திருச்சிற்றம்பலம்
நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே!
திருவாசகம் (Thiruvasagam)
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
தேடித் திருவடி வந்து சேர வழிகாட்டுகிறது திருவாசகம் .
சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.
இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய சிவனைநாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல்,அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல்,அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல்,இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது. ”திருவாசகம் வேறு, சிவன் வேறு”,என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். “திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், “அழுதால் உன்னைப் பெறலாமே!”
மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு:
1.திருவாசகம்;
2. திருக்கோவையார். ...
சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது யோக ஆகம நெறியே. ஆகும்மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் ஞான யோகி என்பது புலனாகிறது. சிவபுராணத்தின் ஆரம்ப வரிகளிலேயே அவர் “கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,” என்று ஆகமத்தைச்சிறப்பித்து விடுகிறார்.. வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது.–தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”/கட்டாயம்படியுங்கள் பரப்புங்கள்.
தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும்-மனிதன் இறைவனுக்குச் சொன்னதுதிருவாசகம்
Sivapuranam Vilakkam
A-மாணிக்கவாசகர் திருவாசகம்-Thiruvasagam
http://www.youtube.com/watch?v=uWBEkIy1NsE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக