலும் தன்னறிவுடன் இருப்பார்கள். பாடல் : மறப்பது வாய்நின்ற மாய நன்னாடன் ...............................
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்பார்கள், நீங்கள் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த முடியாது. காட்சி அனுபவத்தை அதிலும் இறைக் காட்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மெய்யுணர்வு மெய்யின்பம்.
முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.
உண்மையான சிவானந்தம் புறத்தேயுள்ள கண்களால் காணப்படுவதல்லை. அது அறிவுக்கண் கொண்டு அகவுணர்வில் காண்பது . தாயானவள் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை தன் மகள் கேட்கிறாள் என்பதற்காக எப்படி வாய்விட்டு சொல்லமுடியும்? முடியாது. அதுபோல் சிவானந்தம் என்பது அவரவரும் தமது சொந்த அனுபவத்தில் அறிய வேண்டியது.
நீரில் கரைந்த உப்பும் நீராகிவிடுகிறது, சீவன் சிவனாவதும் அப்படித்தான், தன்னை போலவே மனிதன் ஆன்மாவையும் தகுதியுடையதாக்கி விடுகிறது சிவம்.பாலப்பருவத்துப் பெண் பதிென்ட்டு கடந்தும் மடந்தை யாகிறாள். பக்குவம் இன்னொரு கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. சீவனும் அதுபோல் உலகானுபவம் பெற்ற நிலையில் அவனுடைய பக்குவம் காரணமாய் சிவன் சீவனிடம் விள்ங்கி நிற்கும். நான் அடைந்த ஆன்ம அனுபவத்தால் என்கு சமாதி பயிற்சியும், தேவரயற்றதாயிற்று. என்னை விட்டு மாயை நீங்கியதால் சிவம் என்கிற பேரொளியில் என்னால் மூழ்க முடிந்தது.
சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன் அவனுடன் ஒன்றானேன். மோன சமாதியின் விளைவாக என் உடல் பற்று அகன்றது. பொருள் பற்றும் உடலின் வேட்ையுயம் நீங்கின, உயிர் மீதிருந்த ஆசையும் கெட்டது, மோனசமாதி என்பது சிவசிந்தனையாக இருப்பதின்றி வேறேனன? என்கிறார் திருமூலர்.
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்றுள்ளே உணர்ந்தேன் சிவசக்தி
ஒன்றி நின்றுள்ளே உணர்நதேன் உணர்வினை
ஒன்றி நின்றேபல ஊழிகண்டேனே.
மோனநிலை தவத்திலிருந்து சீவனும் சிவனும் இணைந்து கொள்ளும் நிலையை நான் அறிந்தேன், என்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி எண்ணற்ற யுகங்களை நான் கண்டேன் என்கிறார் சித்தர்.
ஓம் நமசிவாயம் -- திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக