திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 23
புலன்களுக்கு போடணும் கடிவாளம்
புலன்கள் ஐந்து அவை அடைகிற அனுபவங்களுக்கு அளவே இல்லை, அவற்றால் உண்டாகிற விளைவுகளுக்கும் கணக்கே இல்லை.
கண்போன போக்கில் மனம் போகக்கூடாது என்பார்கள், வாயில் வந்ததைப் பேசக்கூடாது காதில் விழுந்ததை நம்பக்கூடாது என்றெல்லாம் பெரியோர்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள், அதைத்தான் ஐம்புலனடக்கம் பஞ்சேந்திரிய ஒழுக்கம் என்பது, சாத்துவிகக் குணத்தில் ஒன்று ஐம்புலங்களையும் அடக்கி வைத்தல், ஐம்புலங்களின் நுகர்ச்சியை பஞ்சேந்திரியாநுபவம் என்பர், பொறிகள் ஐந்து அவை கண்,காது, தோல், நாக்கு மூக்கு என்ற புலன்கள் அவற்றின் அறிவாகும் பார்த்தல், கேட்டல், ஸ்பரிசித்தல, ருசித்தல், முகர்தல், (ஒளி,ஒசை, ஊறு, சுவை, நாற்றம்) புலன்களின் இயக்கம் ஒருவனுக்கு நன்மையும் செய்யும தீமையும் செய்யும், அது அவற்றின் செயலைப் பொறுத்தது.
மனிதரின் மாமனிதன் என்ற போற்றப்படுகிறவன் புலன்களை அடக்கியவன்தான் சாதனைகளில் மிகப் பெரிய சாதனை புலனடக்கம், வெற்றிகளில் சிறந்த வெற்றி புலன்களை வெல்வதுதான், " அறிவைப் பயன்படுத்தி பொறிகளை அடக்க வேண்டும், சாப்பாட்டில் ஆசை வைத்தாலும், சம்போகத்தில் ( புணர்ச்சி) பெருவிருப்பு கொண்டாலும் ஆன்ம வெற்றியை அடைய முடியாது" என்கிறார் திருமூல்ர்
விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள், ஆனால் மதியை மறைக்கும் மயக்கத்தை ஏற்படுத்தி அதைச் செயல்படாதவாறு தடுக்கும் விதி, அதனால்தான் விதி வலியது என்கிறார்கள், புலன்கள் செருக்குற்று பாதிப்பை ஏற்படுத்துவதும் அப்படித்தான். புலன் மயக்கம் கூடாது. புலனை வென்றவன் முனிவன், புலன் வழி சென்றவன் சராசரி மனிதன். ஐம்பொறிகளும் துள்ளி குதிக்கும் கன்றுகளாயிருந்தால் கயிற்றால் பிணைத்து அடக்கலாம், அவை மதங்கொண்ட யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். புலன்களின் விருப்பத்தை கட்டுபடுத்த என்ன வழி பொறிகளை தறிகெட்டு போகாமல் காப்பது எப்படி? பிரணவமான திருவைந்தெழுத்தை ஒதியிருப்பதே பாதுகாப்பு என்கிறது திருமந்திரம். பாடல்: ஐந்தில் ஒடுங்கில்.......
பேசாத வார்த்தை உங்களுக்கு அடிமை பேசியவார்த்தைக்கு நீங்கள் அடிமை, என்பார்கள். நிறையப் பேசுவதால் என்ன பயன்? சொற்கள் விளைவுடையவை விளைவறிந்து பேச வேண்டும், பேசிய வார்த்தைகளும் இழந்த காலமும் மீண்டும் பெற முடியாத முத்துக்கள்.
பொறிகளை இயக்குவது மனம் மனந்தான் அவற்றை உந்துகிறது. சிவத்தியானத்தில் மனதை அடக்கினால் இந்திரியங்கள் ( பொறிகள்) அடங்கும், பொறிகள் வழியே மனம் போகாமலிருக்க நல்ல கருத்துடைய நூல்களை கற்க வேண்டும். " தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பர் பெரியோர், அவை செயலின் விளைவேயாகும், சிவசிந்தையாயிருந்தால் பொறி வழி போகிற நிலையிருக்காது. உடலுக்கு ஒன்பது வாசல் என்றால் மனதுக்கு ஒராயிரம் வாசல், ஒவ்வொரு எண்ணமும் ஒரு வாசல் தான், எந்த வழி போவது என்பதைவிட எந்த வழியிலும் போகாமல் இருப்பதே சிறப்பு. ஞானியரும், யோகியரும் அதைத்தான் செய்கிறார்கள். மனமிறக்க வாயேன் பராபரமே என்பார் தாயுமானவர் " மனவழி சென்று உடலின் இன்பத்தை நாடினால் குற்றங்கள் உண்டாகும், வாழ்க்கை நிம்மதியை இழக்கும், உடலின்பத்தை நாடாதிருந்தால் உள்ளம் சிந்தனையற்று ஆனந்தத்தில் நிலைபெறும். பாடல்: எண்இலி இல்லி உடைத்து அவ்இருட்டடை ............
சகஸகரத்தலத்தில் விளங்கும் சிவனை வணங்கி தறிகெட்டோடும் புனன்களை அறிவால் மீட்டிடுங்கள். பெருமானின் திருமேனியை மனதில் பொருத்தி கொண்டால் பிறிதொன்றில் கவனம் செல்லாது. அப்போது உள்ளத்தில் ஊறும் அமுதத்தை துய்த்திடுங்கள்"
நீங்கள் உலகியல் நாட்டம் கொண்டு பேசுகிறவரை உளளொளி காண இயலாது போகும் சொல்லற்றிரு! சும்மாயிரு! என்பது அதற்கான சொன்ன வார்த்தைகள், அதற்காகத்தான் பொறிகளின் இயல்பை அறிந்தவரே இருளை கடந்து ஒளியை காண்கிறார்கள்.
அதைவிடு, இதைவிடு, என்பது துறவறம், இல்லறத்தான் ஐம்பொறிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் போதும், எதையும் விடுகிற கட்டாயம் இருக்காது, இறைவனை பற்றியிருங்கள். இலலையேல் பற்றகள் உங்களை நாலாபக்கமும் ஐந்து பக்கங்களிலும் (ஐந்து புலன்கள் வழி) கவர்ந்து சென்றுவிடும், எனவே ஐம்புலன் அடக்கம் அருளைத் தரும்
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஒம்
மேலும் ஆன்மிகத்தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக